குற்றச்சாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றச்சாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 அக்டோபர், 2013

மீனவர் சிக்கலில் மத்திய அரசு பாகுபாடு: செயலலிதா குற்றச்சாட்டு

மீனவர் சிக்கலில் மத்திய அரசு பாகுபாடு: தலைமையருக்கு அனுப்பிய மடலில் செயலலிதா குற்றச்சாட்டு


இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடுமாறு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 65 பேரை விடுவிப்பதற்கு, அங்குள்ள தூதரம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத்தின் மீனவர் மீதான தாக்குதலுக்கு உடனே பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியதைச் சுட்டிக்காட்டியவர், மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில், அப்பாவி இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைக் கோரி மீண்டும் மீண்டும் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாததது மிகவும் வேதனையடையச் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
37 மீனவர்கள் கைது
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதலும், கைது நடவடிக்கையும் தொடர்வதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த 24 மணி நேரத்துக்குள் 37 பேர் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டதையும், அவர்களிடம் இருந்து 9 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டதையும் பிரதமரின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
தாம் எத்தனை முறை கடிதம் எழுதினாலும், அதற்கு உரிய நடவடிக்கையே எடுக்கப்படுவதில்லை என்று பிரதமரை குறை கூறியுள்ள முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் அலட்சியப்போக்கு காரணமாக, இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகள் அதிகமாகிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
குர்ஷித் பயணம் வீண்
சமீபத்தில் இலங்கைப் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், மீனவர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காணும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரபட்சம் ஏன்?
அண்மையில், குஜராத்தையொட்டி கடல் எல்லையில் மீனவர் மீது பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டை உடனடியாக மத்திய அரசு கண்டித்ததுடன், பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன் அனுப்பி, துரிதகதியில் செயல்பட்டுள்ளது என்ற விவரம் தனக்கு கிடைத்துள்ளது என்ற முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை மட்டும் உதாசீனப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பாராமுகம் காரணமாக, தங்கள் சொந்த நாடே தங்களை கைவிட்டுவிட்டது என்ற மன நிலையில் தமிழக மீனவர்கள் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக தலையிடுக
இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 மீனவர்களை விடுவிக்கவும், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட 35 படகுகளை மீட்டுத் தரவும், இந்தியத் தூதரகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அப்பாவி இந்திய மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரிடன் நடவடிக்கையை நிறுத்துவதற்கு, அந்நாட்டு அரசிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
 
 
- தமிழ்இந்து

புதன், 2 அக்டோபர், 2013

மீனவர் துன்பம்: இந்தியத் தூதரகம் மீது வைகோ குற்றச்சாட்டு

மீனவர் துன்பம்: இந்தியத் தூதரகம் மீது வைகோ குற்றச்சாட்டு

தமிழ் இந்துComment   ·   print   ·   T+  
சொந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து அவர்களின் உடைமைகளை முறையாகப் பாதுகாத்து தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமையில் இருந்து தவறியது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சொந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து அவர்களின் உடைமைகளை முறையாகப் பாதுகாத்து தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமையில் இருந்து தவறியது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக மீனவர்கள் 1984 ஆம் ஆண்டு முதல் சிங்கள ராணுவத்தால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். கடந்த 10.11.1984 அன்று ராமேஸ்வரம் மீனவர் முனியசாமி தொடங்கி, இதுவரை 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் ஊனமாக்கப்பட்டு அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் முற்றிலும் திட்டமிட்டு சேதமாக்கப்பட்டு, பிழைக்க வழியின்றி முடமாக்கப்பட்டுள்ளனர். வருவாய் ஈட்டும் ஆதாரங்களை அழித்து அவர்களை செயலற்றவர்களாக்கிவிட்டது சிங்கள ராணுவம்.
தங்களுக்கு ஆண்டாண்டு காலமாக வாழ்வளிக்கும் பாரம்பரியத் தொழிலை விட்டுவிட்டு, சாண் வயிற்றுப் பிழைப்பிற்காக கபடமற்ற மீனவ மக்கள் படுகின்ற துயரமும், தொழிலில் ஈடுபடும்போது சிங்கள ராணுவத்தால் அவர்கள் படும் அச்சுறுத்தலும் தாங்கமுடியாத வேதனையைத் தருகிறது.
இத்தகைய கொடுமைகளுக்கு மத்தியில் தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க, கடந்த 26.08.2013 புதன்கிழமை அன்று, இராமநாதபுரம் மாவட்டம்-பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்கள் நான்கு படகுகளில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, சிங்கள ராணுவத்தால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டனர் ஒரே நீண்ட சங்கிலியால் அந்த 35 மீனவர்களும் பிணைக்கப்பட்டு, விலங்கினும் கீழாக நடத்தப்பட்டு நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் பூட்டப்பட்டனர்.
மீனவர்களைக் காணாது பதறும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீருக்கும், பிள்ளைகளின் பரிதவிப்புக்கும் எவரால் ஆறுதல் சொல்ல இயலும்?
இந்த நிலையில், கடந்த 23.09.2013 திங்கள்கிழமை அன்று பந்தளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அம்மீனவர்கள் இன்றுவரை தாயகம் திரும்பவில்லை. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், கொழும்பு போக்குவரத்து காவலர் குடியிருப்புப் பகுதியில் ஓர் அறையில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் நான்கு விசைப்படகுகளையும், மீன்பிடி வலைகளையும் இன்னமும் நீதிமன்றப் பொறுப்பிலேயே வைத்துள்ளனர்.
சொந்த நாட்டு மக்களைப் பாதுகாத்து அவர்களின் உடைமைகளை முறையாகப் பாதுகாத்து தாய்நாட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமையில் இருந்து தவறியது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம். இந்திய அரசைப் போலவே அதுவும் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறது.
சுண்டைக்காய் நாடான இலங்கை, தமிழக மீனவர்களைத் தாக்குவதையும், கைது செய்வதையும், சிறையில் பூட்டுவதையும் அவர்களின் உடைமைகளை சேதப்படுத்துவதையும் கண்டிக்கும் யோக்கியதையோ, விரட்டி அடிக்கும் துணிச்சலோ, எந்த நாட்டை எங்கள் சொந்த நாடென்று நினைக்கிறோமோ அந்த இந்திய நாட்டிடம் இல்லை என்பதைச் சொல்வதற்கே அவமானமாக இருக்கிறது.
இந்த நிலை மாறிட, இந்திய அரசு விரைந்து செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 35 பேரையும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பில் கொண்டுவந்து, உடனடியாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கவும், அவர்களின் விசைப்படகுகளையும், மீன்பிடி வலைகளையும் நீதிமன்றப் பொறுப்பில் இருந்து பத்திரமாக மீட்டு, அவர்களிடம் ஒப்படைக்க விரைந்து முயற்சி மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

தமிழர்களின் சோகம் தொடர்கிறது - குற்றச்சாட்டு

இலங்கையில் தமிழர்களின் சோகம் தொடர்கிறது* ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய த் தலைவர் குற்றச்சாட்டு
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_792984.jpg

கொழும்பு:""இலங்கையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டுப் போர் முடிந்திருந்தாலும், தமிழர்களின் சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது,'' என, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்து உள்ளார்.

இலங்கையில், போரால் பாதித்த பகுதிகளில் நடக்கும், மறுவாழ்வு பணிகள் மற்றும் மனித உரிமைகள் சூழ்நிலையை பார்வையிட, கடந்த வாரம், நவநீதம் பிள்ளை அங்கு வந்தார்.

ஒரு வார சுற்றுப் பயணத்திற்குப் பின், கொழும்பில், நேற்று அவர் அளித்த பேட்டி: இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த போர், முடிந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டன. இருப்பினும், தமிழர்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, இலங்கை அரசு, சர்வாதிகாரப் போக்குடனேயே செயல்படுகிறது. போர் முடிந்திருந்தாலும், தமிழர்களின் துயரம், இன்னும் தீர்ந்த பாடில்லை.போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடக்கும், மறு குடியமர்த்தல் மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணிகள், திருப்திகரமாக உள்ளன. நான் சந்தித்தவர்களில் பலர், பல்வேறு வகையில், தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும், பழி வாங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.இலங்கையில், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, விமர்சனம் செய்வோர் மீது, அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றை, ஐ.நா., சபையின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.இலங்கையில், ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு உள்ளது. சட்டம் மற்றும் விதிகள் அழிக்கப்பட்டு உள்ளன. நான், விடுதலை புலிகளின் பெண்கள் பிரிவைச் சேர்ந்தவள் என, இலங்கை அமைச்சர்கள் மூவர், என் மீதே தனிப்பட்ட முறையில், அவதூறு கூறியுள்ளனர். இது, முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானது.இவ்வாறு, நவநீதம் பிள்ளை கூறினார்.

வியாழன், 28 மார்ச், 2013

பதவியில் தொடரும் டி.ஆர்.பாலு : செயலலிதா குற்றச்சாட்டு

பதவியில் தொடரும் டி.ஆர்.பாலு; மத்திய அரசுடன் திமுக மறைமுக உறவு: செயலலிதா குற்றச்சாட்டு

ரயில்வே குழுத் தலைவர் பதவியில் டி.ஆர்.பாலு தொடரும் நிலையில், மத்திய அரசுடன் திமுக மறைமுக உறவு கொண்டிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த உறவைத் தொடர்ந்து கொண்டே ஏதோ தியாகம் செய்து விட்டதைப் போன்று வெளிவேடம் காட்டி தமிழக மக்களை ஏமாற்றப் பார்ப்பதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் மாணவ-மாணவியர் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளிவந்ததை இலங்கைத் தமிழர்களுக்காக தான் செய்த மிகப்பெரிய தியாகம் என்று சித்திரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி. மத்திய அரசுக்கும், திமுகவுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று காட்டிக் கொள்ளும் அவர், ரயில்வே குழுத் தலைவர் பதவியில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்றுவரை தொடர்வது குறித்து வாய் திறக்கவில்லை.
மத்திய அமைச்சராக இருந்த தனது மகன் அழகிரி, காங்கிரஸ் தலைவரையும், பிரதமரையும், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தித்து இருக்கிறார். ராஜிநாமா செய்த பிறகு உங்கள் மனநிலை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அலுவலகத்துக்குப் போக முடியவில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்று கூறியிருக்கிறார் அழகிரி. இது குறித்து கருணாநிதி கருத்துத் தெரிவிக்கவில்லை.
திமுக செயற்குழுவில் பேசிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், மத்தியில் ஆட்சியைக் கவிழ்க்க திமுக துணை போகாது என்று பேசியிருக்கிறார். இதை கருணாநிதி கேட்டுக் கொண்டு வாய்மூடி மௌனியாகத்தான் இருந்தார்.
இந்த விஷயங்களில் எல்லாம் அவர் மௌனம் சாதிப்பதைப் பார்த்தால் மத்திய அரசுடனான தொடர்பை எந்த விதத்திலும் துண்டிக்க கருணாநிதி விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது. மறைமுக உறவைத் தொடர்ந்து கொண்டு தியாகம் செய்து விட்டது போன்று வெளி வேடம் காட்டி தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இதைவிட தமிழக மக்களுக்குச் செய்யும் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

வெள்ளி, 8 மார்ச், 2013

இலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை

இலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை: பா.சனதா குற்றச்சாட்டு
இலங்கையில் நடந்த படுகொலைக்கு இந்தியாவும் உடந்தை: பா.ஜனதா குற்றச்சாட்டு
புதுடெல்லி, மார்ச். 8-

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாக இருந்தது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. பாராளுமன்றத்தில் இலங்கை பிரச்சினைபற்றி நேற்று விவாதம் நடந்தது.

விவாதத்தில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், வெளியுறவுத்துறை முன்னாள் மந்திரியுமான யஷ்வந்த் சின்கா பேசும்போது கூறியதாவது:-

இலங்கை தமிழர்களின் துயரம் என்பது நமது காலக்கட்டத்தில் நடந்துள்ள மிக மோசமான நிகழ்வு ஆகும். இலங்கையில் ராணுவ பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக்கொண்டிருந்த காட்சியும், அதன்பிறகு சிறிது நேரத்தில் அவன் சுட்டு படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சியும் அனைவரையும் உறைய வைக்கும். இலங்கையில் எப்படியான படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை அந்த ஒரே படம் சொல்லும். அங்கு வன்கொடுமை, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, போர்க்குற்றங்களும் அரங்கேறின. இதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவில் பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற வேளையில், 2009-ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இத்தகைய தாக்குதல் இலங்கை அரசின் கொள்கையாகி விட்டது. 'தேவைப்பட்டபோது இந்தியா செயல்பட தவறி விட்டது. எத்தனையோ உயிர்களை இந்தியா காப்பாற்றி இருக்க முடியும்' என்று ஐ.நா. மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது, மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இந்திய அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின்மீது இந்தியா வெறுமனே ஓட்டு போடுவதோடு நின்றுவிடக்கூடாது. அந்த தீர்மானத்தை வரைவதில், முன்னெடுத்துச்செல்வதில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். இதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பேசியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (மத்திய அரசு) எதிர்ப்பு தெரிவித்தீர்களா?

'மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக அரங்கில் இந்தியா பேசும்' என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை மத்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கையில் தமிழர்களுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் குழப்பம் இருக்கிறது. இதை தெளிவுபடுத்துங்கள்.

(காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை முலாயம்சிங் பார்த்து) சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவுதேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச்சொல்லக்கூடாது என்பதல்ல.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுக்கத்தா ராய் கூறியதாவது:-

சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு, டீசல் விலை உயர்வு போன்றவற்றில் அரசுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே நாங்கள் அரசில் இருந்து விலகினோம். நீங்கள் ஏன் (பதவியில்) ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? இலங்கை தமிழர் விவகாரத்தில் உண்மையிலேயே காங்கிரசுடன் தீவிரமான கருத்து வேறுபாடுகள் இருந்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்.

லாலு பிரசாத்-பகுஜன்சமாஜ்

ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் பேசும்போது, 'இலங்கை தமிழர்களுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கிறது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தாராசிங் பேசும்போது, 'இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. இந்த பிரச்சினையை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, தலையிட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

வியாழன், 7 மார்ச், 2013

வெனிசுலா அதிபரின் மரணம் அமெரிக்காவின் சதி: இரசிய த் தலைவர் குற்றச்சாட்டு

வெனிசுலா அதிபரின் மரணம் அமெரிக்காவின் சதி:  இரசிய த் தலைவர் குற்றச்சாட்டு
வெனிசுலா அதிபரின் மரணம் அமெரிக்காவின் சதி: ரஷ்ய கம்யூனிஸ்டு தலைவர் குற்றச்சாட்டு
மாசுகோ, மார்ச்சு 7-

வெனிசுலாவின் சோசலிஷ தலைவர் ஹுகோ சாவேஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் இறப்பு அமெரிக்காவின் சதி என்று ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி சியுகானவ் கூறியுள்ளார்.

இவர் நேற்று ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சித்த, அதற்கு எதிராக பலமிக்க கூட்டணியை உருவாக்க நினைத்த 6 லத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் புற்றுநோய் தாக்கியது? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. என்னைப் பொறுத்தவரை இவை அனைத்தும் தற்செயல் அல்ல. சாவேசின் இறப்பில் மர்மம் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெனிசுலாவின் துணை அதிபர் நிகோலஸ் மதுரோ கூறும்போது, நமது நாட்டின் நீண்டகால எதிரிகள், சாவேஸின் உடல் நிலைக்கு தீங்கு விளைவிக்க வழிகளை தேடினர். சாவேஸ் ஏகாதிபத்தியத்தின் சதிக்கு பலியாகி விட்டார்.' என்று கூறினார்.

2007-ம் ஆண்டு வெளியான சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆவணங்களில் பிடல் காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்கா பலமுறை முயற்சித்தது தெரிய வந்தது.

பிடல் காஸ்ட்ரோ ஒருமுறை 'நீ மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய். அவர்கள் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்துள்ளனர். நீ என்ன சாப்பிடுகிறாய், அவர்கள் உனக்கு என்ன சாப்பிட கொடுக்கிறார்கள், என்ன ஊசி போடுகிறார்கள் என்பதில் கவனமாய் இரு என தன்னிடம் கூறியதாக சாவேஸ் தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் கொள்கைகளை விமர்சித்த பிரேசில் அதிபர் டில்மா ரோஸ்செப், பராகுவே நாட்டின் பெர்னாண்டோ லூகோ, பிரேசிலின் முன்னாள் தலைவர் லூயிஸ் இனசியோ லுலாடா சில்வா, அர்ஜெண்டினாவின் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் ஆகியோர் உள்ளிட்ட 6 லத்தின் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு புற்றுநோய் தாக்கி இருப்பதாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.