சனி, 27 நவம்பர், 2010

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை

பிற்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை முதலான துறைகள் மூலம் இப்பொழுதும் அரசு ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்துத்தான் வருகிறது. கேட்க வேண்டியதை வெளிப்படையாகக் கேட்க வேண்டும். ௨.) சிறுபான்மையர் என்ற ஒதுக்கீட்டில் கல்வி நிறுவனங்கள் தொ டங்குபவர்கள் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் எத்தனை விழுக்காட்டினரோ  அந்த அளவிற்கு மட்டுமே அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளில்
௭௫ விழுக்காட்டினர் சிறுபான்மையர் என்ற போர்வையில் இசைவு வாங்கி நடத்துபவர்களே. இந்நிலை மாறி அவர்களின்பொது இசைவிற்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை: அரசியல் கட்சிகள் பேச பயப்படுவது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

First Published : 27 Nov 2010 03:59:03 AM IST


சிதம்பரம், நவ. 26: சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கி பாதித்துவிடும் என தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்குவது போல் ஏழை இந்து சமுதாய மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து பேச பயப்படுகின்றன என பாரதிய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.÷பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான தாமரை யாத்திரை குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.÷இக் குழு சிதம்பரம் நகருக்கு வெள்ளிக்கிழமை மாலை வருகை தந்தது. அப்போது வடக்குமெயின்ரோட்டில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:÷இஸ்லாமிய, கிறிஸ்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் ஏழை இந்து சமுதாயத்தில் உள்ள மாணவர்களுக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை உதவித்தொகை வழங்க வேண்டும்.÷சிறுபான்மையினருக்கு வழங்குவது போல் இந்து இளைஞர்களுக்கு குறைந்த வட்டியில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும்.÷சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதித்துவிடும் என தமிழகத்தில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இப்பிரச்னையை எடுத்து பேச பயப்படுகின்றன.÷கடந்த 4 ஆண்டுகளாக இப்பிரச்னை குறித்து வாக்குவங்கியை பற்றி கவலைப்படாமல் பாஜக மட்டும்தான் போராடி வருகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.29-ல் போராட்டம்: நிதின்கட்கரி பங்கேற்புரதயாத்திரை குழு ஜனவரி 29-ம் தேதி சென்னையில் முடிவடைகிறது. அங்கு இப்பிரச்னை குறித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.÷இதில் பாஜக அகில இந்திய தலைவர் நிதின்கட்கரி பங்கேற்கிறார். இப்போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க இந்த யாத்திரை மூலம் வேண்டுகோள் விடுத்து வருகிறேன் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.÷நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் எம்.சீனுவாசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் க.எழிலரசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சு.ஆதவன், மாநில விவசாயி அணி செயலாளர் கே.வி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக