புதன், 25 மே, 2011

உம்மொழி எம்மொழி பொன்மொழி

நேற்று நீ! இன்று நான்! நாளை யாரோ? புரிந்து செயல்பட்டால் நாளையும் நாமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

உம்மொழி எம்மொழி பொன்மொழி
First Published : 24 May 2011 11:21:10 AM IST

மொழி மொழி என்றுதமிழ்மொழியில் தொடங்கிசெம்மொழியில் நனைந்துகனிமொழியில் கடந்து போன நிலை... நான் நீ என்றால் ஒட்டாது நாம் என்றால் ஒட்டுமே என்ற பொன்மொழிகள் எல்லாம்பஸ்ஸில் பயணித்த மாணவமணிகளுக்கு குஷியைத் தந்திருக்கலாம்...ஆட்சி மாற்றம்...இதோ காட்சி மாற்றம்!இங்கே கழிக்கப்பட்ட பொன்மொழிகளுக்கு பதிலாகஅழிக்கப்பட்ட இடத்தில் ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்லுங்கள்!வாசகரே...உங்கள் கற்பனையில் உம் மொழியை இடுங்கள்!உங்கள் பொன்மொழியைவிதையுங்கள்!
கருத்துகள்

எவ்வளவு உள்ளன? "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என படித்தவை மறந்தீரோ? உதடோடு உள்ளம் ஒட்டி, படித்தவைதானே?
By KUMAR
5/24/2011 7:05:00 PM
நீ எழுதியதை நான் அழிக்க நான் எழுதியதை நீ அழிக்க நீ சொன்னதை நான் மறுக்க நான் சொன்னதை நீ மறுக்க நீ செய்ததை நான் தடுக்க நான் செய்ததை நீ தடுக்க நீ என் சேலையைப் பிடுங்க நான் உன் வேஸ்டியை பிடுங்க இவையெல்லாம் எதனால் ஏற்பட்ட பிழையோ தமிழக மக்கள் தரணியில் இவர்கள் நல்லாட்சி செய்வார்களென்று தேர்ந்தெடுத்த பிழையோ.
By அப்துல் ரஹ்மான்
5/24/2011 6:28:00 PM
பூக்களை பார்க்க, விதைகளை விதை.! முயற்சி இல்லாமல், முன்னேற்றம் இல்லை. கற்பவன் மனிதன், கற்பித்தவன் கடவுள். உண்மையை பேசு, உலகம் உன் கையில். தாயை வணங்கு, தர்மம் விளங்கும். ஏழ்மையை போற்றிடு, எளிமையாய் வாழ்ந்திடு. நல்ல குடிமகன், நாட்டுக்கு மன்னன். பெண்ணின் பெருமை, பொன்னில் அல்ல.
By பி.டி.முருகன் திருச்சி
5/24/2011 6:12:00 PM
தயாளு, ராசாத்தி, ஸ்டாலின்,அழகிரி, தயாநிதி, கலாநிதி, என்று சொன்னால் கூட உதடுகள் ஒட்டாது. ஆனால் கனிமொழி என்றால் ஒட்டும்.
By Nallavan
5/24/2011 3:48:00 PM
தெரியாமல் செய்தாலும் தெரிந்து செய்தாலும் புரிந்துகொள் பாவத்திற்கு தண்டனை உண்டு.
By KANNAN S S
5/24/2011 3:44:00 PM
உதட்டில் ஒன்று சொல்லி உள்ளத்தில் வேறு கொண்டு நாம் என்பது என் குடும்பம் மட்டுமே எனில் உதட்டினில் மாயம் செய்து உள்ளத்தில் உள்ளதை எந்திரத்தில் வைத்து உலகம் புகழ தமிழன் தலை நிமிர்ந்தனோ?
By ரக்
5/24/2011 3:31:00 PM
இந்த சுறுசுறுப்பு இந்த அதிகாரிகளுக்கு மற்ற வேலை செயும்போது வருவது இல்லை ஏன் முத்துக்குமார்
By Muthukumar
5/24/2011 3:29:00 PM
உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் வேறொன்றும் கொண்டு நாம் என்பது குடும்பமே என்றதால் மக்கள் உடத்தளவில் ஒன்று சொல்லி எந்திரத்தில் வேறு செய்தனரோ?
By RKR
5/24/2011 3:27:00 PM
திராவிடரை முன்னேற்றுவோம் என்று துவங்கி இன்று திஹாருக்கு முன்னேறிக்கொண்டிருக்கிற கழகத்தின் சரித்திரம் கற்றுத் தரும் பாடம், தமிழர்கள் முற்றும் மறந்து விட்ட, மறக்கடிக்கப்பட்ட நன்னூல்கள் தரும் ஈரடி நான்கடி வாழ்க்கை தத்துவங்களை மீண்டும் படிப்போம் என்பது தான். இவற்றை பேருந்துகளில் எழுதலாம்.
By sankaran
5/24/2011 2:53:00 PM
மாற்றம் ஒன்றே மாறாதது கீதை மொழி மாற்றம் ஆயிரமாயினும் ஏற்றம் தேவை ஆட்சி மாறலாம் ஆர்ப்பாட்டம் இன்றி காட்சி மாறலாம் காட்சி பிழையின்றி உம்மொழி எம்மொழியின்றி உண்மையின் மொழி படைப்பின் உத்தமம் தாம் எம்மக்களுக்கு!!!!!!!!!
By பாலா துரைமாணிக்கம்
5/24/2011 2:34:00 PM
விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும் 2 வினை விதைத்தவன் வினியாருப்பன் 3 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தம்மக்கின்னா பிற்பகல் தானே வரும்
By அழ.lakshmanan
5/24/2011 1:42:00 PM
சிந்தனை செய்! வஞ்சனை கொள்ளாதே!
By Perumal
5/24/2011 1:02:00 PM
ஒளவையாரின் மூதுரையை விட சிறந்த பொன்மொழிகள் வேறுண்டோ ? அதையெல்லாம் எழுதலாமே.!
By barathan
5/24/2011 11:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

செவ்வாய், 24 மே, 2011

thamizh kadamaigal 8: தமிழ்க்கடமைகள் 8 : தமிழா நீ எழுச்சி கொள்வாய்

தமிழ்க்கடமைகள் 8

தமிழா நீ எழுச்சி கொள்வாய்
தமிழர்க்குத் தமிழ்ஈழம் மலர்ந்திருக்கும்
        தமிழன்தான் இனமொழி நல்உணர்வே இன்றி
தமிழன்தான் வாழுகின்றான் இலங்கை தன்னின்
        தமிழர் வரலாற்றறியாப் பேதையாக
தமிழா நீ எழுச்சி கொள்வாய் எனிலோ நன்றே
        தரணிவாழ் தமிழரெலாம் மகிழ்ச்சி கொள்வார்.
- புலவர் புஞ்சையரசன்: தமிழ் எழுச்சிப் பாடல்கள் : பக்கம்  6

thamizh kadamaigal 7: தமிழ்க்கடமைகள் 7 : தமிழ்மொழி ஆக்கத்திற்கு வழிவகை காண்க


தமிழ்க்கடமைகள் 7 :  தமிழ்மொழி ஆக்கத்திற்கு வழிவகை காண்க
மொழிவளத்தால் ஒரு நாடு நன்னிலை பெறும். மொழி வளங்குன்றின் வீழ்ச்சியுறும். தமிழ்மொழி பழமையானது. இலக்கண இலக்கியச் செறிவு மிக்கது. அரசரும் குடிகளும் தமிழைப் போற்றிப் புரந்தனர்; அதுகாறும் அவர்கள் வெற்றிக்கு வீழ்ச்சியில்லை. பின்னர் அடிமைவாழ்வில் அகப்பட்டு மொழியை மறந்தனர்; மீளும் வகையின்றி ஆளாத் துயரில் உழல்கின்றனர். எனவே, இவ்விழிநிலைமாறத் தமிழ் இலக்கியங்களையும் பிற நாட்டாரின் கலைத்திறனையும் கற்று முன்னேற வேண்டும். பட்டம் பெற்ற பட்டதாரிகளிற் பலர், தாம் கற்ற கலைத்திறனை,  ஆங்கிலம் அறியாத கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படுமாறு செய்வதில்லை. நமது நாட்டு மக்கள் கல்வியில் முன்னேற வேண்டுமாயின், தம் நாட்டு மொழியிலே அனைத்தையும் கற்றல் வேண்டும். மேனாட்டினரும் வியக்கும் வண்ணம், சப்பானியர், மிகக் குறுகிய காலத்திற்குள்ளாக­வே, மதி நலமும், படைநலமும், பொருள் நலமும் பெற்றுத் திகழ்வது, அவர்தம் நாட்டுமொழி அளித்த மதுகையாலேயாம். தாய்மொழிப் பயிற்சியால் ஆங்கில மொழித்திறன் குன்றிவிடுமென்று கூறுவது தவறுடைத்து. இசுலாமியர் பல்கலைக் கழகத்தினர் தோன்றிய காலம்முதல் அருங்கலையனைத்தையும் நாட்டு மொழியாகிய ‘உருது’­வில்­ மாணவர்க்குக் கற்றுத் தரும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளனர். மற்றொரு சாரார், கலை நூற்களைக் கற்றுத் தரத் தாய்மொழியில் கருவிநூற்கள், மரபுச் சொற்கள், வாய்பாடுகள் இல்லையென்கின்றனர். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்க தமிழறிஞர் சிலரை ஒன்று சேர்த்துப் பணவுதவி புரிந்தால் இக்குறைபாடு மிக எளிதில் நீங்கிவிடும். கலைநூற்களைத் தமிழ்மொழியில் எழுதுவோர்க்குச் சிறந்த பரிசுகள் வழங்கப்படுமென விளம்பரம் செய்யின் எத்துணை நூல்கள் வெளிவரும் தெரியுமா? எனவே, குறைபாடுகளை நீக்கிவிட்டுத் தமிழ்மொழி ஆக்கம் பெறுவதற்குரிய வழிவகைகளைக் காணவேண்டுவது தமிழர்களின் தலையாய கடமையாகும்.
- தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார்:
தமிழர் மாநாட்டுப் பேருரை (7.8.32): தரவு: தமிழ்வேள் த.வே.உமாமகேசுவரனார் வாழ்வும் பணிகளும் (கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு) : பக்கம்.97-98

திங்கள், 23 மே, 2011

Minister expired in Road accident: சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பலி

மிகவும் வருத்தத்திற்குரிய துயரச் செய்தி. அவரது குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் கட்சியினருக்கும் தினமணி  வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்கள். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

சாலைவிபத்தில் அமைச்சர் பலி: எம்எல்ஏக்கள் பதவியேற்பு ஒத்திவைப்பு?
First Published : 23 May 2011 08:34:46 AM IST

Last Updated : 23 May 2011 09:19:02 AM IST
திருச்சி, மே 23: திருச்சி அருகே நடந்த சாலைவிபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். பெரம்பலூர், பாடாலூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார். சட்டசபை உறுப்பினராக இன்று பதவி ஏற்பதற்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், வேறொரு காரில் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவபதியும் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். கால் மணி நேர இடைவெளியில் அவர் யதேச்சையாக விபத்துக்கு உள்ளான மரியம் பிச்சையின் காரைக் கண்டு நிறுத்தி உதவியுள்ளார். உடனடியாக அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்ய, அங்கிருந்து அவர் திருச்சி திரும்பினார். ஆனால், சிவபதியின் காரும் விபத்துக்கு உள்ளானதாக காலையில் தகவல் பரவியது. இதை அடுத்து, தகவல் அறிந்து கொள்வதற்காக அமைச்சரிடம் தொடர்பு கொண்ட தினமணி நிருபரிடம், அமைச்சர் சிவபதி தான் நலமாக இருப்பதாகவும், தன் விபத்தில் சிக்கவில்லை, தனக்கு காயம் எதுவும் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சட்டப்பேரவை செயலர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று காலை தொடங்கவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தை நடத்துவது குறித்தும், சாலைவிபத்தில் பலியான அமைச்சர் மரியம்பிச்சைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பைத் தொடர்ந்து நடத்தலாமா அல்லது வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.
கருத்துகள்

May God rest his soul in peace. innalillahi va inna ilaihiraagioon.
By sulaiman
5/23/2011 9:24:00 AM
ஆழ்ந்த அனுதாபங்கள்
By vivek
5/23/2011 9:00:00 AM
It is very sad. He might have thought in his mind to do many good things for our state assuming his new responsibility. It is very unfortunate and his end should not have come in this way. Heartfelt condolence to his bereaved family and pray Almighty to rest his soul in peace and give strength to his family tobear this irreparable loss.
By Abdullah.B,Dubai
5/23/2011 8:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழக அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் மரணம்; முதல் சட்டசபை கூட்டத்திற்கு சென்றபோது விபரீதம்

புலிகள் அமைப்பின் புதிய தலைவர் மீது இலங்கை தீவிரக் கண்காணிப்பு

தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் கொல்லப்பட்டார் என அடிக்கடி தினமணி குறிப்பிடுவதை விடச்,  சிங்கள அரசால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அவர் பற்றிய விவரம் தெரியவிலலை என்றாவது எழுதலாம் அலலவா? தமிழ் ஈழ எழுச்சியை ஏற்படுத்தி வரும் தினமணிக்கு அதுதானே அழகு. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புலிகள் அமைப்பின் புதிய தலைவர் மீது இலங்கை தீவிர கண்காணிப்பு

First Published : 22 May 2011 12:00:00 AM IST


கொழும்பு, மே 21: விடுதலைப் புலிகள் அமைப்பின் (எல்டிடிஈ) புதிய தலைவரின் செயல்பாடுகளை இலங்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இலங்கை ராணுவத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். அதன் பிறகு அந்த அமைப்பின் தலைவராக குமரன் பத்மநாதன் பொறுப்பேற்றார். ஆனால் அவரையும் இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இந்த அமைப்புக்கு தலைவராக நார்வேயில் வசிக்கும் இலங்கை தமிழர் பேரின்பநாயகம் சிவபரன் என்கிற நெடியவன் பொறுப்பேற்றார். எல்டிடிஈ அமைப்பின் புதிய தலைவராக இவர் கருதப்படுகிறார். கடந்த வாரம் இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் உறவினர்களை அச்சுறுத்துவதாக குற்றம் சாட்டி இது குறித்து விளக்கம் அளிக்குமாறு நெடியவனுக்கு நார்வே நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இலங்கையில் உள்ள தங்களது உறவினர்கள் அச்சுறுத்தப்படுவதாக நார்வேயில் உள்ள தமிழர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு விசாரணையை உன்னிப்பாகக் கவனித்து வருமாறு நார்வேயில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நார்வே மேற்கொண்டது. ஆனால் நார்வே குழுவினரின் அமைதி பேச்சுவார்த்தை எவ்வித பலனையும் அளிக்கவில்லை. இதையடுத்து நடந்த கடுமையான சண்டையில் இலங்கை ராணுவத்தின் கை மேலோங்கியது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நார்வே உதவுவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது. அதை நார்வே அரசு மறுத்துள்ளது.
கருத்துகள்

ராஜபக்சே வ எப்போ சுட்டு கொல்றங்களோ அப்போ தான் நம்ம இனத்துக்கு நிம்மதி கிடைக்கும் ....அந்த நாள் சீக்கிரம் வரும். நம்ம தலைவர் திரும்ப வருவர்.. அது வரைக்கும் பொறுத்திருப்போம்
By தமிழன் sankar
5/22/2011 11:27:00 AM
ராஜபக்ஷ சகோதர்கள் உருத்திர குமாரைமட்டுமா தீவிர கண்காணிப்பு செய்கின்றனர் இவர்கள் சோனியா கருணாநிதி ஜெயலித வைகோ நெடுமாறன் மன்மோகன் சிங் பிரணாப் முகர்ஜி சிதம்பரம் வீரமணி திருமாவளவன் எல்லோரையும் தான் கண்காணிப்பு செய்கின்றனர் . காரணம் இவர்களை கொலைவெறி சனியன் பிடிச்சுடுத்து இது தெரியாதவர் உலகத்தில் யாருமே இல்லையே இது என்ன புதிசா சாமி .
By ஜனம்- thanjai
5/22/2011 5:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

corrupted persons will be punished - sonia: ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா

ஒருவன், தான் குடிக்க மாட்டேன், கொள்ளை அடிக்க மாட்டேன், கொலை செய்ய மாட்டேன், பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட மாட்டேன் என்றெல்லாம் சொல்லி விட்டு ஒரே ஒரு  கெட்ட பழக்கம்  மட்டும்தான் உண்டு என்றானாம்.  இவவ்ளவு நல்ல பழக்கங்கள் இருக்கும் பொழுது ஒரே ஒரு கெட்ட பழக்கம்தானே இருக்கிறது. என்று நினைத்தால் அந்த ஒரே ஒரு கெட்ட பழக்கம் என்பது பொய பேசுவதுதான். அதைப்போல் சோனியா பேச்சு நன்றாகத்தான் உள்ளது.  ஆனால், பொய்மையே தொழில் என்றான பின்பு சொல்லுக்கும் செயலுக்குமான வேறுபாட்டை உடையவர்கள் குறித்து மக்கள் புரிந்து  கொண்டுள்ளார்கள் என்பதை அவர் புரிந்து  கொள்ள வில்லையே!  ஒருவேளை கலைஞரை மிரட்டுவதற்காக  உத்தம வேடம் போடுகிறாரா? காங்கிரசு என்றாலே ஊழல்! ஊழல் என்றாலே காங்கிரசு! அனைவரும் அறிந்த உண்மை என்பதை அவர் அறியட்டும்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஊழல் புரிந்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்: சோனியா
First Published : 22 May 2011 09:25:57 PM IST

புதுதில்லி, மே 22: ஊழல் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார் சோனியா. இன்று மாலை, ஐமுகூட்டணி அரசு இரண்டாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில், ''ஐமுகூட்டணி அரசு: நாட்டு மக்களுக்கான அறிக்கை" என்பதை வெளியிட்டுப் பேரும்போது, சோனியா இதைத் தெரிவித்தார்.ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், செயலளவிலும் கண்டிப்புடன் எடுக்கப்படும் என்றார் அவர்.மேலும், * நேர்மை, நாணயம், வெளிப்படைத்தன்மை, கடமை, பொறுப்பு - இவையே எங்கள் அரசாட்சியின் முக்கிய அம்சங்கள்...* பொறுப்புள்ள, செயல்தன்மையுள்ள அரசையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின..* மாபெரும் பொருளாதார வளர்ச்சி, வாங்கும் சக்திக்கேற்ப அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருத்தல் இவற்றுக்கே ஐமுகூ அரசு முன்னுரிமை அளிக்கிறது- என்று ஐமுகூட்டணித் தலைவர் சோனியா பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், * ஐமுகூ அரசு 7 வருடங்கள் நிலையான ஆட்சியைக் கொடுத்துள்ளது; சமூக முன்னேற்றம், மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்துள்ளது...* உணவு பெறும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டம் இடப்பட்டுள்ளது...* பயங்கரவாதம் மிகப் பெரிய சவால்; பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் போராட அனைவரும் ஒருங்கிணைவது அவசியம்- என்று கருத்து தெரிவித்தார்.
கருத்துகள்

போபர்ஸ் பற்றிய செய்திகளில் ஊழல் இல்லையா?
By நாடோடி
5/22/2011 10:51:00 PM
We appreciate your statement that corrupt people will be punished. Let me ask one open question to central Goverment. The question is when Karunanithi camped in New Delhi and fought tooth and nail to get specific rich portfolios like rich Telecommunication and Shipping, his intention was obvious ie to corrupt: Not because he had great scholars or experts in these two portfolios to serve the country. His intention was to serve the country why he would not accept other portfolios? Since he is having 18 MPs, he threatened and got those portfolios. Why, knowing very well his intention, you people assigned these two to them? By giving these two portfolios to DMK, knowingly or unknowingly you were part of this scam? That is why Tamil Nadu people punished your party also. In future, if any of the coalition partners demand specific portfolios, give them and ask your intelligence people to tap their teleconversation and reserve one room in Tihal jail. Only then people will say that you are gen
By rajcey
5/22/2011 10:43:00 PM
டேய் காமெடியன்களா, தமிழ் நாட்டுல இப்பதான் ஒரு காமெடியன் காணாம போயிட்டான், கொஞ்சம் டெல்லியிலர்ந்து இங்க வாங்களேன். நிறைய படத்துக்கு காமெடிக்கு ஆள் கிடைக்கலியாம். அசப்புல, சோனியாவ பார்த்தா கோவை சரளா மாதிரியே இருக்குதுபா... யோவ், மண்ணு மோகன்னு, காமெடி ரோல்னதும் டர் ஆயிட்டியா ? நீ ஆக்டிங் குடுக்காம, சும்மா கேன மாதிரி சிரிச்சிகினே இருந்தா போதும், டக்கரா வந்துருவ, வடிவேலுவ கூட கெலிச்சிருவ... தெர்தா ?
By பாமரன்
5/22/2011 10:11:00 PM
சோனியா காந்தி அவர்களின் பேச்சு, எங்கேயோ இடிக்கிறதே.
By பி.டி.முருகன் திருச்சி
5/22/2011 9:57:00 PM
eppadiyo timuka vai undu ellai endru seithuvivarkal, kalaijar eni thiruvodu edoka vediyathu than baki
By S Venkataswamy
5/22/2011 9:48:00 PM
அய்யா .. கலைஞரே .. அவங்க பேச்சே சரியில்லையே .. டெல்லிக்கு போயி பிரயோஜனம் இருக்க போவது மாதிரி தெரியலையே.. எதுக்கும் ஒருதடவை யோசிங்க..போவனும்மான்னு ..
By rishi
5/22/2011 9:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவர்:
மன்மோகன் சிங், சோனியா காந்தி உறுதி
First Published : 23 May 2011 02:40:33 AM IST

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் தங்கள் ஆட்சி தொடர்பான அறிக்கையை வெளியிடும் பிரதமர
புது தில்லி, மே 22: ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தெரிவித்தனர்.  ÷ஊழலை ஒழிக்க வேண்டுமென மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.  ÷மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முக்கியத் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ÷இதில் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகிய இருவரின் பேச்சும் ஊழல் ஒழிப்பை மையமாக வைத்தே இருந்தது. மத்திய அரசு மீது சமீப காலமாக அடுக்கடுக்காக எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை குறைக்க வேண்டுமென்ற நோக்கில் அவர்களது பேச்சு அமைந்திருந்தது.  ÷"ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது வெறும் வாய் வார்த்தையாக இருக்காது என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறுகிறேன். எதிர்காலத்தில் எவரும் எவ்வித குற்றச்சாட்டும் கூற முடியாத அளவுக்கு அரசு சிறப்பாக செயல்படும்' என்றார் சோனியா காந்தி. "மத்திய அரசு தவறுகளைத் திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள். முன்பு எழுந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அரசு மீது இனி எழாது. அரசு நிர்வாகம் சிறப்பானதாகவும், வெளிப்படைத்தன்மை உடையதாகவும் இருக்கும்' என்று மன்மோகன் சிங் பேசினார்.  ÷இப்போதைய பொருளாதார சூழ்நிலை, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, கல்வி, அண்டை நாடுகளுடனான உறவு, உள்நாட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ரயில்வே, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.