மீனவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனவர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 அக்டோபர், 2013

மீனவர் துன்பம்: இந்தியத் தூதரகம் மீது வைகோ குற்றச்சாட்டு

மீனவர் துன்பம்: இந்தியத் தூதரகம் மீது வைகோ குற்றச்சாட்டு

தமிழ் இந்துComment   ·   print   ·   T+  
சொந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து அவர்களின் உடைமைகளை முறையாகப் பாதுகாத்து தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமையில் இருந்து தவறியது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சொந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து அவர்களின் உடைமைகளை முறையாகப் பாதுகாத்து தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமையில் இருந்து தவறியது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக மீனவர்கள் 1984 ஆம் ஆண்டு முதல் சிங்கள ராணுவத்தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். கடந்த 10.11.1984 அன்று ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி தொடங்கி, இதுவரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஊனமாக்கப்பட்டு அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் முற்றிலும் திட்டமிட்டு சேதமாக்கப்பட்டு, பிழைக்க வழியின்றி முடமாக்கப்பட்டுள்ளனர். வருவாய் ஈட்டும் ஆதாரங்களை அழித்து அவர்களை செயலற்றவர்களாக்கிவிட்டது சிங்கள ராணுவம்.
தங்களுக்கு ஆண்டாண்டு காலமாக வாழ்வளிக்கும் பாரம்பரியத் தொழிலை விட்டுவிட்டு, சாண் வயிற்றுப் பிழைப்பிற்காக கபடமற்ற மீனவ மக்கள் படுகின்ற துயரமும், தொழிலில் ஈடுபடும்போது சிங்கள ராணுவத்தால் அவர்கள் படும் அச்சுறுத்தலும் தாங்கமுடியாத வேதனையைத் தருகிறது.
இத்தகைய கொடுமைகளுக்கு மத்தியில் தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க, கடந்த 26.08.2013 புதன்கிழமை அன்று, இராமநாதபுரம் மாவட்டம்-பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்கள் நான்கு படகுகளில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சிங்கள ராணுவத்தால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர் ஒரே நீண்ட சங்கிலியால் அந்த 35 மீனவர்களும் பிணைக்கப்பட்டு, விலங்கினும் கீழாக நடத்தப்பட்டு நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் பூட்டப்பட்டனர்.
மீனவர்களைக் காணாது பதறும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீருக்கும், பிள்ளைகளின் பரிதவிப்புக்கும் எவரால் ஆறுதல் சொல்ல இயலும்?
இந்த நிலையில், கடந்த 23.09.2013 திங்கள்கிழமை அன்று பந்தளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அம்மீனவர்கள் இன்றுவரை தாயகம் திரும்பவில்லை. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், கொழும்பு போக்குவரத்து காவலர் குடியிருப்புப் பகுதியில் ஓர் அறையில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் நான்கு விசைப்படகுகளையும், மீன்பிடி வலைகளையும் இன்னமும் நீதிமன்றப் பொறுப்பிலேயே வைத்துள்ளனர்.
சொந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து அவர்களின் உடைமைகளை முறையாகப் பாதுகாத்து தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமையில் இருந்து தவறியது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம். இந்திய அரசைப் போலவே அதுவும் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறது.
சுண்டைக்காய் நாடான இலங்கை, தமிழக மீனவர்களைத் தாக்குவதையும், கைது செய்வதையும், சிறையில் பூட்டுவதையும் அவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதையும் கண்டிக்கும் யோக்கியதையோ, விரட்டி அடிக்கும் துணிச்சலோ, எந்த நாட்டை எங்கள் சொந்த நாடென்று நினைக்கிறோமோ அந்த இந்திய நாட்டிடம் இல்லை என்பதைச் சொல்வதற்கே அவமானமாக இருக்கிறது.
இந்த நிலை மாறிட, இந்திய அரசு விரைந்து செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 35 பேரையும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பில் கொண்டுவந்து, உடனடியாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கவும், அவர்களின் விசைப்படகுகளையும், மீன்பிடி வலைகளையும் நீதிமன்றப் பொறுப்பில் இருந்து பத்திரமாக மீட்டு, அவர்களிடம் ஒப்படைக்க விரைந்து முயற்சி மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

புதன், 10 ஜூலை, 2013

இலங்கைத் தூதருக்கு அழ‌ைப்பாணை : செயலலிதா வலியுறுத்தல்

இலங்கை த் தூதருக்கு  அழ‌ைப்பாணை அனுப்ப செயலலிதா வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவது குறித்து இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்படுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது.
சமீபத்தில் 49 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி 25 மீனவர்களும், 6ம் தேதி 24 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனால், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலே முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க இயலாத நிலை உள்ளது. ஆயுதமின்றி, நிராதரவாக இருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், மீன் பிடி வலைகளை அறுப்பதும், கைது செய்வதும் என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே பல கடிதங்கள் வாயிலாக உங்களது கவனத்துக்குக் கொண்டு வந்தும், இலங்கை கடற்படையினர் விஷயத்தில், மத்திய அரசு ஒரு  துறவியைப் போல மௌனம் காத்து வருகிறது.
எனவே, இந்த விஷயம் குறித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, புது தில்லியில் உள்ள இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி, இந்தியா தரப்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் எவ்வித வாய்தாவும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வியாழன், 6 டிசம்பர், 2012

மீனவர் தகுதியைஇழந்திருப்போம்!

சொல்கிறார்கள்:

"காப்பாத்தலேன்னா மீனவர் தகுதியைஇழந்திருப்போம்!'

நீலம் புயலின் போது, தரை தட்டிய பிரதிபா காவேரி கப்பல் ஊழியர்களை காப்பாற்றிய, வடிவேல், கலைமணி, கோபி, மதன், உதயமூர்த்தி ஆகிய மீனவர்களின் அனுபவம்: நீலம் புயல் அடித்த போது, பயங்கரக் காற்றுடன், கடலில் பெரிய அலைகள், ஆக்ரோஷமாக எழுந்தன. மதியம், 1:30 மணியளவில், எங்கள் ஊரூர் குப்பத்தில், கப்பல் தரை தட்டி நின்று விட்டது. உடனே, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம்.இதற்கிடையில் கப்பலில் வேலை செய்த, 25 ஊழியர்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, "லைப் போட்' மூலம், தப்பிக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், அவர்கள் ஏறி வந்த, லைப் போட், பாதி வழியில், இன்ஜின் பழுதாகி நின்று விட்டது. அடுத்த சில நிமிடங்களில், ராட்சத அலையில் சிக்கிய அந்த போட், கடலில் குப்புறக் கவிழ்ந்தது. அதிலிருந்து, கப்பல் ஊழியர்கள் தண்ணீரில் தத்தளித்தனர்; நீந்தி வந்துவிடுவர் என, நம்பிக்கையுடன் இருந்தோம்.

அந்த சமயம், "கப்பல் ஊழியர்கள் ஆபத்தில் உள்ளனர், உதவி வேண்டும்' என்று கூறி, வானத்தை நோக்கி சுட்டனர். அதில் ஒன்று, நாங்கள் இருக்கும் பகுதி நோக்கி வந்தது. உடனே, அவர்களைக் காப்பாற்ற, அதிகாரிகள் அனுமதியுடன், படகின் மூலம், கிளம்பினோம்.அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றால், நாமெல்லாம் மீனவனாக இருக்கவே, தகுதியே இல்லை என, தோன்றியது. கடலுக்குள் போகும் போது, உயிருக்கு போராடுபவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது. ஓரளவு கப்பல் அருகில் நெருங்கி விட்டோம்; ஆனால், அலையின் சத்தத்தில், கடலில் தத்தளித்தவர்களுக்கு கேட்கவில்லை.பின், கஷ்டப்பட்டு ஐந்து பேரை மட்டும், கரைக்கு கொண்டு வந்தோம். ஊர் மக்களும், கடற்படையும் சேர்ந்து மற்றவர்களை மீட்டனர். நாங்கள் செல்வதற்கு முன்னரே, ஐந்து பேர் கடலில் மூழ்கி இறந்துவிட்டனர்.

எங்கள் ஊர் பெயரே, இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த சம்பவத்திற்குப் பின், எங்கள் மூலம், தெரிய ஆரம்பித்துள்ளது. ஊரில் அனைவரும் எங்களை பெருமையாக பார்க்கின்றனர். நாங்கள் செய்த செயல் மனதிற்கு நிறைவாக உள்ளது.