ஞாயிறு, 16 ஏப்ரல், 2017
நாளை (திங்கள், 17.04.) நக்கீரனைப் பாருங்கள்!
வியாழன், 1 டிசம்பர், 2011
வியாழன், 3 நவம்பர், 2011
அண்ணா நூற்றாண்டு நூலகம் படங்கள்
| வியாழக்கிழமை, 3, நவம்பர் 2011 (0:39 IST)
கருத்துக்கள்(10)
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செவ்வாய், 20 ஜூலை, 2010
தமிழில் எழுத்துச் சீரமைப்பு வேண்டும், வேண்டாம் என்கிற வாத-பிரதிவாதங்கள் தமிழ் எழுத்துலகில் சமீபகாலமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சீரமைப்பு வேண்டும்..
வியாழன், 14 ஜனவரி, 2010
தைப் பொங்கல் புத்தாண்டில் தமிழீழ அரசுக்கான பயணம் தொடரட்டும்!
தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். ஆனால் இன்று எமது தாயக உறவுகள் இந்தப் பொங்கல் நன்னாளை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியாத மன நிலையில் இருக்கிறார்கள்.
குறிப்பாக வன்னி முகாம்களில் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்னமும் முடங்கிக் கிடக்கும் ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான மக்களும் போர் காரணமாக வடக்கிலும் – கிழக்கிலும் இடம்பெயர்ந்து முகாம்களிலும் உற்றார் உறவினர்களோடும் வாழும் இரண்டு இலட்சம் மக்களும் பொங்கல் புத்தாண்டை கொண்டாடும் மன நிலையில் இல்லை. பிறக்கப் போகும் இந்தத் தைப் பொங்கல் புத்தாண்டுக்குப் பின்னராவது எமது உறவுகள் வாழ்வில் எதிர்காலத்துக்கான நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என நம்புகிறோம்.
உலகளாவிய ஏழு கோடி தமிழர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தன்மானத்தோடும் செல்வச் செழிப்போடும் வாழும் நாளே எமக்கெல்லாம் இனிய பொங்கல் புத்தாண்டு ஆகும். .
பொங்கல் புத்தாண்டு விழாவானது களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும், பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழா ஆகும்!
அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர்.
உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இ;ந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.
பொங்கல் நாளை “மகரசங்கிராந்தி”யாகப் புராணிகர்கள் மாற்ற முற்பட்டபோதும் அடிப்படையில் பொங்கல் உழவர் விழாவாகவே உயர்ந்தும் நிலைத்தும் உள்ளது.
ஞாயிறு வணக்கம் இயற்கை வழிபாடு ஆகும். உலக நாகரிகங்கள் எல்லாவற்றிலும் ஞாயிறு வணக்கம் இருந்ததற்கு சான்றுகள் இருக்கின்றன. உலகில் வாழும் உயிர்களுக்கு ஆதாரமாக ஞாயிறு இருப்பதால் ஆதி மனிதன் ஞாயிற்றைக் கடவுளாக உருவகப்படுத்தி வணங்கிப் போற்றி வந்ததில் வியப்பில்லை.
வேத காலந்தொட்டு இந்திரனுக்கும், அக்கினிக்கும் அடுத்த தெய்வமாக ஞாயிறு விளங்குகின்றான். ஒரு காலத்தில் ஞாயிறு முதல் தெய்வமாகவே வணங்கப்பட்டு வந்தது. அதுவே இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான சௌர மதம் ஆகும். பிற்காலச் சோழர் காலத்தில் சூரியனுக்குத் தனிக் கோவில்கள் எழுப்பப்பட்டன.
முத்தமிழ்க் காப்பியங்களில் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் -
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேருவலம் திரிதலான்.
(சிலம்பு 1, 4-6)
என ஞாயிற்றை வாழ்த்திப் போற்றுகிறார். காவிரி ஆற்றையுடைய நாடனாகிய சோழனது ஆணைச் சக்கரம் போன்று பொன் உச்சியை உடைய இமயமலையை வலம் வருதலால் ஞாயிற்றை வணங்குவோம்! ஞாயிற்றை வணங்குவோம்!
தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில், சமயசார்பற்ற எல்லோருக்கும் பொதுவான விழா பொங்கல் திருநாளாகும். பொங்கல் விழாவில் கற்பனைக்கோ, புனைவுகளுக்கோ, அருவருக்கத்தக்க, பகுத்தறிவுக்குப் பொருந்தாத கட்டுக் கதைக்கோ இடமில்லை.
தைப்பொங்கல் திருநாளுக்கு வானவியல் அடிப்படையும் இருக்கிறது. தென்திசை நோக்கி நகர்ந்த கதிரவன் (பூமியில் இருந்து பார்க்கும்போது) இந்நாளில் (யனவரி 14) வடதிசை நோக்கி பன்னிரண்டு ஓரைகளில் (இராசிகளில்) ஒன்றான மகர ஓரையில் புகுகின்றது.
உண்மையில் ஞாயிறு மகர ஓரையில் புகும் நாள் டிசெம்பர் 21 ஆகும். சித்திரை நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து காலத்தை கணிக்கும் இந்திய சோதிடம் புவி தனது அச்சில் சுழலும் போது ஈர்ப்புவிசையினால் ஏற்படும் பின்னோட்டத்தை (precession of the equinoxes) கணக்கில் எடுக்காததால இந்தத் தவறு நேரிடுகிறது. புவி ஞாயிறு மற்றும் நிலா இரண்டின் ஈர்ப்புக் காரணமாக தனது அச்சில் தள்ளாடுகிறது (wobble), இதனால் புவியின் சுற்று வேகம் தடைபடுகிறது. அதன் அச்சு மேற்கு நோக்கி 50.26 ஆர்க் வினாடி தள்ளப்படுகிறது. 71.5 ஆண்டுகளில் ஒரு பாகை தூரம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது இன்று 24 பாகை அல்லது 24 நாள் வேற்றுமை ஏற்பட்டுவிட்டது. இதனை அயனாம்சம் எனக் குறிப்பிடுகிறார்கள். புவி தனது அச்சில் 23.5 பாகை சாய்ந்திருப்பதால்தான் பருவங்கள் ஏற்படுகிறது.
தமிழர்கள் கொண்டாடும் தீபாவளி தமிழ் அரசன் ஒருவனையே கடவுள் அவதாரம் சூழ்ச்சியால் கொலை செய்த நாளாகும்.
புராணக் கதைகள் எல்லாமே பொதுவாக ஆரிய-திராவிடப் போராட்டங்களைச் சித்தரிப்பதாகும். கொல்லப்படுகிற திராவிடர்கள் அசுரர்கள், இராட்சதகர்கள், இயக்கர்கள் என இழிவாகச் சித்தரிக்கப்பட்டார்கள். அவர்களை பெரும்பாலும் கடவுள் அவதாரங்கள் சூழ்ச்சியாலேயே கொலை செய்தார்கள். திருப்பால் கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த கதை, மாபலி மற்றும் இரணியன் கதைகள் இதற்கு எடுத்துக் காட்டாகும்.
பொங்கல் நாள் விடுதலைப் புலிகளின் தலைசிறந்த தளபதி கேணல் கிட்டு மற்றும் அவரது தோழர்களான மேஜர் வேலன், கேணல் குட்டிஸ்ரீ, கடற்புலி கப்டன் றோசான், கடற்புலி கப்டன் அமுதன், கடற்புலி லெப். நல்லவன், கடற்புலி கப்டன் குணசீலன், கடற்புலி கப்டன் நாயகன், கடற்புலி கப்டன் ஜீவா வங்கக் கடலில் வீரமரணம் எய்திய நினைவு நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு அடுத்த நாள் (தை 02) பொதுமறை தந்த திருவள்ளுவர் பிறந்த நாள். அவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என தமிழ் அறிஞர்களால் கொள்ளப்பட்டு தை 02 திருவள்ளுவர் ஆண்டாகக் (2032) கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழ் நாட்டில் விடுமுறை நாளாகும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. இந்தப் புத்தாண்டில் ஆவது தமிழீழ உறவுகளது வாழ்வில் அல்லல்கள் நீங்கி, துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து ஒளி பிறக்கும். இன்பம் சேரும் மகிழ்ச்சி பொங்கும் என எதிர்பார்ப்போமாக!.
தமிழர்கள் நிம்மதியோடும் பாதூகாப்போடும் சுதந்திரத்தோடும் வாழ வேண்டும் என்றால் எங்கள் தாயக மண்ணில் தமிழீழ அரசை மீள்கட்டியெழுப்ப வேண்டும். அந்த நம்பிக்கையுடன் பொங்கல் புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம்.
எங்கள் சமுதாயம்
ஏழா யிரமாண்டு
திங்கள்போல் வாழ்ந்து
செங்கதிர்போல் ஒளிவீசும்
மங்காத போர்க்களத்தும்
மாளாத வீரர்படை
கங்குல் அகமென்றும்
காலைப் புறமென்றும்
பொங்கி விளையாடிப்
புகழேட்டிற் குடியேறித்
தங்கி நிலைத்துத்
தழைத்திருக்கும் காட்சிதனைக்
கண்காண வந்த
கலைவடிவே நித்திலமே!
பொங்கற்பால் பொங்கிப்
பூவுதிர்ப்பாய் தைப்பாவாய்! (கவியரசு கண்ணதாசன்)
அடுத்த ஆண்டு தமிழீழத்தில்!
- நக்கீரன்
(Visited 47 times, 47 visits today)வெள்ளி, 20 நவம்பர், 2009
தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் கருணாநிதி
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.
இது தொடர்பாக இந்திய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி:-
மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை
இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
“விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.
நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
“எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?’ என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.
“இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்’ என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.
இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலியாருக்குத் தெரியப் போகிறது?” என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Dinamani – November 18,2009)
கருணாநிதியின் மேற்படி பாசாங்கு அறிக்கை தொடர்பாக “நக்கீரன்” வெளியிட்டுள்ள விளக்கம்
கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.
விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் – வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி – தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது “விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது” எனப் புதுக் கதை பேசுகிறார்.
வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி “ஆதரவு வழங்கினோம்” என அப்பட்டமான பொய் சொல்கிறார்.
இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.
இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள்.
இந்த ரணில் விக்கிரமசிங்கதான் . தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.
விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர்.
மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.
இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான் தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள். இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும் அடிப்படையில் சிங்கள – பெளத்த இனமத வெறியர்கள்.
விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.
இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும் விடுதலையில் (17-11-2009) வந்த செய்தி.
கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயல-ரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.
இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.
எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.
நக்கீரன்
(Visited 234 times, 36 visits today)
உங்களின் கருத்துக்களை தமிழில் தெரிவிக்கவும்
முத[ல்வர்]லை கண்ணீர் விடுகிறது.விடுதலைப்புலிகள் பற்றி பேச,கருத்து சொல்ல,விமர்சனம் செய்ய தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தத் தலைவனுக்கும் தகுதியும்,யோக்கியதையும்,பாத்தியதையும் கிடையாது.
களத்தில் நின்றவர்கள்- இறுதிவரை-அவர்கள்.முப்படை வைத்து அரசை நடாத்தியவர்கள் அவர்கள்.மக்களைக் காத்தவர்கள்,மக்களுக்காக மரணித்தவர்கள்.
ஜனநாயகத்தைப் பணநாயகமாக்கி பதவிபொறுக்கி,தமிழினத்தைக் காட்டிக்கொடுத்துக் சோனியா காங்கிரசை நக்கிப்பிழைக்கும் துரோகிகளுக்கும், அதுகள் விட்டெறியும் துண்டுகளைப் பொறுக்கும் அடிவருடிகளுக்கும் இங்கிருந்துகொண்டு பேச
உரிமையும்,யோக்கிதையும் எள் முனை அளவுகூட கிடையாது. இன்றைக்குக் கண்ணீர் வடிக்கின்றாயே,
உனக்குப் புலிகளைப் பிடிக்காது- ஆமாம், எந்த அயோக்கியனுக்குத்தான் யோக்கியனைப் பிடிக்கும். அவர்களைவிடு. நீதான் உலகத் தமிழினத்தின் முகவரியாயிற்றே அந்தமக்கள் என்னபாவம் செய்தார்கள் மே17 விழிகள் மூடாமல் மேலிடத்தோடு தொடர்புகொண்டு கணிமொழி பேசினாராமே, பக்கத்தில் ஃபாதர் கஸ்பர் இருந்தாராமே,துணைக்கு சுபவீயும் தூங்காமல் இருந்தாராமே இவ்வளவு பேரும் சேர்ந்து வெள்ளைக்கொடியோடு போகச்சொல்லி நடேசனையும்,பூலித்தேவனையும்,அந்தமக்களையும் பச்சைப் படுகொலை செய்வித்தீர்களே பாவிகளே!
உங்களுக்கு உறுத்தவில்லையா? இப்போது “பொளந்து ஏர் கட்டுகிறாயே” எப்போது,என்றைக்கு புலிகளை ஆதரித்தீர்கள்? டெசோ பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? எங்கே தன்னை மிஞ்சிவிடுவார்களோ என்பதற்காக,குதிரை,”மதுரையில்” கீழேதள்ளியது மட்டுமல்ல குழியையுமல்லவா பறித்து மண்ணையும் தள்ளி மூடியது.இவர் இதற்காகவே பதவி துறந்தாராம், பதவி இழந்தாராம்.கேட்கிறவன் கேட்டால் எருமைமாடு கூட ஏரோப்பிளேன் ஓட்டும்.பாவிகளே,உங்கள் பதவிக்காகவும்,பவுசுக்காகவும் ஒரு இனத்தையே காட்டிக்கொடுத்து சுகம் அனுபவித்துக்கொண்டு, தந்தைபெரியார் சொல்வதுபோல,”குச்சிக்காரிக்குக் கிராக்கி இல்லாததால் கற்புப் பிரச்சாரம் செய்ய விண்ணப்பம் போடுகிறது போல” இப்போது வியாகியாணம் பேசுகிறாய். உங்களை எல்லாம் முத்துக்குமாரனின் பொசுங்கிய மயிரு கூட மன்னிக்காது.