திங்கள், 8 ஆகஸ்ட், 2011

இராமேசுவரத்தில் பாசக கடல் முற்றுகை: 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


ராமேசுவரத்தில் பாஜக கடல் முற்றுகை: 
5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

First Published : 08 Aug 2011 12:42:38 AM IST

Last Updated : 08 Aug 2011 03:47:12 AM IST

ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களுடன் உற்சாகமாகப் பேசியபடி வந்த பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
 ராமேசுவரம், ஆக. 7: தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமையை வலியுறுத்தி ராமேசுவரத்தில் பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினர் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.  தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும், மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.  போலீஸாரின் அனுமதி மறுப்பை மீறி நடந்த இப்போராட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5,000-த்துக்கும் மேற்பட்ட பாஜக-வினர் கலந்து கொண்டனர்.  ராமேசுவரம் துறைமுகம் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, கட்சியின் மாநில முன்னாள் தலைவர்கள் லட்சுமணன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு போராட்டத்தை விளக்கிப் பேசினர்.  அப்போது, பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலர் சுப. நாகராஜன் உள்ளிட்டோர் ராமேசுவரம் கடற்கரையில் நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். உடனே, போலீஸôர் விரைந்து சென்று அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.  பின்னர் மேடை நோக்கி வந்த ராதாகிருஷ்ணன், தொண்டர்களிடம் பேசுகையில், நாட்டுப் படகில் கடலுக்குள் சென்று 6 மணி நேரம் கடல் மறியல் போராட்டம் நடத்தியதாகத் தெரிவித்தார்.  உடனே உற்சாகமடைந்த தொண்டர்கள், அவரை தோளில் தூக்கியபடி மீண்டும் கடற்கரை நோக்கிச் சென்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பாஜகவினர் நடத்திய இந்தக் கடல் மறியல் போராட்டம் போலீஸாருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது.  ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் மீனவர்கள் போல கடற்கரை ஓரத்தில் நடந்து வந்ததாகவும் அவர்கள் கடலுக்குள் செல்லவில்லை எனவும் உளவுப் பிரிவு போலீஸôர் தெரிவித்தனர்.  இப்போராட்டத்துக்கு இந்திய, இலங்கை நிரபராதி மீனவர் கூட்டமைப்பு நிர்வாகி யூ. அருளானந்தம், மீனவர் சங்கத் தலைவர்கள் போஸ், பாம்பன் சிப்பிசேசு ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக