இலங்கைத் தூதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைத் தூதர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 ஜூலை, 2013

இலங்கைத் தூதருக்கு அழ‌ைப்பாணை : செயலலிதா வலியுறுத்தல்

இலங்கை த் தூதருக்கு  அழ‌ைப்பாணை அனுப்ப செயலலிதா வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவது குறித்து இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்படுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது.
சமீபத்தில் 49 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி 25 மீனவர்களும், 6ம் தேதி 24 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனால், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலே முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க இயலாத நிலை உள்ளது. ஆயுதமின்றி, நிராதரவாக இருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், மீன் பிடி வலைகளை அறுப்பதும், கைது செய்வதும் என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே பல கடிதங்கள் வாயிலாக உங்களது கவனத்துக்குக் கொண்டு வந்தும், இலங்கை கடற்படையினர் விஷயத்தில், மத்திய அரசு ஒரு  துறவியைப் போல மௌனம் காத்து வருகிறது.
எனவே, இந்த விஷயம் குறித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, புது தில்லியில் உள்ள இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி, இந்தியா தரப்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் எவ்வித வாய்தாவும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திங்கள், 8 ஏப்ரல், 2013

இலங்கைத் தூதருக்குப் புகவுச்சீட்டு தராமல் இழுத்தடிப்பு

துணைத் தூதருக்கு புகவுச்சீட்டு  வழங்குவதில் காலத் தாழ்ச்சி: இலங்கை குற்றச்சாட்டு

இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு இந்திய அரசு விசா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியது: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியாக ஏ.சபருல்லா கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு விசா வழங்கக் கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விசா மனு ஏற்கப்பட்டதா, இல்லையா என்பதை இதுவரை இந்திய அரசு தெரிவிக்கவில்லை. இதனால், சபருல்லா கான் துணைத் தூதராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற தாமதம் ஏற்பட்டதில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சன்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செயலாளர் கே.அமுனுகமா கூறுகையில், "இந்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்' என்றார்.
தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


 

கொழும்பு : சென்னையில் நியமனம் செய்யப்பட்டுள்ள துணை தூதருக்கு, விசா தராமல், இந்தியா காலம் கடத்துவதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில், 2009ல் நடந்த சண்டையின்போது, மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்காத ராஜபக்ஷே அரசுக்கு, தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு சுற்றுலா வந்த இலங்கை பயணிகளும், புத்த பிட்சுகளும் சமீபத்தில் தாக்கப்பட்டனர்.சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன், அடிக்கடி போராட்டம் நடப்பதால், கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு தூதரகத்தை மாற்ற, இலங்கை அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே, சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு, துணை தூதராக சபருல்லா கான் என்பவரை, அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.இவருக்கு விசா வேண்டி, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து, இலங்கை வெளியுறவு செயலர் அமுனகாமா கூறியதாவது:இலங்கை தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சபருல்லா கானுக்கு விசா கிடைத்த பின், சென்னையில் பொறுப்பேற்பார். ஆனால், அவருக்கு இதுநாள் வரை விசா கிடைக்கவில்லை. இந்திய அரசு, இதுவரை விசா தருவதில், இவ்வளவு தாமதம் காட்டியதில்லை. எனினும், விசா கிடைக்கும் வரை காத்திருப்போம்.இவ்வாறு, அமுனகாமா கூறினார்.

இதுவரை, இலங்கை கூறிய கருத்துகளை ஏற்று வந்த இந்திய அரசு, சமீபகாலமாக, அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம், அதிபர் ராஜபக்ஷேயின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இந்தியாவுக்கான துணை தூதருக்கு விசா வழங்க மறுக்கப்படுகிறது என, அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதன், 27 மார்ச், 2013

இலங்கை த் தூதர் கரியவாசத்தைக் கைது செய்க: தலைமையமை ச்சருக்கு வைகோ மடல்

இலங்கை த் தூதர் கரியவாசத்தைக் கைது செய்க:  தலைமையமைச்சருக்கு வைகோ கடிதம்

இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில்...
இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், தன்னுடைய மின்னஞ்சல் மூலம் ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களக் கொடியோருக்கு ஆதரவாகவும், இந்தியாவில் உள்ள ஒரிசா, வங்காளம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்று, அக்கிரமமான ஆலகால விடம் தோய்ந்த ஒரு அறிக்கையை, மார்ச் 19 ஆம் தேதி தயாரித்து, கொழும்பில் உள்ள ஊடக மையத்தின் மூலம், இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி உள்ளார்.
அதில், சிங்களவர்கள் இந்தியாவின் கலிங்கம், வங்கம் பகுதிகளின் பூர்வீக மக்கள் என்றும், சிங்கள மொழி, சமஸ்கிருதம், இந்தி மொழியோடு தொடர்பு உள்ளது என்றும், ஈழத்தமிழர்கள் வெறும் 12 சதவீதம்தான் என்றும், அவர்களின் பயங்கரவாதத்தை ஒடுக்கிய இராஜபக்சே அரசைப் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். சிங்கள அரசன் ஸ்ரீ விஜயன், ஒரிசாவில் இருந்து வந்தவன் என்றும், இந்தியாவின் புத்த மதத்தை சிங்களர்கள் பின்பற்றுவதாகவும் எனவே தமிழ்நாடு தவிர்த்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வைகோ இன்று அனுப்பி உள்ள கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம், தன் அதிகார வரம்பை மீறி, இராஜீய உறவுகளின் எல்லைகளைத் தாண்டி, இந்தியாவில் வாழ்கிற ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநில மக்களிடம் தமிழர்களுக்கு எதிராகக் குரோதத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் நோக்கில், நச்சுக் கருத்துகளை விதைத்து உள்ளார். சிங்களர்களின் அரசனான ஸ்ரீ விஜயன் கலிங்கம் எனும் ஒரிசாவில் இருந்து வந்தவன் என இலங்கையின் மகாவம்சம் நூல் தெரிவிக்கிறது என்கிறார். இந்த மகாவம்சம் எனும் நூல், அபாண்டப் பொய்களும், அருவறுக்கத்தக்க ஆபாசக் கற்பனைக் கதைகளும் கொண்டது ஆகும்.
குறிப்பிடப்படும் ஸ்ரீ விஜயனின் தாயும் தகப்பனும், கதையின்படி உடன் பிறந்த அண்ணன் தங்கை ஆவார்கள். அவர்களின் தந்தை தாய் இருவரும், காட்டில் இருந்த ஒரு சிங்கத்திற்கும் கலிங்க தேசத்து அரச குமாரிக்கும் பிறந்தவர்கள் என்பதுதான் கரியவாசம் சுட்டிக்காட்டும் பூர்வீகம் ஆகும்.
ஆனால், இலங்கைத் தூதர் ஓர் உண்மையை மறைக்க முடியவில்லை. அதுதான் இலங்கைத் தீவில் தமிழர்கள்தான் பூர்வீகக் குடிமக்கள் எனும் உண்மை ஆகும்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வரலாற்றின் வைகறை முதல் சுதந்திரமான அரசுகள் அமைத்து, உயர்ந்த நாகரிகத்துடன் வளமாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், ஐரோப்பியர் வருகையால் ஆட்சியை இழந்தனர். பிரித்தானியர் 1948 இல் வெளியேறியபோது, சிங்கள இனவாத அரசின் கீழ் ஈழத்தமிழர்கள் உரிமை இழந்தனர்.
ஈழத் தமிழ் மக்களை சிங்கள இராஜபக்சே அரசு இனப்படுகொலை செய்வதற்கு, இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முழு உதவியும் தந்து உடந்தையாகச் செயல்பட்டது.
ஈழத் தமிழருக்கு நீதி கேட்க, வீரமிக்க 22 தமிழ் இளைஞர்கள் நெருப்பில் குளித்து மரணத் தீயை அரவணைத்து உயிர்த் தியாகம் செய்து பற்ற வைத்தத் தணல் இன்று தமிழகத்தில் இலட்சோப இலட்சம் மாணவர்கள், இளைஞர்கள் நெஞ்சத்தில் அணைக்க முடியாத கிளர்ச்சித் தீயாகக் கொளுந்துவிட்டு எரிகிறது.
சிங்கள மொழி, சமஸ்கிருதம் இந்தி மொழி வழி வந்தது என்றும், இந்த உறவோடு, இந்திய மக்கள் தமிழ்நாடு தமிழர் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட்டு, சிங்களருக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார். எவ்வளவு அகம்பாவத்தோடும், திமிரோடும் இலங்கைத் தூதர், தமிழருக்கு எதிராக வட இந்திய மக்களைத் தூண்டிவிடப் பார்க்கிறார்?
சிங்கள அரசு நடத்திய இனக்கொலை யுத்தத்துக்கு ஆயுத உதவி செய்ததை இந்தியப் பிரதமரே குறிப்பிட்டு, 2008 அக்டோபர் 2 இல் எனக்கு எழுதிய கடிதத்தில், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்திய அரசு, சிங்கள அரசுக்கு இராணுவ உதவி செய்தது என்று ஒப்புக்கொண்டு எழுதி இருந்தீர்கள்.
2004 ஆம் ஆண்டு முதல், உங்களிடம் நேரிலும், கடிதங்கள் மூலமாகவும் பலமுறை மிகுந்த கவலையோடும், அச்சத்தோடும் தெரிவித்ததை நான் இப்போது நினைவுபடுத்துகிறேன். சிங்களனுக்கு உதவியாக, ஈழத் தமிழருக்கு எதிராக இந்த இந்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்தால், தமிழகத்தின் இளைஞர்கள் அதனை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறும் விபரீதத்தைத் தடுக்கவே முடியாது.
இன்று அத்தகைய நியாயமான கோபமும், ஆவேசமும்தான் தமிழக மக்கள், குறிப்பாக மாணவர்கள், இளம் தலைமுறையினர் இதயங்களில் நெருப்பைக் கக்கும் கேள்விகளாக ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.
கேரளக் கடலில் இரண்டு இந்திய மீனவர்களைச் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான, இரண்டு இத்தாலியக் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வரவில்லை என்பதற்காக, இத்தாலித் தூதர் டேனியல் மன்சினியை இந்தியாவுக்குள் சிறை வைப்பதுபோல் நடவடிக்கை எடுத்தீர்கள்.
ஏறத்தாழ 584 தமிழக மீனவர்களை நமது கடலிலும், பன்னாட்டுக் கடலிலும் தாக்கிப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையை, இலங்கை அரசைக் கண்டித்து, இந்திய அரசு ஒரு வார்த்தைகூட முனு முனுக்காதது ஏன்?
தமிழக மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக இன்னும் இருக்கிறதா? அல்லது இல்லையா? எனும் கேள்விகள் பூதாகாரமாக தமிழ் மக்கள் மனதில் எழுந்துவிட்டன.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு இதனால் ஆபத்து தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது என்பதை உங்களுக்கு எச்சரிக்க வேண்டியது எனது கடமை ஆகும்.
இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் வேட்டு வைக்க முனைந்து உள்ளதால், இந்தியக் குற்றவியல் சட்டம் 124ஏ பிரிவின் கீழ் இலங்கைத் தூதர் மீது உடனடியாக வழக்குப்போட்டு கைது செய்து, சிறையில் அடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில், இந்திய அரசு மேற்கொள்ளும் செயல்பாடுதான், நாட்டின் ஒற்றுமைக்கு, காலம் விடுத்து உள்ள அறைகூவலுக்குப் பதிலாக அமையும் என்பதை வரலாறு பதிவு செய்யும்.
- இவ்வாறு, வைகோ தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருவாரியான சிங்களர்கள் இந்தியர்கள்தான்: இலங்கைத் தூதர் கரியவாசம் கமுக்கப் பரப்புரை!

பெருவாரியான சிங்களர்கள் இந்தியர்கள்தான்: இலங்கைத் தூதர் கரியவாசம்  கமுக்கப் பரப்புரை!

""வட இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சிங்களர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும்'' என்று தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதர் பிரசாத் கரியவாஸம் இந்திய ஊடகங்கள், வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ரகசிய பிரசாரம் செய்து வருகிறார்.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக, இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் பிரசாத் கரியவாஸம் ஈடுபட்டார்.
இதையொட்டி கரியவாஸம் "சிங்களர்கள் வட இந்திய பூர்விகவாசிகள்' எனக் குறிப்பிட்டு அனுப்பிய மின்னஞ்சல் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதில் ""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால், இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்'' என்று அவர் கருத்து கூறியுள்ளார்.
பிரசாத் கரியவாஸத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து இலங்கையைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ம் தேதி இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இலங்கைத் தூதரின் மின்னஞ்சல் தற்போது தில்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலின் விவரம் வருமாறு: ""அசோக சக்ரவர்த்தி ஆட்சி நடைபெற்ற கிறிஸ்து பிறப்பதற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்பே (கி.மு. 300) கலிங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பதிவாகியுள்ளன. புத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட அசோகர், தனது மகன் அர்ஹத் மஹிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் இலங்கைக்கு புத்த மத செய்தியைப் பரப்ப அனுப்பி வைத்தார். இலங்கையில் புத்த நிலையங்களை அவர்கள் நிறுவினர்.
இந்தியாவில் புத்த கயையில் போதி மரத்தடியில் புத்தர் ஞானோதயம் பெற்ற மரத்தின் கன்றை இலங்கையின் அனுராதபுரத்தில் சங்கமித்ரா நட்டார். புனிதம் மிக்க அந்த மரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு உலகின் மிகப் பெரிய மரமாகத் திகழ்கிறது.
2500 ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தின் பூர்விகம் கலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தும் உருவானதாக நம்பப்படுகிறது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஒடிசா, வங்கம் ஆகியவற்றை பூர்விகமாகக் கொண்டவர்கள்.
மொகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்தியாவின் வட மாநிலத்தை குறிப்பாக கலிங்கத்தை சிங்கள மக்கள் தற்போது இணைத்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டில் இன ரீதியாக தொடர்பில் உள்ள 12 சதவீத இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஒடிசா, வட இந்தியாவுடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டவர்கள் சிங்களர்கள். ஹிந்தி, ஒரியா, வங்காளி ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழியான சம்ஸ்கிருதத்தை சிங்களர்களால் பேசவும் எழுதவும் முடியும்.
இந்தியா அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் கவலைப்பட வேண்டும். இலங்கையில் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்கி, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமாக இருந்த விடுதலைப் புலிகளை அழித்த அதிபர் மகிந்த ராஜபட்ச பாராட்டுக்குரியவர்'' என்று பிரசாத் கரியவாஸம் மின்னஞ்சலில் கூறியுள்ளார்.
இந்தியாவில் பணியாற்றும் வெளிநாடுகளின் தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந்த நிலையில், தில்லி ஊடகங்கள் வட்டாரத்தில் பிரசாத் கரியவாஸத்தின் மேற்கண்ட மின்னஞ்சல் தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில், பிரசாத் கரியவாஸத்தின் மின்னஞ்சல் தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ

""நஞ்சைப் பரப்பும் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸத்தை இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும்'' என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
இலங்கைத் தூதரின் மின்னஞ்சல் தொடர்பாக வைகோ கூறியதாவது: ""இலங்கையின் நாகரிகத்தைக் காத்து வருபவர்கள் இலங்கைத் தமிழர்கள்; இலங்கை மண் தமிழர்களுக்கான உரிமை; கரியவாஸத்தின் கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் கிடையாது. இந்தக் கருத்தை வெளியிட்டதற்காக அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தையும் மூட வேண்டும். இலங்கைக்கு இனியும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்தால், இந்திய ஒருமைப்பாட்டை ஒருபோதும் காப்பாற்ற முடியாது'' என்று வைகோ கூறினார்.

விளக்கம் கேட்க வேண்டும்: டி. ராஜா

தில்லியில் செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறியதாவது: தூதர் என்பதை மறந்துவிட்டு அந்த நாட்டு அதிபரின் அரசியல் உதவியாளர் போல் பேசுவதை பிரசாத் கரியவாஸம் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது அவருக்கு இது முதல் முறையல்ல. சிங்களரின் பூர்விகம் பற்றி கருத்து வெளியிட்டு மறைமுகமாக, அந்த சமூகத்தினருக்கு இந்தியா ஆதரவாக இல்லை என்ற கருத்தை பிரசாத் கரியவாஸம் திணிக்க முற்பட்டுள்ளார். அவரது பேச்சும், செயலும் உள்நோக்கம் கொண்டது என்று சந்தேகிக்கிறோம். அவரை நேரில் அழைத்து மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்று ராஜா கூறினார்.

கருத்துகள்(10)

தமிழர்களுக்கு தனியாக ஒரு மாநிலம் அமைத்துக் கொடுக்கலாமே இலங்கையில்? இந்தியாவில் தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இருப்பதைப் போல இலங்கையில் ஈழம் என்று ஒரு மாநிலம் அமைக்கலாமே? இலங்கை இப்போது சீனாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறது. இந்தியாவுக்கு தமிழர்களை சமாளிப்பதா இல்லை இலங்கையை ஆதரிப்பதா என்று தெரியவில்லை. இந்திய ஆட்சியாளர்கள் எதிலுமே தெளிவில்லாமல் உள்ளனர். தெளிவாக இது தான் எங்கள் நிலைப்பாடு என்று இலங்கையிடம் சொல்ல பயம்.
1. "வட இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சிங்களர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும்''என்றும், "2500 ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி வருகிறது.அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தின் பூர்விகம் கலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தும் உருவானதாக நம்பப்படுகிறது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஒடிசா, வங்கம் ஆகியவற்றை பூர்விகமாகக் கொண்டவர்கள்." என்றும் இலங்கைத்காண டெல்லியில்உள்ள அதன் தூதர் திரு.கரியவாஸம் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது ஈழதமிழர்களின் தனிதமிழ் ஈழ சுதந்திர நாடு கோரிக்கையை . முற்றிலும் ஏற்புடையதாக்கு கிறதே! மேலும், "2500 ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி வருகிறது' என்றால் தமிழ்நாட்டின் காலடியில் கிடக்கும்இஇலங்கை தீவில் கால் பதிக்க தமிழனுக்கு தடம் தெரிந்திருக்கவில்லையா என்ன?
2. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கடாரம் கொண்டான்/வென்றான் மற்றும் , கங்கை கொண்ட சோழன் எனற பெயர்கள் காரணப்பெயர்களே. ஈழத்திலும் நம் தமிழ் முன்னோர்கள் இருந்தனர்,வாழ்ந்திருருந்துவந்தனர் , அரசு கொண்டிருந்தனர். ஐரோப்பிய காலணி ஆட்சியினர் இரு இன மக்களின் முடியாட்சி காலத்தையும் முடிவுக்குகொண்டு வந்து இரு இன மக்களின் தனித்தனியான பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரே நாடாக்கி காலணியட்சியை வலுபடுத்திகொண்டனர.சுதந்திரத்துக்கு பின் ஒத்து வரவில்லை என்றால், அதாவது ஐம்பது ஆண்டுக்கும் மேலாக, தர்ழ்களின் உரிமைகள் ஒருக்கபட்டு பிறகு அவர்களும் தனி நாடு கேட்டு போராடி வருவதால், இனி இரு இன மக்களும் பிரிந்து தனித்தனியே அவரவர் வரலாற்று படியான வாழ்விடங்களில் தனிதனி நாடு கொண்டு வாழ்வதுதானே முறையும் அறமும் ஆகும். இன்னும் சொல்லபோனால் இலங்கைத் தூதர் கரியவாஸம் சொல்லுவதைவிட மாறுபட்ட சிங்கள் குடியேற்ற வரலாறும் உண்டு- அதுதான் இந்திய துணை கண்டத்தில் உள்ள தனது நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு படகில் தனது துணைகளுடன் தீவில் வந்திறங்கி குடியேறிய இளவரசன் விஜயனின் வாரிசுகள்தான் சிங்களர்கள் என்று அவர்களின் புனித நூலான
3. மகாவம்சமே குறிப்புகளை தருகின்றது. இதை ஒட்டித்தான் தீவு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றபின் சிங்கள அரசு இளவரசன் விஜயனின் வருகையை கொண்டாடும் விதமாக ( commemorative )அஞ்சல்தலையை ( postal stamp)வெளியிட்டிருந்தது. அதோட தனது கப்பல் படையின் விழாவில் ஒரு கப்பலுக்கும் விஜயனின் பெயரை சூடி மகிழ்ந்தது. விஜயனின் வரலாறு இழிவானதுஎன்பதால் திரு.காரியவாசம் இப்போது கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த நிகழ்வை முன்னிறுத்தி சொந்தம் பிடிக்கிறார். செய்யட்டும். ஆயினும் இவர் முழுத்ர்தீவையும் சிங்களுர்க்கே எந்த ஒரு வகையிலும்சொந்தம் கொள்ள முடியாது. தமிழரின் பகுதிகளை -தமிழ் ஈழத்தை- தமிழர்களுக்கே விட்டுவிடவேண்டும்.
இவரென்ன கரியவாசமா அல்லது இந்தியர்களின் முகத்தில் கரி பூசும் வாசமா ,இல்லை காதில் பூ சுற்றும் வாசமா
சிங்களர்களின் பூர்வீகம் வட இந்தியா: இலங்கை தூதரின்  நச்சுப்பரப்புரை
சிங்களர்களின் பூர்வீகம் வட இந்தியா: இலங்கை தூதரின் விஷம பிரசாரம்
புதுடெல்லி, மார்ச். 27-

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ந் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக டெல்லியில் உள்ள இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸம் இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.

`சிங்களர்கள் வட இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்' என குறிப்பிட்டு அனுப்பிய இ-மெயில் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த இ-மெயில் தகவலில் 12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால் இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வடஇந்தியா மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

பிரசாத் கரியவாஸத்தின் இ-மெயில் முகவரியில் இருந்து இலங்கையை தலைமையிடமாக கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ந்தேதி இந்த இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இந்த இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பிரசாத் கரியவாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இலங்கை தூதர் பிரசாத் கரியவாஸத்தின் விஷம பிரசார இ-மெயில் டெல்லியில் உள்ள ஊடகங்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் தீவிர போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் பிரசாத் கரியவாஸத்தின் விஷம பிரசாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் பிரச்சினை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. அதையும் மீறி இலங்கை தூதர் பிரசாத்கரிய வாஸம் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
கருத்து

Wednesday, March 27,2013 10:23 AM, POLICE said: 1 9
நாட்டின் மைந்தர்கள் தமிழர்கள் !!!!
Wednesday, March 27,2013 10:21 AM, பெருமாள் said: 0 18
அவன் சொன்னது உண்மை என்று வைத்துகொண்டாலும் பிளைக்கபோனவந்தான் சிங்களன் என்பதை அவர்கள் வாயாலயே ஒத்துகொண்டார்கள், எனவே குமரிகண்டம் முதல் இலங்கையை ஆண்ட தமிழர்களுக்கு உடனடியாக அவர்கள் நாட்டை முழுவதுமாக திருப்பி தர வேண்டும்.
Wednesday, March 27,2013 10:20 AM, புவனி ஓசூர் said: 0 12
எப்போதுமே வந்தேறிகளால்தான் தமிழன் வஞ்சிக்க்படுகிரண் ,,,
Wednesday, March 27,2013 10:14 AM, பார்ப்பன் said: 0 22
இலங்கையிலிருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து வட இந்தியர்கள் இலங்கைக்கு குடி பெயர்ந்தனர் என்றால் வெறும் இருபது கடல் மையிலுக்கு அப்பாலிருந்து தமிழன் வட இந்தியர்களுக்கு முன்னால் இலங்கைக்கு குடி பெயர்ந்திருப்பான். ஆகையால் இலங்கையில் தழர்களுக்கே முதலுரிமை வடக்கிலிருந்து வந்தவனுக்கு இருக்க முடியாது.
Wednesday, March 27,2013 10:07 AM, உண்மை said: 0 28
சிங்களர்கள் வட இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் ஆகையால் இலங்கை என்று ஒரு தனி நாடு கிடையாது இந்தியாவை சேர்ந்தது என்று ஒப்புக்கொள்ளுவார்களா சிங்களர்கள்.