drawing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
drawing லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 மார்ச், 2012

drawing while cycling by madurai youth




மதுரை: சைக்கிள் "ஹேண்ட் பாரை' பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், "ஹேண்ட் பாரை' பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர்

மதுரையைச் சேர்ந்த கூடல்கண்ணன், 30. கூடல்புதூரைச் சேர்ந்த இவர், ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதுவது, தலைகீழாக எழுதுவது என ஏற்கனவே சாதித்தவர். கல்லூரிகளில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக உள்ள இவருக்கு, இந்த சைக்கிள் சாதனை ஆசை எப்படி வந்தது? ""எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் அதிகம். தென்மாநிலங்களில் சைக்கிளில் ஊர் சுற்றி வந்து உள்ளேன். சைக்கிள் ஓட்டியவாறு ஓவியம் வரைந்தால் என்ன? என சிந்தித்தன் விளைவுதான், இன்று 50 கி.மீ., தூரம் நிற்காமல் சைக்கிள் ஓட்டியபடி இரு கைகளாலும் மாறி மாறி ஓவியம் வரைகிறேன். தவிர, சைக்கிளின் முன் படுக்கை வசம் உள்ள "பாரில்' அட்டையை இணைத்து, அதில் இரு கைகளாலும் ஓவியம் வரைகிறேன். ஒரு வேலையை கவனமாக செய்ய வேண்டும் என்பதை, இச்சாதனை எனக்கு உணர்த்தியது,'' என்றார் கூடல்கண்ணன்.

- தினமலர்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

ஓவியர் பார்த்தசாரதி சின்னச்சாமிக்குப் பாராட்டுகள். செய்தியாளர் ஆனந்து அத்தகைய சில படங்களையும் வெளியிட்டு இருந்தால் சிறப்பாக  இருந்திருக்கும்.  தொடர்பு முகவரி தெரிவித்து இருந்தால் எல்லா ஊர்களிலும் இத்தகைய ஓவியத்தமிழ்க் காட்சி நடத்த வாய்ப்பாக  இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!    மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு?

First Published : 06 Aug 2011 02:13:09 PM IST


தாய்ப்பாலாகத் தமிழ் இருக்க, புட்டிப் பாலாக ஆங்கிலம் எதற்கு? இந்தக் கேள்வியை ஓவியத்தின் மூலமே எழுப்புகிறார் ஓர் ஓவியர். அவர், அமெரிக்க வாழ் தமிழரான பார்த்தசாரதி சின்னசாமி. கோவை பீளமேடு கஸ்தூரி ஸ்ரீனிவாசன் கலைக் கூடத்தில் நான்கு நாள்கள் நடந்த "ஓவியத்தமிழ்' என்னும் தலைப்பில் அமைந்த ஓவியக் கண்காட்சியில் அவரைச் சந்தித்தோம்.இப்படியொரு கண்காட்சியை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம் என்று யாரோ விதைத்த விதை. இன்று ஆலமரமாய் கிளை பரப்பியுள்ளது. மொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் மட்டும் அல்ல, இந்திய மொழிகள்... ஏன் உலக மொழிகள் எதுவும் பேசப்படுவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் எந்த நகரத்தில் நாம் நின்று சுற்றிப் பார்த்தாலும், உற்றுப் பார்த்தாலும் இது தெளிவாக விளங்கும்.நமது சமூக சூழலில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி வரைய வேண்டும் என்று ஒரு கால கட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் பல ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குக் காரணம், தாய்மொழியுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதுதான் என்பதை உணர்ந்தேன். அப்போது தோன்றிய உணர்வுகளுக்கு வண்ணமேற்றி ஒவியங்களில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். எனக்கே நான் சொல்ல ஆசைப்பட்ட செய்திகளைத் தாய் மொழி நலம் விரும்பும் என் உடன்பிறப்புகளுக்குச் சொல்ல கடல் தாண்டி, ஓவியங்களைச் சுமந்து வந்தேன். "ஓவியத்தமிழ்' என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தக் காரணம்?தமிழில் பேசும்போது அதில் ஆங்கிலம் கலந்துள்ளது என்பதை ஓவியம் வாயிலாக வெளிபடுத்தியுள்ளேன். ஓவியம் என்பது வண்ணச் சிதறலாக மட்டுமல்லாமல் எண்ணச் சிதறலாகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையோடு ஓவியம் வழி எனக்கு நானே சொல்லிக் கொண்ட செய்திகளை உங்கள் பார்வைக்குப் படைக்க நான் தேர்வு செய்த தலைப்பு இது.அமெரிக்காவில் இருந்து வந்து தமிழ் நாட்டில்இந்த ஓவியக் கண்காட்சியை ஏன் வைத்தீர்கள்?அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்கள் தங்களுக்குள் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள்தான். காரணம், அங்கிருக்கும் தமிழர்கள் நீண்ட நேரம் உரையாடுவது அமெரிக்கர்களுடன்தான். அதனால் அவர்கள் தமிழ் பேசினாலும் அதில் ஆங்கிலக் கலப்பைத் தவிர்க்கமுடியாது. ஆனால் தமிழ்நாட்டில் வாழும் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது நாகரிகம் எனும் போர்வையில் தாய்மொழியில் பேசாமலும் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து "தமிங்கல'மாகப் பேசுவதும் இங்குதானே நிகழ்கிறது! அதனால்தான் தமிழ்நாட்டில் ஓவியக் கண்காட்சியை நடத்தினேன்.எந்த கல்லூரியில் ஓவியம் பயின்றீர்கள்?நான் யாரிடமும் ஓவியம் பயிலவில்லை. சிறுவயது முதலே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. எனது தந்தை வெ.சின்னசாமி என்னை உற்சாகப்படுத்தினார். என் உள்ளக் குமுறல்கள், மொழி சிதைவடைகிறது என்ற எண்ணத்தினால் ஏற்படும் நடுக்கங்கள் கை வழியே ஊடுருவி ஓவியமாக மாறின. நீங்கள் எந்த ஊரில் எந்த மொழியில் கல்வி பயின்றீர்கள்?நான் உதகை அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். 12-ம்வகுப்பு வரை தாய்மொழியில்தான் படித்தேன். பள்ளிப் படிப்பில் சிறப்பிடம் பெற்றேன். தமிழில் கற்றதால் ஆங்கிலம் வராது என்ற தவறான எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் நம்பிக்கையுடன் ஆங்கில நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் படிக்கத் துவங்கினேன். தற்போது. ஆங்கிலம், தமிழில் நல்ல புலமையுண்டு. கொமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரியில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றேன். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று எம்.எல்., படித்தேன். தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறேன்.

திங்கள், 31 ஜனவரி, 2011

Very big Crystal drawing: மிகப் பெரிய பளிங்கு கல் ஓவியம்: இந்தியப் பெண் உலக சாதனை

மிகப் பெரிய பளிங்கு கல் ஓவியம்: இந்தியப் பெண் உலக சாதனை
First Published : 31 Jan 2011 12:00:00 AM IST


புது தில்லி, ஜன. 30: பளிங்கு கற்களை இணைத்து, மிகப் பெரிய ஓவியம் வடிவமைத்து இந்தியப் பெண் உலக சாதனை படைத்துள்ளார்.  இந்தியாவில் பிறந்து தற்போது பிரிட்டனில் வடிவமைப்பு நிறுவனம் தொடங்கி நடத்திவரும் கனிகா என்ற பெண் இந்த ஓவியத்தை வடிவமைத்துள்ளார்.  ஓமனின் முன்னாள் அரசர் சுல்தான் கபாஸ் பின்னின் 40-வது நினைவு தினம் கடந்த நவம்பர் மாதம் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி அவர் இந்த ஓவியத்தை வடிவமைத்தார்.  "மன்னரின் புகைப்படம் ஒன்றை கொடுத்தனர். அதை வைத்து பல வண்ண கற்களை தேடி அதன் மூலம் இந்த ஓவியத்தை வடிவமைத்தோம்' என்று கனிகா கூறினார்.  பிரிட்டனில் இவர் ஓவியம் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பஹ்ரைனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மன்னரின் ஓவியம் பளிங்கு கல்லில் வடிக்கப்பட வேண்டும் என கனிகாவின் நிறுவனத்தை அணுகியது.  இது குறித்து பஹ்ரைன் நிறுவனத்தைச் சேர்ந்த தெவான் என்பவர் கூறியது: "இந்த பளிங்கு கல் ஓவியம் வடிவமைக்கப்பட பல வண்ணத்தில் கற்கள் தேவைப்பட்டன. புகைப்படத்தில் உள்ளதுபோல ஓவியம் வடிவமைக்கப்பட மிகவும் உழைக்க வேண்டி இருந்தது.  தலைப்பாகைக்கு கருஞ்சிவப்பு நிறத்திலும், தோல், உடை உள்ளிட்ட பகுதிகளை வடிவமைக்க இளஞ்சிவப்பு மற்றும் தங்க நிறம் உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் பளிங்கு கற்கள் தேவைப்பட்டன. இதற்காக கனிகா மலைப்பகுதிகளுக்கு அவரே சென்று கற்களை தேர்ந்தெடுத்தார். பின்னர் இந்த கற்கள் ஒரு சதுர செ.மீ. அளவுக்கு வெட்டப்பட்டன.  இறுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 தனித்தனி துண்டுகளாக வெட்டப்பட்டு 90 வெவ்வேறு நிறங்களில் பாலிஷ் போடப்பட்டன.  பின்னர் அவை ஒன்றிணைக்கப்பட்டு மன்னரின் பளிங்கு கல் ஓவியம் வடிவமைக்கப்பட்டது. 4 மாதங்கள் நடைபெற்ற இந்த ஓவிய வடிவமைப்புப் பணியில் 15 கலைஞர்கள் ஈடுபட்டனர். இந்த ஓவியத்தின் உயரம் 8 மீட்டர். அகலம் 5 மீட்டர். உலகிலேயே மிகப் பெரிய பளிங்கு கல் ஓவியம் இதுதான்.  இந்த ஓவியம் இப்போதைய மன்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதை அவர் எங்கு வைப்பது என இன்னும் முடிவு செய்யவில்லை.  அநேகமாக பொது மக்கள் ரசிக்கும் வகையில் ஏதேனும் பொது இடத்தில் இதை வைக்க ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்' என்றார் அவர்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

திருவள்ளுவர் உருவத்தில் கன்னட மொழியில் திருக்குறள்



திண்டுக்கல், ஆக. 8: கன்னட மொழியில் திருக்குறளை, ஓர் அடி உயர திருவள்ளுவர் உருவத்தில் எழுதி சாதனை புரிந்துள்ளார் திண்டுக்கல் இளைஞர்.திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கே. பாலசுந்தர் (38). இவர் ஓர் அடி உயரம் உள்ள திருவள்ளுவர் படத்தை கோடுகளாக வரைந்து, அதில் 1,330 குறள்களையும் எழுதியுள்ளார். திருவள்ளுவர் தலை முதல் புருவம், மீசை, தாடி ஆகியவற்றை குறள்களாலேயே அலங்கரித்துள்ளார். ஆடைகளும் குறளாகவே உள்ளன.நாளொன்றுக்கு 10 மணி நேரம் வீதம் 7 நாளில் இப்பணியை நிறைவு செய்துள்ளார்.2005-ம் ஆண்டு மலையாள மொழியில் ஓரடி குறள் ஓவியமாக வரைந்துள்ளார். இதற்காக அன்றைய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முருகய்யா சுதந்திர தின விழாவில் பாலசுந்தரைக் கௌரவித்துள்ளார். அவரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, கல்குவாரியில் கணக்கர். தாய் நாகரத்தினம், ராஜ்குமார் என்ற தம்பி உள்ளனர்."கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டேன். இனிவரும் காலங்களில் ஓரடி ஓவியமாக வரைந்துள்ள குறளோவியத்தை மிகக் குறைந்த அளவு படமாக மாற்றி, குறள்களை அதில் பல்வேறு மொழிகளிலும் எழுதுவதே எனது லட்சியம். இதற்கு அரசு ஆக்கமும், ஊக்கமும் வழங்க வேண்டும்' என்றார் பாலசுந்தர். பாலசுந்தருக்கு மலையாளம், கன்னட மொழி தெரியாது. இதற்காக இந்த மொழிகளில் வெளிவந்த திருக்குறள் புத்தகத்தைப் பார்த்தே இந்த ஓவியங்களை வரைந்துள்ளார். கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு தமிழக முதல்வரைச் சந்தித்து இந்த ஓவியங்களைக் காண்பிக்கச் சென்றுள்ளார்.