sivathambi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
sivathambi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளம்: பேராசிரியர் வீ. அரசு புகழாரம்

கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளம்: பேராசிரியர் வீ. அரசு புகழாரம்

First Published : 07 Aug 2011 04:35:31 AM IST


புதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் சனிக்கிழமை நடந்த விழாவில் பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவு சிறப்பிதழை வெளியிட்ட பேராசிரியர் வீ.அரசு (வலமிருந்து
புதுச்சேரி, ஆக. 6: இலங்கை தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் சிந்தனைகள் சமூக வரலாற்றில் புதிய அடையாளத்தைத் தந்துள்ளன என்று சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை பேராசிரியர் வீ. அரசு கூறினார்.  புதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர் பேசியது:  தமிழ்நாட்டில் சிவத்தம்பியை நினைவு கூறும் வகையிலான நிகழ்ச்சி எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரியில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவத்தம்பி ஆராய்ச்சியாளராக இருந்தாலும் அடிப்படையில் ஆசிரியர். ஆராய்ச்சியாளராக யார் வேண்டுமென்றாலும் வர முடியும். ஆனால் ஆசிரியர் பணி என்பது எளிதான வேலையல்ல.  சங்க இலக்கியம் உள்பட பல்வேறு தடங்களில் பேராசிரியர் சிவத்தம்பியின் சிந்தனைகளை வாசித்தால் 5 ஆயிரம் ஆண்டு கால சமூக வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். இவரது சிந்தனை அடிப்படையில் தென்னிந்திய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். தென்னிந்திய வரலாறு வட இந்திய வரலாற்றில் இருந்து வேறுபட்டது.  சிவதம்பியின் சிந்தனை அடிப்படையில் தென்னிந்திய வரலாறு புவியியல், பண்பாடு, மொழியியலில் புதிய புரிதலை உண்டுபண்ணியது. சங்க இலக்கியத்தில் அகம், புறம் என்ற மரபு, தமிழ்க் கவிதை மரபு- பக்தி, பாசுரமாக எப்படி இருந்தது, அருணகிரிநாதரின் சந்த மரபு, தாயுமானவரின் பாடல்கள் உள்ளிட்ட தமிழ்ச் சமூக வரலாற்றின் பரந்த நீண்ட வரலாற்றை பதிவு செய்துள்ளவர் சிவத்தம்பி. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக தந்தை பெரியாரின் பங்களிப்பு இருக்கிறது. அது போன்று தமிழில் வேறுபட்ட கலைத்திட்டம், பாடத் திட்டம், கலைச் சொல்லாக்கத்தில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு இருக்கிறது. அவர் தமிழ்ச் சமூகத்துக்குக் கொடை வள்ளல். மனித உறவைப் போற்றிய மாமனிதர் என்றார் அரசு.  சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பெ. மாதையன் பேசுகையில், பல்வேறு தமிழ் கலைச் சொற்களைச் சமூக, பொருளாதாரப் பின்புலத்தோடு ஆராய்ந்தவர் பேராசிரியர் சிவதம்பி. பல்வேறு ஆய்வுகளை முறையாகப் பிற துறைகளோடு ஒப்பீட்டு ஆய்வு செய்தவர். பல்வேறு சமூகப் பரிமாணங்களின் இயங்குத் தளங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் என்றார்.  சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழியியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் பேசுகையில், இலக்கிய ஆய்வு என்பது இயற்பியல் ஆய்வைக் காட்டிலும் கடினமானது. அந்த அளவுக்கு ஆய்வு அணுகுமுறையைத் தமிழியல் ஆய்வில் பின்பற்ற வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியின் இலக்கிய, இலக்கண, மொழியியல் ஆய்வுகளில் சமூகவியல் கண்ணோட்டம், அறிவியல் கண்ணோட்டம் இருக்கும் என்றார். புதுச்சேரி பேராசிரியர் க. பஞ்சாங்கம் பேசுகையில், தமிழ் சமூக வரலாற்றை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. பேராசிரியர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு வெளியே எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் சிவத்தம்பி என்றார்.  புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பக்தவத்சல பாரதி பேசுகையில், சமயம், சமூகம், பண்பாட்டுகளின் பின்புலமாக இலக்கியத்தைப் புரிந்து கொள்ள வைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. தாய்வழி சீதன மரபு தமிழகத்தில் இப்போது இல்லை. இலங்கையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் இருக்கிறது என்றார்.  பேராசிரியர் மே.து. ராசுகுமார் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். எழுத்தாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரவிக்குமார் தலைமை வகித்தார். மணற்கேணி இதழ் கா. சிவத்தம்பியின் சிறப்பிதழாக விழாவில் வெளியிட்டது. பேராசிரியர் வீ. அரசு வெளியிட எழுத்தாளர் இமையம் பெற்றுக் கொண்டார்.  சென்னையைச் சேர்ந்த டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர்கள் விஜயவேணுகோபால், ராஜ்கெüதமன் ஆகியோர் பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பான மற்றொரு நூலின் படிகளைப் பெற்றுக் கொண்டனர். 

வியாழன், 14 ஜூலை, 2011

உலகத் தமிழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியவர் கார்த்திகேசு சிவத்தம்பி

உலகத் தமிழர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியவர்
கார்த்திகேசு சிவத்தம்பி

First Published : 14 Jul 2011 01:03:57 AM IST


கார்த்திகேசு சிவத்தம்பி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன்.
ஈரோடு, ஜூலை 13: உலகத் தமிழர்களுக்கு ஆய்வுலகின் உந்து சக்தியாக விளங்கியவர் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். உலகத் தமிழறிஞர் என தமிழர்கள் அனைவராலும் போற்றப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த கார்த்திகேசு சிவத்தம்பி கடந்த 6-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் கடந்த 10ஆம் தேதி வரை வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்றார். அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் பேசியது:தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்கள் தமிழை ஆய்ந்தறிவதென்றால், தமிழின் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தமிழ் மொழியை இலக்கணம், இலக்கியம், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தத்துவம், வரலாறு என அனைத்து அம்சங்களோடும் பொருத்தி வளப்படுத்தியவர். தமிழகத்தில் பா.ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன், வானமாமலை போன்றோருக்கு இலங்கையிலிருந்த கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்றோரின் தொடர்பும் தாக்கமும் இருந்துள்ளது. அதேபோன்று சிவத்தம்பி போன்றோருக்கு தமிழகத்தின் இத்தகைய தலைவர்கள், அறிஞர்களின் கருத்துகள் வளம் சேர்த்துள்ளன. பல்கலைக்கழகங்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலம் அமைத்தவர்.பொதுவுடைமைக் கொள்கையில் தீராப் பற்றுக் கொண்டவர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு உரிய சிவத்தம்பிக்கு இலங்கையில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களும் மறைந்த நாளில் இருந்து இறுதி அஞ்சலி நடைபெற்ற நாள் வரை சிறப்புக் கட்டுரைகளையும், அழுத்தமான தலையங்ககளையும் வெளியிட்டு, அழியாப் புகழ் படைத்தவர் என்பதை உலகறியச் செய்துள்ளன. சிறந்த அறிஞராக விளங்கியதோடு பண்பும், பாசமும் மிக்க நல்ல மனிதராக விளங்கி சமுதாய மாற்றத்திற்கு உந்து சக்தியாகவும், தமிழ்மொழி உலக நாடுகளை நோக்கி பயணிக்க வழி வகுத்தவர். அவரது வழியில், உலகத் தமிழர்கள் அனைவரும் சென்று தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்றார்.

வியாழன், 7 ஜூலை, 2011

Scholar Sivathambi expired: மூத்த தமிழறிஞர் கார்த்திகேசு சிவதம்பி காலமானார்

தமிழ் ஈழ ஆதரவு நிலையால் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனதுபோல் அந்த நிலையில் இருந்து திசை மாறியதால் செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெற்றவர். காலத்தின் கோலம் இவ்வாறிருப்பினும் சிறந்த  இலக்கியத்திறனாய்வாளர் என்ற முறையிலும் சங்கத்தமிழில் புலமை மிக்கவர் என்ற நிலையிலும்  இவரது மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில்  இரங்கலைத் தெரிவித்துக்  கொள்கிறேன்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

 
 
 
மூத்த தமிழறிஞர் 
கார்த்திகேசு சிவதம்பி காலமானார்

First Published : 07 Jul 2011 03:28:10 AM IST


சென்னை, ஜூலை 6: இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தமிழறிஞரும், இலக்கிய விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி (79) கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.  அவருக்கு மனைவி ரூபாவதியும், மூன்று மகள்களும் உள்ளனர். இவர் சங்க இலக்கியம் முதல் இப்போதைய தமிழ் சினிமா வரை பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழின் மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர்.  1932-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் "பண்டைத் தமிழகத்தில் நாடகம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அவரது ஆய்வுகள் "பலதுறை சங்கம ஆய்வு' என்ற முறையில் அமைந்திருக்கும். பல அறிவுத் துறைகளின் துணைகொண்டு ஒரு கருத்தை நிறுவுவதில் வல்லவர்.  "தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி', "பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்', "மதமும் மானுடமும்' "தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்', "இலங்கைத் தமிழர் யார், எவர்', "தொல்காப்பியமும், கவிதையும்' "தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.  சென்னைப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் கௌரவ பேராசிரியராக இருந்தார். உலகத் தமிழ் மாநாடு உள்பட பல்வேறு மாநாடுகளில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.  கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டின் மிகப்பெரிய விளம்பரமாக அவரது பங்கேற்பை அப்போதைய தமிழக அரசு செய்தது. இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்.  இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது, அமைதிக் குழுவில் இடம்பெற்றிருந்தார். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
கருத்துகள்

ஈழத் தமிழர்கள் ரத்த ​வெள்ளத்தில் மிதக்கும் ​போதும், தமிழச்சிகள் கூட்டுப் பாலியல் ​கொடு​மைக்குள்ளாக்கப்பட்டு பிணமாக்கப்பட்ட​போதும் தமிழ்த் தா​யை வாழ​வைக்கும் ​​பொருட்டு ​​கோ​வை ​செம்​மொழி மாநாட்டில் கலந்து ​கொண்டு, க​ருணாநிதி​ பரிவாரத்​தை வாழ்த்திய கார்த்தி​கேசு கருணாநிதி தம்பி மரணமுற்றதற்காக வருந்துகி​றேன். ஜனார்த்தனன்
By ஜனார்த்தனன்
7/7/2011 4:56:00 PM
பட் கீப் சிலேன்ட் ஒன முல்லிவைக்கள் படுகொலை ஜோஇன் ஹான்ட்ஸ் வித் அண்டி பாமில் போர்செஸ்
By க.vijayakumar
7/7/2011 11:07:00 AM
அனைவரின் எதிர்ப்பையும் மீறி தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்காக கலந்து கொண்டார் சிவத்தம்பி . ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை . கருனாநித்யிடம் இருந்து இன்னும் இரங்கல் வரவில்லை. கருணாநிதி இரங்கல் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
By செந்தில்
7/7/2011 10:11:00 AM
அனைவரின் எதிர்ப்பையும் மீறி தமிழ் செம்மொழி மாநாட்டில் கருணாநிதிக்காக கலந்து கொண்டார் சிவத்தம்பி . ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை . கருனாநித்யிடம் இருந்து இன்னும் இரங்கல் வரவில்லை. கருணாநிதி இரங்கல் தெரிவிப்பார் என்று நான் நம்பவில்லை.
By செந்தில்
7/7/2011 8:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 24 நவம்பர், 2009

சிரிப்புக்குள்ளாகியுள்ள செம்(மறி) மொழி மாநாடும் சிக்கலில் மாட்டியுள்ள சிவத்தம்பியும்: சங்கிலியன்

எழுதியவர்பகலவன் on November 23, 2009
பிரிவு: செய்திகள்

sivathampiஈழத்தமிழினத்தின் பாரிய அழிவின் பங்காளி என்ற பட்டத்திற்கு முழுமையான உரித்துடையவர் என்று உலகத் தமிழர்களினால் சூட்டப்பட்ட தமிழ் வளர்தத (தமிழால், தனது குடும்ப அரசியல், பொருளாதாரம், முதல்வர் பதவி என்பவற்றில்| தன் நிலைய வளர்ததுக் கொண்டவர்) தமிழக முதல்வர் மு.கருணாநிதி உலகத்தமிழர் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை எப்படியாவது நடத்திவிட வேண்டுமெனப் பகீரதப் பிரயத்தனம் செய்து காய்நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

தமிழால் தன்னை வளர்ததுக் கொண்டவர் என்ற தனித்துவமான முத்திரையை மேலும் ஒரு முறை அழுத்தமாகப் பதிவுசெய்துகொள்ள அவர் மேற்கொண்டுள்ள மற்றுமோர் முயற்சி இதுவாகும்.

தமிழை நூலாகக், கலையாக, கவியாக, மேடைப் பேச்சாக, அரசியலாக விற்று தன்னை வளர்ததுக்கொண்ட (செல்வம் நிறைவாகச் சம்பாதித்த – திருமிகு) முத்துவேலு கருணாநிதி அவர்கள் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட வயது முதிர்நதவர் என்பதைச் சுருக்கமாகத் தமிழ் வளர்தத பெரியார் என்ற சொல்லும்போது தவறாக உலகத் தமிழினம் தமிழைக் கருணாநிதி வளர்ததார் என்ற தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என அன்னை தமிழின் பெயரால் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தனது முதல்வர் பதவிக் காலத்தை வளர்ததுக்கொள்ள தமிழை மட்டுமல்ல தமிழர்களின் தன்மானத்தையும் விற்று தனித்துவத் தலைவராகி விட்டார். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதுபோல் மத்திய அரசிடம் மடிப்பிச்சையேந்தி பதவி வேட்டையாடியதும், அதை உலகத் தமிழினத்தின் கண்களிலிருந்து மறைக்க தற்பொழுது உலகத்தமிழ் செம்(மறி) மொழி மாநாடு ஒன்றினை நடத்துவதும் கண்டு உலகத் தமிழினம் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றது.

அதுமட்டுமல்ல தன்னை வளர்கக தழிழை மேலும் விற்பது போன்று 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவரகள் இலங்கையின் சிங்கள கடற்படையினரால் கச்சதீவுக் கடலில் வைத்து நாய்களைவிடக் கேவலமாக நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுச் சாகடிக்கப்பட்தோடு கோடிக்கணக்கான பெறுமதியுள்ள அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, சின்னாபின்னப்படுத்தப்பட்டது.

அதற்காக இலங்கை அரசை எதிர்தது ஒருசொல்தானும் கேட்காது, அழிக்கப்பட்ட அந்த அப்பாவி மீனவர்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும் ஈடாக கேட்டிருப்பது, தன்னை வளர்ககும் தனியான திட்டத்திற்கு அவர் இலங்கை அரசைக் கேட்டிருப்பது, தள்ளாத வயதில் உள்ள ஈழத்தமிழ் அறிஞர் சிவத்தமிபி அவர்களை அரசு பலாத்காரமாக அவரது செம்(மறி) மொழி மாநாட்டிற்கு அனுப்பிவைக்கச் செய்வதுதான்.

தனது நாட்டில் பிறந்தவர்களாயிருந்தும், தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால், கோடிக்கணக்கான சொத்துக்கள் அறுநூறுக்கு மேற்பட்ட உறவுகளின் உயிர்கள், பல்லாயிரக்கணக்கான உறவுகள் அடிபாட்டிற்குள்ளான அவலங்கள் அனைத்தையும் இலங்கை அரசை ஏன் என்று ஒரு வார்ததை தானும் கேட்காதவரான தமிழால் வளர்நத தலைவரும், அவரது தயவால் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைத்தக்கொண்ட மத்திய அரசும் அவுஸ்திரேலியாவில் ஓருசில சீககிய மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானதும் போர்ககொடி தூக்குகிறார்கள்.

இப்படியே தமிழையும் தமிழ் இனத்தையும் விற்றும், இனஅழிவிற்கு வழிகாட்டியாய், உறுதுணையாய் இருப்பதன் மூலமும் தமிழால் தன்னை வளர்ததுக்கொண்ட பெரியாரின் சேவைகளை எழுதிக்கொண்டு போனால் ஏடுதாங்காத அளவிற்குக் கோடிட்டுக் காட்ட முடியும். ஆனால் அதற்கு நேரம் போதாது என்பதல் ஒருசிலவற்றை ஒப்புவித்திருக்கின்றோம்.

பாவம் உறவுகளின் பேரழிவிற்கு உள்ளாகி மனம் சொந்து நடைப்பிணங்களாக நடமாடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் அறிஞர்களை, இலங்கை பாசிச அரசின் கெடுபிடிகளுடன் தமிழால் தான் வளரும் தாகத்திற்குப் பலியாக்கப் போகிறாரோ (செல்வம் நிறைவாகச் சம்பாதிதத – திருமிகு) திருமிகு முத்துவேலு கருணாநிதி அவர்கள் உலகத் தமிழினத்தை உற்று நோக்கிப் பார்ததுக் கொண்டிருக்கும் உண்மைத்துவம் இதுவாகும்.

- சங்கிலியன்

(Visited 125 times, 125 visits today

வியாழன், 29 அக்டோபர், 2009

செம்மொழி மாநாடு: ஆய்வரங்க பணிக் குழு தலைவராக
சிவத்தம்பி நியமனம்



சென்னை, அக். 28: கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பியும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. "இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை' என இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் சிவத்தம்பி கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின. இந்தச் செய்திகளுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் கருணாநிதி, "செம்மொழி மாநாட்டில் தமிழ் பேரறிஞர்களின் வருகையைத் தடுக்க முயற்சி நடைபெறுகிறது' என்று குற்றம்சாட்டினார். ஆய்வரங்கக் குழுவில்... இந்த நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்க அமைப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து, செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் கா. அலாவுதீன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: ""ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக முனைவர்கள் ஒளவை.நடராஜன், பொன்.கோதண்டராமன் ஆகியோரும், செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன் ஆய்வரங்க அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரம் என்ன? ஆய்வரங்கப் பணிகளை திட்டமிடவும், செயல்படுத்தவும், துணைத் தலைவர்கள், துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும் ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, அனைத்து ஆய்வரங்கப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்'' என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

அறிஞர் சிவத்தம்பி அவர்களிடம் ஒப்புதல் பெற்று அறிவித்து இருந்தார்கள் எனில் மகிழ்ச்சி.ஏனெனில் தான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்ற அவரது அறிக்கைதான் செய்தித்தாள்களில் வந்திருந்தன. இச் சூழலில் அவரைத் தலைவராக நியமித்து ஒரு குழுவை அமைக்க அவர் அதை மறுக்க வீண் களங்கம்தான் ஏற்படும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/29/2009 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 27 அக்டோபர், 2009

செம்மொழி மாநாடு: பேரறிஞர்கள் வருகையைத் தடுக்க முயற்சி- கருணாநிதி



சென்னை, அக். 26: கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தமிழ் பேரறிஞர்கள் வந்து விடாமல் தடுக்க முயற்சி நடைபெறுகிறது என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ""உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு ஈழத்துச் சிவத்தம்பி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் வந்து விடாமல் தடுக்க, இங்குள்ள சிலர் பெருமுயற்சி மேற்கொண்டு, தடுப்பணைகளாகச் செயல்படத் துடிக்கின்றார்கள். அவையெல்லாம், மழை பொழியும் போது மழலையர் மணலைக் குவித்துக் கட்டும் அணைகளாகவே உடனடியாகக் கரைந்து விடுகிற காட்சியைக் காணமுடியும். "ஈழத்துத் தமிழறிஞர் சிவத்தம்பி, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வரப்போவதில்லை' என்பது போன்ற ஒரு சூசகச் செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆனால், மாநாட்டு ஆய்வரங்கப் பணிகளுக்காக முன்னதாகவே வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதில் ஐந்து பொருண்மைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வழங்கியிருக்கிறார். "உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்' என அறிவித்த போது அவர் எழுதிய கடிதத்தில், "மாநாட்டுக்கு கால அவகாசம் குறைவாக இருப்பதாகவும், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்வதற்கு வசதியாக இடைக்காலம் ஒரு ஆறு மாதமாவது அவசியம்' என்று எழுதி இருந்தார். அதை ஏற்றுக் கொண்டுதான், 2010-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை என்று மாற்றி அமைத்து அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
கருத்துக்கள்

மாண்புமிகு முத்தமிழறிஞ்ர் அவர்கள் ஏன்தான் இப்படி அறிக்கை விடுகின்றாரோ தெரியவில்லை. அப்படித்தான் தேர்தலின் பொழுது மகன் அழகிரியைக் கொலை செய்ய மார்க்சிய பொதுவுடைமையினர் திட்டமிட்டுள்ளனர் என் அறிக்கை விட்டார். அறிஞர் சிவத்தம்பி அவர்கள் தெளிவானவர்; திறனாய்வாளர். ஈழத் தமிழர்கள் உணர்விற்குத்தானும் உடன்பட்டவன்தான் என்றும் சில வினாக்களுக்கான விடை தெரிந்தால்தான் மாநாட்டிற்கு வர இயலும் என்று தெரிவித்துள்ளார். செம்மொழிக் கருத்தரங்கமாக இருந்திருப்பின் யாரும் வருவதற்குத் தயங்க மாட்டார்கள். மாநாடு என்ற பெயரில் ஆரவார நிகழ்வுகள் நடைபெறும் என்பதாலும் ஈழத் தமிழர்களின் துயரத்தில் பங்கு கொள்ளாமல் அவர்களை ஒழித்ததற்குக் காரமணானவர்களைப் பாராட்டும் வெற்றித் திருவிழாவாகக் காட்டப்படும் என்பதாலும் தமிழ்நாட்டில் மாநாடு என்றாலே ஆளும் கட்சியின் துதி பாடல் என்னும் தவறான ஒழுகலாறு(கலாச்சாரம்), நிலைத்து விட்டதாலும் மானமுள்ள தமிழனாகத் தம் இன மக்களின் துயரத்தில் பங்கேற்கும் இனமானப்பற்று உள்ளவராத் தெரிவிக்கும் கருத்தைச் சொந்தப் புத்தி இல்லாதவர்போல் கூறுவது தவறல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2009 5:40:00 AM

Mr.Sivathamby should not attend to this Tamil conference.Mr.Sivathamby is a asset for all Tamils,because more than100000 Tamils were killed and 300000 inside the camps in Sri Lanka. THIS IS NOT A GOOD TIME TO ATTEND TAMIL CONFERENCE.

By cholan
10/27/2009 1:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *