ஞாயிறு, 22 மே, 2011

computer operating by eye movements :விழி அசைவுக்கு ஏற்பச் செயல்படும் கணினி

பாராட்டுகள். செப்பமான முறையி்ல் குறைவான கட்டணத்தில் இவ்வகைக் கணிணிகள் கிடைக்கவும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசே மிகக் குறைந்த சலுகை விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


விழி அசைவுக்கு ஏற்ப செயல்படும் கணினி

First Published : 22 May 2011 03:16:55 AM IST


திருவண்ணாமலை, மே 21: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மாணவிகள், விழி அசைவுக்கு ஏற்பட செயல்படும் கணினியை வடிவமைத்துள்ளனர்.அருணை பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பின் நிறைவாக புதிய கண்டுபிடிப்புகளை வடிவமைத்து சமர்ப்பிக்கின்றனர். அதற்கு ஏற்ப அவர்களுக்கு மதிப்பெண்களும் தரப்படுகின்றன. மேலும் சிறந்த வடிவமைப்புகள் தேசிய அறிவியல் மாநாட்டுக்கும், இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்துக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு கணினியை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இதைக் களையும் வகையில் அருணை பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு இறுதி ஆண்டு மாணவிகள் சோ.கெüரி பிரியா, ஜீ.ஜீவிதா, ரா.மிரோஷினி ஆகியோர் 4 மாதங்கள் கடும் முயற்சியில் கண்களாலேயே கட்டுப்படுத்தப்படும் கணினியை வடிவமைத்துள்ளனர். கணினியின் மெüஸ் கருவியை இயக்குவதில் சிரமம் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இக் கண்டுபிடிப்பு உதவும்.இதுதொடர்பாக அம்மாணவிகள் கூறியதாவது: எங்கள் துறை பேராசிரியர்கள் உதவியோடு இக்கணினியை வடிவமைத்துள்ளோம். கண் மற்றும் முக அசைவைக் கொண்டு (முக அசைவில் குறிப்பாக மூக்கு) இயங்கும் வகையில் இக்கணினி உருவாக்கப்பட்டது. இத்தகைய அசைவுகளை மின்திரையில் பதிவு செய்து அதற்கேற்ப கணினி இயங்குகிறது. மேலும் வலது கண் சிமிட்டல் மூலம் வலது புறமும், இடது கண் சிமிட்டல் மூலம் இடதுபுறமும் மெüஸ் கர்ஸர் இயக்கப்படுகிறது.கைகள் செயலிழந்த மாற்றுத் திறனாளிகள் தங்களை கண்கள் மூலம் கணினிகளை இயக்கி தங்கள் கட்டளைகளை நிறைவேற்றலாம். இந்த கணினி வடிவமைக்க எங்களுக்கு ரூ.18 ஆயிரம் செலவானது. அதிகளவில் தயாரித்தால் தயாரிப்புச் செலவு குறையும் வாய்ப்புள்ளது என்றனர்.இதேபோல் தனிப்பட்ட அடையாள எண் முறையில் மனிதர்களை வானொலி அதிர்வெண் மூலம் சான்றளிக்கும் முறை, தடைகள் மற்றும் போக்குவரத்து இயக்கத்தை கண்டறியும் பார்வையற்றோர் கைத்தடி, வளாகத்தின் உள்ளே செல்போனை கண்டுபிடிக்கும் கருவி, வாகனம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கருவி, வாகன விபத்து உயிர்காக்கும் திட்டம் போன்றவற்றையும் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக