statute லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
statute லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூன், 2012

Sinhala Army destroys statues of historic Saiva temple in Batticaloa

Sinhala Army destroys statues of historic Saiva temple in Batticaloa

[TamilNet, Monday, 04 June 2012, 23:56 GMT]
The Sinhala military occupying Batticaloa has destroyed several tradtional stone-statues at the historic Thaanthaamalai Murukan temple, situated in Paddippazhai DS division of Batticaloa district. The temple, revered by Saivaites in the East as ‘Chinna Kathirkaamam’ and the land of 25 acres around it, were declared in 1959 as a Saiva Sacred Area according to the decree entered by the Court of Law in Ceylon. The area, which was safeguarded by the Tamil Tigers for more than 12 years since 1994, has now been subjected to the intrusion of Colombo's Archaeology Department and the SL Army after the war. The villagers allege that Colombo is attempting to construct a Buddhist stupa on the land that belongs to the historic Saiva temple.

The occupying SLA soldiers on 18 May destroyed several statues and other sculptures made up of granite stone and desecrated the temple, according to a complaint lodged with the SL Police in Kokkaddich-choalai by the temple authorities.

Batticaloa district Tamil National Alliance (TNA) parliamentarian P.Ariyanethran, on the invitation of the temple authority, visited the temple, which was subjected to desecration and destruction by the occupying SLA.

Those who were attempting to construct a Buddhist Vihare in the area, the MP said, have desecrated the temple.

“I visited the temple on Saturday, 02 June, and saw the destruction caused on the Kanthavea'l temple, which Swami Muthiah had used for meditation,” Mr.Ariynaethran said.

No action had been taken by the SL authorities despite repeated complaints by the temple authorities. They also have sent a memorandum to SL President Mahinda Rajapaksa, urging him to take immediate steps to stop the construction of the Buddhist Vihare.

Thaanthaamalai and its neighbouring villages have been the home of Tamil Saivites for ages.

The intruding Sinhala Buddhist monks, with the assistance of the Sri Lanka Army, have also occupied the Saiva temple at Kachchat-kodi Swamimalai village in the Paddippazhai division.

Related Articles:
26.12.10   Colombo's Archeology department intrudes into historic Hindu..
01.07.10   Hindu temples in East face forcible removal, destruction

சனி, 12 நவம்பர், 2011

ஈகையாளர் சின்னச்சாமிக்குத் திருச்சியில் சிலை: முதல்வர் செயலலிதா அறிவிப்பு

பாராட்டுகள். பிற மொழிப்போர் ஈகிகளையும்  அவர்கள் புகழ் போற்றும் வண்ணம் சிறப்பிக்க வேண்டும். நீறு பூத்த நெருப்பாக முதல்வரிடமும் தமிழ் உணர்வு உள்ளது. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

தியாகி சின்னச்சாமிக்கு திருச்சியில் சிலை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

First Published : 12 Nov 2011 02:37:10 PM IST


சென்னை, நவ. 12; தமிழ் மொழிக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகி சின்னச்சாமிக்கு திருச்சிராப்பள்ளியில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உயிரினும் மேலாக நாம் போற்றி வணங்கும் அன்னைத் தமிழ் மொழிக்கு இந்தி ஆதிக்கத்தால் ஆபத்து வந்த நேரத்தில், செந்தமிழுக்கு ஒரு தீங்கு எனில் இந்த தேகம் இருந்தொரு லாபம் உண்டோ எனக் கேட்டு செந்தணலுக்கு தன்னை இரையாக்கிக் கொண்டவர் தியாகி சின்னச்சாமி.திருச்சிராப்பள்ளி, ரயில்வே சந்திப்பில், 1964ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி  அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது, தியாகி.சின்னச்சாமி திருச்சிராப்பள்ளி ரயில் நிலைய வாசலில்,  விடியற்காலை 4.30 மணிக்கு, தனது இன்னுயிரைத் துச்சமென மதித்து, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு, தனது உடல் பற்றி எரிந்து கொண்டிருந்த  நிலையிலும்,  “தமிழ் வாழ்க” -  “தமிழ் வாழ்க” என்று முழங்கியவாறு தமிழ் மொழிக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.  அப்போது அவருக்கு 27 வயதே ஆகும். 1964 ஆம் ஆண்டு தியாகி சின்னச்சாமியின் மறைவு செய்தி அறிந்து அவரது குடும்பத்தாருக்கு எம்.ஜி.ஆர். 5,000/- ரூபாய் நிதி அளித்தார். 1962ம் ஆண்டு நடந்த அதிமுக 21-ம் ஆண்டு துவக்க விழாவில் நான் 50,000/- ரூபாய் நிதி உதவி வழங்கினேன். மேலும்  1995 ஆம் ஆண்டு  தஞ்சாவூரில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டில், சின்னச்சாமி குடும்பத்தாருக்கு மேலும் 50,000/- ரூபாய் வழங்கினேன்.திருச்சிராப்பள்ளியில் உள்ள அவரது  கல்லறையில் ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் நினைவாக ஜனவரி 25 ஆம் நாளில் அனுசரிக்கப்படும் வீரவணக்க நாள் அன்று தமிழ் ஆர்வலர்களும், தமிழ் தொண்டர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகின்றனர். அவருடைய புகழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அவர்களின் நினைவைப் போற்றி  திருச்சிராப்பள்ளியில் அன்னாரின் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

வெள்ளி, 11 ஜூன், 2010

புது​வை​யில் 13.3 அடி உயர திரு​வள்​ளு​வர்​ சிலை



புதுச் ​சேரி,​​ ஜூன் 10:​ புதுச்​சே​ரி​யில் ரூ.15 லட்​சம் செல​வில் திரு​வள்​ளு​வ​ரின் 13.3 அடி உயர வெண்​க​லச் சிலை நிறு​வப்​ப​டு​கி​றது.​ இது 2 டன் எடை​யுள்​ளது.​ ​÷பு​துச்​சேரி சுற்​றுலா மைய​மாக விளங்கி வரு​கி​றது.​ இங்கு சுற்​றிப் பார்க்க பல்​வேறு இடங்​கள் இருக்​கின்​றன.​ இப்​போது சுண்​ணாம்​பாறு படகு குழாம் அருகே புதி​ய​தாக திரு​வள்​ளு​வர் சிலை இன்​னும் ஒரு மாதத்​தில் நிறு​வப்​பட உள்​ளது.​ அங்கு ஒரு சிறிய பூங்​கா​வும் நிர்​மா​ணிக்​கப்​ப​டு​கி​றது.​ ​÷ஆந்​திர மாநி​லம் விஜ​ய​வா​டா​வைச் சேர்ந்த புகழ்​பெற்ற சிற்பி பிர ​சாத் ​(44) இந்​தச் சிலை​யின் மாதி​ரியை வடி​வ​மைத்​துள்​ளார்.​ இதை முதல்​வர் வைத்தி​லிங்​கம்,​​ சுற்​று​லாத்​துறை அமைச்​சர் மல்​லாடி கிருஷ்​ணா​ராவ்,​​ பொதுப்​ப​ணித்​துறை ​ அமைச்​சர் ஷாஜ​கான் ஆகி​யோர் பார்​வைக்​கா​க​வும்,​​ அவர்​க​ளின் ஒப்​பு​த​லுக்​கா​க​வும் இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலை​யு​டன் விஜ​ய​வா​டா​வில் இருந்து புதுச்​சே​ரிக்கு வந்​துள்​ளார்.​ ​÷இந்த மாதிரி திரு​வள்​ளு​வர் சிலைக்கு ஒப்​பு​தல் கிடைத்​த​வு​டன் இதே வடி​வத்​தில் திரு​வள்​ளு​வர் வெண்​க​லச் சிலையை அவர் வடி​வ​மைக்க உள்​ளார்.​ ​÷அப்​துல்​க​லாம் குடி​ய​ர​சுத் தலை​வ​ராக இருந்​த​போது அவர் கையால் கதர் ஆணை​யத்​தின் தேசிய விரு​தைப் பெற்​ற​வர் இந்​தச் சிலையை வடி​வ​மைக்​கும் பிர​சாத்.​ ​÷தி​ரு​வள்​ளு​வர் சிலை வடி​வ​மைப்பு குறித்து சிற்பி பிர​சாத் கூறு​கை​யில்,​​ ​ திரு ​வள்​ளு​வர் சிலை எப்​படி இருக்க வேண்​டும் என்று புதுச்​சேரி அரசு சார்​பில் புகைப்​ப​டம் கொடுத்​த​னர்.​ மேலும் இன்​டர்​நெட்​டி​லும் திரு​வள்​ளு​வர் படத்தை எடுத்து ஒப்​பிட்டு இந்​தச் சிலையை உரு​வாக்​கி​யுள்​ளேன்.​ ​÷இந்​தச் சிலை​யில் திரு​வள்​ளு​வர் முகம் சிறப்​பாக இருக்​கும்.​ மிகப்​பெ​ரிய புல​வ​ரின் சிலையை என் கை வடி​வ​மைத்​துள்​ளது குறித்து பெரு​மைப்​ப​டு​கி​றேன்.​ அது எனக்கு மகிழ்ச்சி அளிப்​ப​தாக இருக்​கி​றது.​ பாரம்​ப​ரி​ய​மாக கலைக் குடும்​பத்​தைச் சேர்ந்​த​வன் நான்.​ 24 வய​தில் இருந்து இது போன்று சிலை​கள் வடி​வ​மைப்​ப​தில் ஈடு​பட்டு வரு​கி​றேன்.​ ​÷ம​காத்மா காந்தி,​​ ஜவ​ஹர்​லால் நேரு உள்​ளிட்ட தலை​வர்​க​ளின் சிலை​களை வடி​வ​மைத்​துள்​ளேன்.​ ஆந்​திர மாநில முதல்​வர் ராஜ​சே​க​ர​ரெட்டி ஹெலி​காப்​டர் விபத்​தில் இறந்​தார்.​ அந்த இடத்​தில் 20 அடி உயர ராஜ​சே​கர ரெட்​டி​யின் வெண்​க​லச் சிலை நிறு​வப்​பட உள்​ளது.​ அந்​தச் சிலை​யை​யும் தயா​ரித்து வரு​கி​றேன் என்​றார்.​ ​ ​ ​÷பு​துச்​சேரி யூனி​யன் பிர​தே​சம் யேனம் பிராந்​தி​யத்​தில் நாட்​டி​லேயே உய​ர​மான 24 அடி உயர பார​த​மாதா சிலையை வடி​வ​மைத்​த​வர் இந்​தச் சிற்​பி​தான்.​ இதைத் தவிர புதுச்​சேரி அர​சுக்​காக மேலும் சில சிலை​களை இவர் வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ ​÷கா ​ரைக்​கால் பகு​திக்​காக காம​ரா​ஜர் வெண்​க​லச் சிலை 10 அடி உய​ரத்​தில் தயா​ரித்து வரு​கி​றார்.​ காம​ரா​ஜ​ரின் இரண்டு கைக​ளி​லும் சிறு​வன்,​​ சிறுமி ஆகிய 2 பேர் இருப்​பர்.​ இது ரூ.13 லட்​சம் செல​வி​லான வெண்​க​லச் சிலை.​ மேலும் காரைக்​கால் பகு​திக்கு 7 அடி உய​ரத்​தில் உட்​கார்ந்த நிலை​யில் வெண்​கல காந்தி சிலை​யை​யும் இவர் தயா​ரித்து வரு​கி​றார்.​ இதற்கு செலவு ரூ.15 லட்​சம்.​ ​÷இப்​போது புதுச்​சேரி அரசு மக​ளிர் மற்​றும் குழந்​தை​கள் மருத்​து​வ​மனை கட்​டப்​பட்டு முடி​யும் நிலை​யில் இருக்​கி​றது.​ இந்த மருத்​து​வ​ம​னை​யின் முன்பு நான்​கரை அடி உய​ரத்​தில் தாய் குழந்​தைக்கு பாலூட்​டு​வது போன்ற வெண்​க​லச் சிலை​யை​யும் இந்​தச் சிற்பி வடி​வ​மைத்து வரு​கி​றார்.​ இதன் மதிப்பு ரூ.6.3 லட்​ச​மா​கும்.​

கருத்துக்கள்

குமரியில் பெண்மையின் சாயலில் திருவள்ளுவரை வடித்து விட்டு நொண்டிச் சாக்கு சொல்லி அதையே புதுமை எனக் கதையளந்ததுபோல் இல்லாமல் நன்கு வடிவமைத்துள்ள சிற்பி பிராசத்திற்குப் பாராட்டுகள். குமரியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளாமல் இதற்கு உரியவர்கள் ஒப்புதல் தர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/11/2010 7:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை: கருணாநிதி திறந்து வைத்தார்




பெங்களூர், ஆக.9: பெங்களூரில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த தமிழ்ப்புலவர் திருவள்ளுவர் சிலையை பலத்த பாதுகாப்புக்கிடையே தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை திறந்து வைத்தார்.

ஆர்பிஏஎன்எம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் சிலையை கர்நாடக முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்து வைத்து உரையாற்றினார்.

சிலை திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட ரக்ஷணா வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீசாரால் விழா நடைபெறும் இடத்திலிருந்து 10 கிலோமீட்டருக்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சிலை திறப்பு விழா அமைதியாக நடைபெற்றதாகப் போலீசார் தெரிவித்தனர். விழாவின்போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமலிருக்க 3000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பெங்களூர், ஆக.9-

பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.
கன்னட அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக திருவள்ளவர் சிலை திறக்கப்படாமல் மூடியே கிடந்தது. திருவள்ளுவர் சிலையை திறக்க தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியும், கர்நாடக முதல்- மந்திரி எடியூரப்பாவும் முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி பெங்களூரில் 9-ந்தேதி (இன்று) திருவள்ளுவர் சிலையையும், சென்னையில் 13-ந்தேதி கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையையும் இரு மாநில முதல்வர்கள் திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
என்றாலும் சில கன்னட அமைப்புகள் திருவள்ளுவர் சிலை திறக்க எதிர்ப்பு தெரிவித்தன. சிலை திறப்பு விழாவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சிலை திறப்பு விழாவுக்கு தடைவிதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கர்நாடக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால் பெங்களூர் முழுவதும் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விழா நடைபெறும் அல்சூர் பள்ளித்திடலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்த கன்னட அமைப்பினர் 500 பேரை முன்கூட்டியே கைது செய்தனர். வாட்டாள் நாகராஜ், நாராயண கவுடா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது.
கர்நாடக அரசு சார்பில் அல்சூரில் உள்ள ஆர்.பி.ஏ. என்.எம். பள்ளித்திடலில் இதற்கான விழா இன்று காலை 11.30 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது. விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்கனவே பெங்களூர் சென்று தங்கியிருந்தார்.
விழா நடக்கும் இடத்துக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வந்ததும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில மந்திரிகள், பெங்களூர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதன்பிறகு விழா தொடங்கியது. கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் கருணாநிதி விழா மேடையில் இருந்தவாறு பொத்தானை அழுத்தி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். உடனே திருவள்ளுவர் சிலையை சுற்றி இருந்த திரைச்சீலை விலகியது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
விழாவில் பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரியும், மாநில பாரதீய ஜனதா தலைவருமான அனந்தகுமார், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், எ.வ.வேலு, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, அமிர்தம், சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ. ரோஷன்பெய்க், பெங்களூர் எம்.பி. மோகன், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மந்திரிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி சார்பில் சால்வை அணிவித்து கண்ணாடி பேழையில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
விழா நடந்த பள்ளித் திடலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடம் இல்லாமல் காம்பவுண்டு சுவர்களிலும் மக்கள் ஏறி அமர்ந்து இருந்தனர். கூட்டத்தினர் ஆங்காங்கே தேசிய கொடி ஏற்றி நின்றனர்.
விழா மேடையில் “தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா” என்று கன்னடத்திலும், தமிழிலும் எழுதப்பட்டு இருந்தது.
விழா தொடக்கத்தில் கன்னட தாய் வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது.
திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் மூலம் தமிழர்களின் 18 ஆண்டு கனவு நிறைவேறியது. முதல்- அமைச்சர் கருணாநிதி 2000-ம் ஆண்டு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தபோது Òபெங்களூருக்கு ஒரு விழாவுக்கு நான் செல்வது என்றால் அது திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் செல்வேனே தவிர வேறு எந்த விழாவுக்கும் அடிஎடுத்து வைக்க மாட்டேன் என்றார். அவரது சபதமும் இன்று நிறைவேறியது.
அதன்பிறகு விழா தொடங்கியது. கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் கருணாநிதி விழா மேடையில் இருந்தவாறு பொத்தானை அழுத்தி திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். உடனே திருவள்ளுவர் சிலையை சுற்றி இருந்த திரைச்சீலை விலகியது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
விழாவில் பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரியும், மாநில பாரதீய ஜனதா தலைவருமான அனந்தகுமார், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், எ.வ.வேலு, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் செல்வி, அமிர்தம், சிவாஜிநகர் தொகுதி எம்.எல்.ஏ. ரோஷன்பெய்க், பெங்களூர் எம்.பி. மோகன், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மந்திரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை, ஆக.9-

"பெங்களூரில் இன்று நடைபெறும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வாழ்விலோர் திருநாள்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"இன்று வாழ்விலோர் திருநாள்'' என்பார்களே, அப்படிப்பட்ட திருநாள்தான் இன்று! ஆம், பெங்களூரு நகரத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை திறக்கப்படுகிறது. அய்யன் வள்ளுவருக்கு இங்கே பெங்களூரில் சிலை திறக்கின்ற விஷயமாகட்டும்- தமிழகத்தில் கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சியாகட்டும்- சென்னை மாநகரத்தில் திருவள்ளுவருக்காக நான் முயற்சியெடுத்து எழுப்பிய வள்ளுவர் கோட்டத் திறப்பு விழா நிகழ்ச்சியாகட்டும்- சென்னையில் சட்டப்பேரவை மண்டபத்தில் வள்ளுவரின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சியாக இருக்கட்டும்- அனைத்திலும் என் வாழ்க்கையும் இணைக்கப்பட்ட ஒன்று என்று சொன்னால் அது தவறாகாது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்க்கை நெறி வகுத்துக்காட்டி வள்ளுவரால் வழங்கப்பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள். திருக்குறளும், அதனை யாத்து இவ்வுலகிற்கு வழங்கிய வாலறிவன் வள்ளுவரும், இளமையிலேயே எனக்கு அறிமுகமாகி, என் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு உயரத்தையும், தரத்தையும் தந்து வருகின்ற பாங்கினை என்னென்பேன்!

"திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார். அதனை நாம் உலகத்தின் பொதுச் சொத்து என்று எண்ணத்தக்க விதத்தில் பொது கருத்தைப் பரப்ப வேண்டும்'' என்று அண்ணா கூறியுள்ளார். 1948-ல் தந்தை பெரியாரோ திருக்குறள் மாநாடு ஒன்றினையே கூட்டினார். 1953-ம் ஆண்டு மொழியுரிமை காக்க; கல்லக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் நான் இருந்தபோது, கைதிகளாக இருந்த தோழர்களின் மத்தியில் அன்றாடம் பேசும்போது, திருக்குறள் பற்றி உரையாற்றியதும் என் நினைவிலே உள்ளது.

1963-ம் ஆண்டு சட்டப் பேரவையில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, பேரவையில் திருவள்ளுவர் திருவுருவப் படம் ஒன்றினை வைக்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டேன். அப்போது பேரவைத் தலைவராக இருந்த யு.கிருஷ்ணாராவ், அந்தத் திருவள்ளுவர் படத்தினை நான் வாங்கித் தருவதாக இருந்தால், அதை மன்றத்திலே வைப்பதற்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்தார். நான் அவ்வாறே வாங்கித் தர இசைவு தந்த பிறகு, அந்தப் படத்தினை தாழ்வாரத்தில் தான் வைக்க முடியும், மன்றத்திற்குள் வைத்தால் வேறு சிலர் கம்பர் படத்தினை வைக்க வேண்டுமென்றோ, காளமேகத்தின் படத்தினை வைக்க வேண்டுமென்றோ கோரிக்கை வைக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது. அதற்கு பதிலாக நான் கூறும்போது, மன்றத்திற்குள் காந்தி படம், ராஜாஜி படம் வைக்கப்பட்டுள்ளது, அதைப்போல படேலுக்கோ, வேறு ஒரு கட்சி தலைவருக்கோ படம் வைக்கப்பட வேண்டுமென்று எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை, எனவே மன்றத்திற்குள் தான் திருவள்ளுவருக்கு படம் வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். ஆனாலும் அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்படாவிட்டாலும், நான் அவையிலே எழுப்பிய அந்த கோரிக்கை 22.3.1964 அன்று பேரவை மன்றத்திற்குள் திருவள்ளுவரின் படத்தினை அன்றைய குடியரசு தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார்.

அதைப் போலவே சட்டப் பேரவையில் நான் பேசும்போது வேறொரு கருத்தையும் தெரிவித்தேன். அதாவது, தமிழ்நாட்டில் உள்ள புலவர் பெருமக்கள் எல்லாம் கூடி, குறிப்பிட்டுச் சொல்லும் நாளை திருவள்ளுவர் தினம் என்ற பெயரால் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமென்றும் கூறினேன். அதன் பின்னர் 30.10.1969 அன்று எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவினைத் தொடர்ந்து - ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படும் நாளுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் என்றும், அன்று அரசு விடுமுறை என்றும் முடிவு செய்து அதற்கான அரசாணை 3.11.1969-ல் என்னுடைய ஆட்சி காலத்தில்தான் வெளியிடப்பட்டது.

அதுபோலவே, 1973-ல் திருமயிலை திருவள்ளுவர் நினைவாலயத் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டிய போது, திருவள்ளுவருக்கு தமிழகத் தலைநகரில் அழியாத நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். அது அறிவிப்பாகவே நின்றுவிடாமல், 18.9.1974 அன்று வள்ளுவர் கோட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று, பணிகள் தொடங்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான தேதியினைக் குறிக்கவும், விழாவினை எவ்வாறு நடத்துவது என்பதற்கான திட்டங்களைத் தீட்டவும் - 8.1.1976 அன்று அரசின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. பிப்ரவரி மாதம் 22, 23 ஆகிய நாட்களில் அந்தத் திறப்பு விழாவை கழக அரசு முன்னின்று நடத்துவதென்று நாளும் குறிக்கப்பட்டது. ஆனால் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவினை தி.மு.க. அரசு நிறைவேற்றுவதற்கு முன்பாகவே ஜனவரி 31-ந் தேதியன்று மாலையிலேயே தி.மு.க. அரசு கலைக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு விட்டாலும், 1976-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் கூட, அப்போது எனக்கு அனுப்பப்படவில்லை. அந்த கோட்டம் திறக்கப்பட்ட நாளன்று, "கோட்டம் திறக்கப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது'' என்ற தலைப்பில் முரசொலியில் இரண்டரை பக்கத்திற்கு நான் உடன்பிறப்பு மடல் ஒன்றினைத் தீட்டியிருந்தேன். இன்று எப்படி "இன்று வாழ்விலோர் திருநாள்'' என்று தொடங்கி கடிதத்தை எழுதுகிறேனோ, அதுபோலவே அன்றும் "இன்று சென்னையில் ஒரு விழா! திருவிழா! திருமிகு விழா! திருவள்ளுவர்க்கு எடுக்கும் விழா'' என்று தொடங்கி எழுதியிருந்தேன். அந்த கடிதத்தின் ஒரு சில பத்திகளை மட்டும் இப்போதும் அது பொருந்தும் என்பதால் இங்கே சுட்டிக் காட்டுகிறேன்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய்- காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய்- வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய்- மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய்- நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய்- எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படுகிறது.

மாசறு பொன்னாக, வலம்புரி முத்தாக, காசறு விரையாக, கரும்பாக, தேனாகத் திகழ்கின்ற திருக்குறளுக்கு விழா என்றால், உலகப் பந்தின் மீது எந்த மூலையில் இருக்கிற தமிழனும் நெஞ்சு புடைத்து நிற்பான்- மகிழ்வான் -தகதகவெனக் குதிப்பான்- தண்மதி கண்ட ஆம்பலாகும் அவன் உள்ளம் -தாமரை, கதிர் கண்டது போன்ற துள்ளல் எழும் என்பதில் ஐயமுண்டோ?

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கின்ற உலகத் தமிழ்மறைக் கன்றோ பெருமை சேர் விழா, தாயகத்து மண்ணில் திகழ்கின்றது.

இந்த விழா நாள் என்று வரும்? இன்றே வராதா? என்று எத்தனை நாள் காத்திருந்தோம் நாம்! அந்த நாள் தானே இந்த நாள்!

"கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'' என்று இடைக்காடர் கூற, "அல்ல, அல்ல, அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்'' என்று அவ்வையார் திருத்தம் கூறியதாகப் புகழப்படும் பொய்யா மொழிக்கல்லவா இன்று விழா! புத்தொளி பாய்ச்சிய புலவனுக்கல்லவா விழா!

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கிற இடம், சலுகையால் பெறக்கூடியது அல்ல! எது நேர்ந்தாலும், என்ன நேர்ந்தாலும் மறைக்க முடியாத இடம்! அந்த நம்பிக்கையுடன் தான் இன்று நடக்கும் வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன்.

உயிர் வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து பிறந்த குழந்தையைச் சுமந்ததையும் இன்பமாகக் கருதி, பேற்றுக் கால வேதனையையும், இனிய வேதனையாகக் கொண்டு, பாலூட்டிச் சீராட்டிப் பழ முத்தம் சுளை சுளையாய்த் தந்து, பள்ளிக்கு அனுப்பி பின்னழகும், முன்னழகும் பார்த்துக் களித்து, பருவமடைந்த பின்னர் வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆசைக் கிள்ளைக்கு இனிய திருமண விழா நடைபெறும்போது, தாலி கட்டும் காட்சியினைக் காண முடியாமல் மணப் பந்தலுக்கு வெளியே நிற்கின்ற தாயின் மனதில் ஒரு விதத் தவிப்பு இருந்தாலும், தன் அன்புச் செல்வத்துக்கு நடைபெறும் மணவிழா குறித்த மகிழ்ச்சி பொங்கிடத்தானே செய்யும்!

என் தங்க உடன்பிறப்பே! அந்த தாயின் மகிழ்ச்சியைத்தான் பெறுகிறேன் இன்று! ஆம் - என் வாழ்நாளின் குறிக்கோள்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டத்திறப்பு விழாவை அகக் கண்ணால் காணுகிறேன், ஆனந்தப் பள்ளு பாடுகிறேன்.

உடன்பிறப்பே, அன்றையதினம் நான் அடைந்த அதே மகிழ்ச்சியைத்தான் இன்றும் அடைகின்றேன். அடுத்து, 31.12.1975 அன்று கூடிய தி.மு.க. அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 75 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த மாதமே தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் 1989-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. அரசு ஏற்பட்டவுடன் 25.3.1989 அன்று நான் படித்த நிதி நிலை அறிக்கையில் குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்பது பற்றி மீண்டும் அறிவித்தேன். 6.9.1990 அன்று நானே நேரில் சென்று குமரி முனையில் வள்ளுவர் சிலை அமைப்புப் பணியைத் தொடங்கி வைத்தேன். 1991-ல் தி.மு.க. அரசு மாறியது. வள்ளுவர் சிலை அமைப்பு பணியும் சுணங்கியது.

நான்காவது முறையாக முதல்-அமைச்சராக நான் பொறுப்பேற்றதற்கு பிறகு 25.6.1997 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் முடிவெடுக்கப்பட்டு, போதிய நிதி ஒதுக்கப்பட்டு - சுமார் ஒன்பது கோடி ரூபாய் செலவில் 133 அடி உயரமுள்ள வள்ளுவரின் சிலை நிர்மாணிக்கப்பட்டு 1.1.2000 அன்று தி.மு.க. ஆட்சியிலே திறந்து வைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக அது கருதப்பட்டு, உலகத்திலிருந்து வருபவர்கள் எல்லாம் அதனை அன்றாடம் கண்டு களித்து வருகிறார்கள்.

"சுனாமி'' பேரலைக்கே ஈடு கொடுத்து அந்த சிலை தமிழனின் பெருமையை இன்று பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த சிலையை அங்கே அமைத்திட எனக்கு பெரிதும் உதவியாக இருந்த சிற்பி கணபதி ஸ்தபதிக்கு நான் பலமுறை நன்றி தெரிவித்திருந்தாலுங் கூட, இந்த மடலிலும் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குமரி முனையில் நடைபெற்ற அந்த இரண்டு நாள் விழாவிலே நான் கலந்து கொண்டபோது - மறைந்த கோவை செழியன் அந்த விழாவில் பேசும்போது, பெங்களூரிலே பத்தாண்டு காலமாக திருவள்ளுவருடைய சிலை ஒன்று மூடிக் கிடக்கின்றதே, அது என்னவாயிற்று என்று கேட்டார். அடுத்துப் பேசிய வாழப்பாடி ராமமூர்த்தி, அதற்காக தான் கடிதம் எழுதியதாகவும், அதற்கு பதில் வரவில்லை என்றும் கூறினார். அதை ஏன் கவனிக்கக் கூடாது என்று என் பக்கத்திலே அமர்ந்திருந்த மக்கள் தலைவர் மூப்பனார் என்னைப் பார்த்துக் கேட்டார்.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தனோ, அதைப்பற்றி அந்த மேடையில் கோபாவேசமாகப் பேசினார். அதற்கெல்லாம் பிறகு நான் அந்த விழாவிலே முடிவுரை ஆற்றும்போது, "நான் ஒரு உறுதி எடுத்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் சென்னை மாநகரில் வந்து பேசியபோது, "தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி விரைவிலே எங்கள் ஊருக்கு வரவேண்டும், ஒரு விழாவிலே கலந்து கொள்ளவேண்டும்'' என்று ஒரு கோரிக்கை வைத்தார். நான் அதற்கு பதிலளித்துப் பேசும்போது, "பெங்களூருக்கு ஒரு விழாவிற்காக நான் வருவதென்றால், நான் அங்கே வந்து இனி கலந்துகொள்கின்ற முதல் விழா, அந்த திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவாக இருந்தால்தான் வருவேனே தவிர, வேறு எந்த விழாவிற்காகவும் நான் அடியெடுத்து வைக்கமாட்டேன்'' என்று சொல்லிவிட்டேன் என்று கூறியிருந்தேன்.

உடன்பிறப்பே, பெங்களூரு தமிழ்ச் சங்கம், பெங்களூருவில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு முன்பு அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிர்மாணித்து -1.9.1991 அன்று அப்போது கர்நாடக மாநில முதல்-அமைச்சராக இருந்த பங்காரப்பா தலைமையில்- கர்நாடக மாநில அமைச்சராக இருந்த கே.ஜே.ஜார்ஜை கொண்டு திறந்திட ஏற்பாடுகளைச் செய்தது. ஆனால் 30.8.1991 அன்று பெங்களூரு நீதிமன்றம் விதித்த தடை காரணமாக அப்போது அங்கே திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. சிலை அமைப்பதற்கு பெங்களூரு மாநகர் மன்றம் வழங்கியிருந்த அனுமதியை 21.9.1991 அன்று திரும்பப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகு பலமுறை அந்த சிலையைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது நடைபெறவே இல்லை.

இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே தான் கர்நாடக அரசும், அதன் முதல்-மந்திரி எடிïரப்பாவும் பெரு முயற்சியெடுத்து அடுத்தடுத்துள்ள மாநிலங்கள் நல்லுறவுடன் இருக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்தோடு இந்த சிலையினை இன்று நிறுவியிருக்கிறார்கள். மணவிழா அழைப்புகளில் எல்லாம் உறவினர்களும், நண்பர்களும் முன்கூட்டியே வந்திருந்து வாழ்த்த வேண்டுமென்று அச்சிடுவார்கள். அதற்கேற்ப நானும், இந்த விழாவிலே உள்ள மகிழ்ச்சி காரணமாக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பெங்களூருக்கு வந்திருந்து திருவள்ளுவரின் சிலையினை திறந்து வைக்கவிருக்கிறேன். எனவே "இன்று வாழ்விலோர் திருநாள்'' என்று நான் தொடக்கத்தில் எழுதியது பொருத்தம் தானே?

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

சனி, 8 ஆகஸ்ட், 2009


நல்ல நூல்கள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கும்: பழ.கருப்பையா



ஈரோடு,ஆக. 7: நல்ல நூல்கள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்தவை என்றார் சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான பழ.கருப்பையா.மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் "யோசிக்கும் வேளையில்' என்ற தலைப்பில் வியாழக்கிழமை இரவு அவர் பேசியது: பூங்குன்றனார் எழுதியது 14 வரிகள்தான். அதில் கூறப்பட்டுள்ள ""யாதும் ஊரே; யாவரும் கேளிர்'' என்ற வரிகள்தான் தமிழர்களின் சிந்தனையாக உலகெங்கும் அறியப்பட்டுள்ளது. எனவே குறைந்த அளவில் எழுதினாலும், நல்ல விஷயங்களை எழுதுவது சிறந்தது.மக்களுக்குப் பயனில்லாததை எழுதுவதைவிட, அதை நிறுத்திவிடுவது நல்லது. இதேபோல் மக்களும் நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும். முதலில், படிக்கின்ற பழக்கம் உருவாகும்போது, தகுதியற்ற நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மிடமிருந்து படிப்படியாக அகன்றுவிடும். பின்னர் சிறந்த நூல்களை மட்டுமே வாசிக்கும் நிலை உருவாகும்.நாட்டுப்பற்று, தாய்மொழிப்பற்றை ஊட்டும் நூல்களை அதிகம் படிக்க வேண்டும். தொடர்ந்து நூல்கள் படிப்பது நம்மிடம் பல நல்ல மாற்றங்களை உருவாக்கும். சிறந்த சிந்தனைகள் வாழ்வின் போக்கையே மாற்றியமைக்கக் கூடியவை.திருவள்ளுவருக்கு... உலகின் மிகச்சிறந்த நூல் திருக்குறள்தான். இதை எழுதிய வள்ளுவருக்கு சிலை வைக்க, பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருப்பது வேதனைக்குரியது. தமிழர்கள் அறிந்திராத கன்னடக் கவிஞரின் சிலையை தமிழகத்தில் வைத்தால்தான், பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க முடியும் என்று கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. வள்ளுவரின் சிந்தனைக்கு மேலான சிந்தனை எதுவுமே இல்லை. சிலைகள் என்பவை வெறும் அடையாளங்கள்தான். கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு 133 அடிக்கு சிலை வைத்துவிட்டதாலேயே, மக்கள் அனைவரின் மனதிலும் திருக்குறள் புகுந்துவிட்டது என்று கூற முடியுமா? எனவே பெங்களூருவில் வள்ளுவருக்கு சிலை வைக்காவிட்டால் தமிழுக்கு நஷ்டமேற்பட்டுவிடப் போவதில்லை.தற்போது ஒழுக்கம் இல்லாத சமுதாயம் உருவாகி வருவது கவலைக்குரியது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலைநடக்கும் என்பது வேதனையளிக்கும் நிகழ்வு. கட்டுப்பாடு, ஒழுக்கம், நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் தலைமுறையின் தேவை அவசியமாகியுள்ளது.அளவுக்கு அதிகமான பணம் சம்பாதிப்பது மட்டும்தான் குறிக்கோள் என்ற லட்சியத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு போதுமென்ற மனம், பகிர்ந்து வாழ்தல் ஆகியவற்றைப் புரியவைக்க வேண்டும் என்றார் பழ.கருப்பையா. தொழிலதிபர் கேகேஎஸ்கே.ரபீக் தலைமை வகித்தார். "மேவும் விரல் யார் உனக்கு?' என்ற தலைப்பில் பத்திரிகையாளர் சுதாங்கன் பேசினார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், டாக்டர் கே.எம்.அபுல் ஹசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.