தில்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப் பாராட்டு விழா





தமிழ்க் காப்புக் கழகத்தின் தில்லிக் கிளை கடந்த பத்துத் திங்களாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முனைவர் புத்தேரி தானப்பன் அவர்கள் செம்மையாகச் செயல்புரிந்து வருகிறார்.

சா(ஜா)ர்கண்டு மாநிலத்தின் முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குக் கடந்த ஆடி 10, 2057/26-7-2026 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. 

விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களை முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களும் அனைத்திந்திய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் முகுந்தன் அவர்களும் புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான புலவர் இராமலிங்கம் அவர்களும் பாராட்டினர்.

ஞாயிறு, 8 மார்ச், 2026

தில்லி – தமிழ்க்காப்புக் கழகக் கிளை – இணைய உரை 5






திங்கள், 29 ஜூலை, 2013

இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை-போராட்டம் : பொன் இராதாகிருட்டிணன்



ஒன்றை எதிர்க்கும் முன் அது குறித்து முழுமையும் அறிந்து எதிர்க்க வேண்டும். சிறுபான்மையருக்கான தேசிய ஆணையச்சட்டம், 1992  பிரிவு 2 (சி) இன் கீழ் இசுலாம், கிறித்துவம், புத்தம்,  சீக்கியம், பார்சியம் ஆகிய சமயங்களைச் சார்ந்தவர்களுக்ககுக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வி ஆராய்ச்சி பயிற்சி மாநிலக் குழு (SCERT) சார்பில் சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன் கீழ் இந்து மாணாக்கர்கள் உதவித்தொகை பெற விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஆனால், பிற சமய மாணாக்கர்களுக்கு வங்கி மூலம் உரூ பா 2000 அளவில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இத்தொகை எவ்வாறு யார் மூலம் வழங்கப்படுகிறது என அறிந்து அதனை எதிர்க்கலாம். சட்டம் தரும் சலுகையை எதிர்க்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை தில்லியில் போராட்டம் நடைபெறும்: பொன் இராதாகிருட்டிணன் அறிவிப்பு



இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் ஜூலை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவசான், செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உட்பட பலர் பேசினார்கள். இதில் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

கடந்த ஒரு ஆண்டில் இந்து இயக்க நிர்வாகிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 19 கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த படுகொலைகளுக்கு விளக்கமளித்து டிஜிபி அறிக்கை வெளியிடும் போது, இந்த கொலைகள் அனைத்தும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதும் பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் உடனடியாக மூன்று எம்.பி.க்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த குழுவும் விசாரணை நடத்திய பின்னர் காவல்துறை தலைவர், தலைமை செயலர், உள்துறை செயலர் என மூன்று பேரை சந்திக்க அனுமதி கோரினோம். ஆனால் உள்துறை செயலர் மட்டுமே சந்தித்தார். இந்த சந்திப்புக்கு முன்னரே டிஜிபி அறிக்கை கொடுக்கிறார். டிஜிபி-யின் அறிக்கையை தமிழக பா.ஜ., நிராகரிக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.,வின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அதன் தலைவர்களை குறிவைத்து கொலை செய்கின்றனர். அண்மையில் சில "டிவி'க்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் பா.ஜ., பத்து சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், இரண்டு தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது இதை 15 சதவீத வளர்ச்சியாக மாற்றநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்து இயக்க தலைவர்களை கொன்று பா.ஜ.,வையும் ஆயுதம் எடுக்க வைக்க முயற்சிக்கின்றனர். அது நடக்காது. நான் வெட்டப்பட்டால் கூட அது நடக்காது.

தமிழ்நாட்டில் ஒரு நாள் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். பிற மத குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டாம் என்று பா.ஜ., கூறவில்லை. மாறாக இந்து குழந்தைகளுக்கும் அந்த உதவித்தொகையை வழங்குங்கள் என்றுதான் கோருகிறோம். இதற்காக விரைவில் டில்லியிலும் ஒரு போராட்டம் நடத்த திட்டமிடப்படுள்ளது. நரேந்திர மோடி பிரதமரானதும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் உத்தரவில் கையெழுத்திடுவார். டாக்டர் அம்பேத்கார் கண்ட கனவுகளை நனவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார். போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.



வியாழன், 14 மார்ச், 2013

இந்தியைத் திணித்தால் எதிர்த்துப் போராடுவோம்: தில்லி- மேல்-சபையில் கனிமொழி பேச்சு

இந்தியைத் திணித்தால் எதிர்த்துப் போராடுவோம்:  தில்லி- மேல்-சபையில் கனிமொழி பேச்சு
இந்தியை திணித்தால் எதிர்த்து போராடுவோம்: டெல்லி மேல்-சபையில் கனிமொழி எம்.பி. பேச்சு
சென்னை, மார்ச்.14-
 
கனிமொழி எம்.பி. டெல்லி மேல்- சபையில்பேசியதாவது:-
 
நான் இந்த அவையில் எனது மொழியில் பேச வேண்டுமென்றால் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதி பெற வேண்டும். எனது மொழியில், எனது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கிறது. என்றாவது ஒரு நாள், இப்போது உள்ள இந்த நடைமுறைகள் இல்லாமல் போகும் நிலை வரும் என்று நம்புகிறேன்.
 
இங்கே பேசிய ஒரு உறுப்பினர் மொழிக்கான போராட்டங்கள் அரசியல் தந்திரம் என்றும், பிரபலமாகுவதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்றும் பேசினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி நான் பேசுகையில் இது எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்பதையும் நான் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். நாங்கள் விரும்பாதபோது இந்தியை எங்கள் மீது திணிக்க நடந்த முயற்சியைக் கண்டித்தே இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
 
தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பண்பாட்டையும், தங்கள் அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக உயிரை மாய்த்துக்கொண்டார்கள். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எனது தந்தையும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தனது 14-வது வயதில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் அரசியல்வாதி கிடையாது.
 
ஒரு சாதாரண மாணவன். தனக்கு ஒரு பிரகாசமான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதோ, தமிழகத்துக்கே முதலமைச்சர் ஆகப்போகிறோம் என்பதோ, தேசிய அரசியலில் ஒரு முக்கியப்பங்கை வகிக்கப்போகிறோம் என்பதோ, அவருக்கு அப்போது தெரியாது. அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கையும் கிடையாது. அப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் அவமானப்படுத்தக்கூடாது.
 
இது போன்ற போராட்டங்களில் அவர் எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவே இறங்கினார். அப்படிப்பட்ட தலைவர்களின் போராட்டங்களை அரசியல் தந்திரங்கள் என்று கூறுவது வருந்தத்தக்கது. இங்கே பேசியவர்கள் இந்தி பெருபான்மையானவர்கள் பேசும் மொழி ஆனால் சிறுபான்மையினர் எதிர்க்கிறார்கள் என்று கூறினார்கள்.
 
எங்களுக்கு இந்நாட்டில், இவ்வுலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் எங்களுக்கு சம்மதமே ஆனால் இங்கே பேசியவர், இந்தி கற்காததால் நீங்கள் எதையோ இழந்து விட்டதாக உணரவில்லையா என்று கேட்டார். நான் இந்தி கற்கவில்லை. சிவா இந்தி கற்கவில்லை, இது போல பலர் இந்தி கற்கவில்லை.
 
இதனால்தான் நான் இந்த விவகாரத்தில் நிதி அமைச்சரைப் பற்றிப் பேச விரும்புகிறேன். இந்தி கற்காமல் ஒருவர் இந்நாட்டின் நிதி அமைச்சராகி சிறப்பாக செயல்பட முடியும்போது நாங்கள் எதை இழந்து விட்டோம். பெருந்தலைவர் காமராஜரையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
 
காமராஜரும் இந்தி அறிந்தவர் அல்ல. இப்படி இருக்கையில் இந்தி கற்றே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம்? இந்தி பேசத்தெரியாவிட்டால் அவர் இந்தியர் இல்லையா? உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் எனக்குத் தெரியாது. எனக்கு இரண்டு மொழிகள்தான் தெரியும்.
 
இதனால் நான் என்ன இழந்து விட்டேன்? ஒரு மொழி தெரியாத காரணத்தால் நான் இந்தியன் இல்லை என்று ஆகி விடுமா என்ன? இங்கே இந்தி தெரியாமல் இருப்பவர்களும் இந்தியர்கள் இல்லையா? நம்மை இணைக்கும் பாலமாக இருப்பது இந்தி மொழி மட்டுமா? பெரும்பான்மையினர் பேசும் மொழி என்பதாலேயே, சிறுபான்மையினர் மீது அதைத் திணிப்பது சரியல்ல.
 
இந்தியா என்பது பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது. அதன் கலாச்சாரம், பண்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்தியாவை இணைத்து வைத்துள்ளது. ஒரு மொழி மட்டுமே அல்ல. திமுக சார்பாக இந்த அவைக்கு ஒன்றை உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எங்கள் மீது மொழி திணிக்கப்பட்டால் அதை எதிர்ப்போம்.
 
இவ்வாறு அவர் பேசினார். 

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

இலங்கை: போர்க்கொடுமை : ஆவணப்படம் தில்லியில் வெளியீடு

இலங்கை த் தமிழருக்கு நேர்ந்த போர்க்கொடுமை : ஆவணப்படம் தில்லியில் வெளியீடு
புதுடில்லி: இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமை மற்றும் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான சானல் 4 தயாரித்த நோ பயர் ஷோன் என்ற ஆவணப்படம் இன்று டில்லியில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் திரையிட்டு காட்டப்பட்டது. இந்த படத்தில் பரபரப்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. ஆம்னெஸ்டி அமைப்பினரின் சார்பில் கெலம் மெக்ரே தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தில் பதைபதைக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. இதில் பிரபாகரன் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து விடுதலைப்புலிகள் ஏராளமானோர் இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். மேலும் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்தவர்களை கொடூரமாக சுட்டுக்கொன்றது இலங்கை ராணுவம்.

இது தொடர்பாக ஏற்கனவே சேனல் -4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக ஆணப்படங்களை வெளியிட்டது.கடந்த சில நாட்களுக்குமுன் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் (12), இலங்கை ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு , சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட புகைப்படத்தினையும் வெளியிட்டு அதிர வைத்தது.


கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியது அம்பலம்

இந்நிலையில் இலங்கை போர் குற்றம் தொடர்பாக சேனல்-4 தயாரித்துள்ள மேலும் ஒரு ஆவணப்படம் இன்று டில்லியில் வெளியிடப்பட்டது. இலங்கையில் ராணுவம் நடத்திய இனப்படுகொலை குறித்த கொடூர காட்சிகள் அந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றிருந்தன. அந்த ஆவண காட்சியில் முதலில் ஆவணப்படத்தை எடுத்த இயக்குனர் கெலம்மெக்கரே போர்க்காட்சிகள் குறித்து விளக்கி பேசுகிறார். பின்னர் போரில் இடம் பெயர்ந்த தமிழர்கள் நிர்க்கதியாக திறந்த வெளியில் அவதியுறுவதாக அந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிதறிக்கிடந்த உடல்களை அப்புறப்படுத்த முடியாமல் கிடந்தன. குண்டுமழை பொழிந்த இலங்கை ராணுவத்தினரால் பீதியடைந்த தமிழர்கள் , அங்கிருந்து கைக்குழந்தைகளுடன் வேறு இடத்திற்கு இடம் பெயர்கின்றனர்.

இன்னும் கண்ணீர் கதறல்கள், ரத்தக்களறிகள் உள்ளிட்ட கோரக்காட்சிகள் , விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்த கர்னல் ரமேஷை பிடித்த இலங்கை ராணுவத்தினர் ஏதோ வாக்குமூலம் வாங்குவதாக ஒரு காட்சி, பின்னர், அவர் முகம் சி‌தைந்த நிலையில் கொல்லப்படுகிறார். பின்னர் புலிகளின் அமைப்பில் இருந்த இசைப்ரியாவை இலங்கை ராணுவம் சீரழித்தத காட்சியும் காணமுடிந்தது. மேலும் இந்த போரில் சர்வதேசம் தடைசெய்துள்ள கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் பதை பதைக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றிருந்தன.

வியாழன், 27 டிசம்பர், 2012

எவரெசுட் மீது ஏறுகிறார் 19 அகவை தில்லி மாணவி

எவரெசுட் மீது ஏறுகிறார் 19 அகவை தில்லி மாணவி

செய்ப்பூர்: அனுபவம் வாய்ந்தவர்களால் கூட, எளிதில் ஏற முடியாத, முழுவதும் பனி சூழ்ந்த, எவரெஸ்ட் சிகரம் மீது ஏற, 19 வயது, டில்லி மாணவி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், சாச்சி சோனி. டில்லி பல்கலைக் கழகத்தில், ஊடகவியல் படித்து வருகிறார். மலையேற்றத்தில் விருப்பம் கொண்ட சாச்சி, 7 வயது முதல், உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி வருகிறார்.இமயமலையில் உள்ள பெரும்பாலான சிகரங்களை, இந்த வயதிற்குள் ஏறியுள்ள இந்த மாணவி, உலகின் மிக உயர்ந்த சிகரமாகக் கருதப்படும், நேபாள நாட்டில் உள்ள, எவரெஸ்ட் சிகரம் மீது ஏற விரும்பினார்.இதற்காக விண்ணப்பித்து, நேபாள அரசு மற்றும் பனி மலை ஏற்றத்திற்கு அனுமதி அளிக்கும் அமைப்பிடம் ஒப்புதல் பெற்றுள்ள சாச்சி, அடுத்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில், எவரெஸ்ட் மீது ஏற உள்ளார்.இது பற்றி அவர் கூறுகையில், ""மலையேற்றத்தில் அதிக விருப்பம் கொண்ட நான், எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதே இலக்காகக் கொண்டிருந்தேன்; அனுமதி கிடைத்துள்ளது. வெற்றிகரமாக என் சாதனையை நிறைவு செய்வேன்; நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்,'' என்றார்.

செவ்வாய், 25 டிசம்பர், 2012

தில்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு - கலைஞர்


ஆட்சியில் உள்ளபொழுதும் மத்தியஅரசைத்தாங்கும் பொழுதும் மனச்சான்றைப் புதைத்தும்  ஆட்சியில் இல்லாத பொழுதும் மத்திய அரசைத் தாக்கும் பொழுதும் மனச்சான்றை எழுப்பி விட்டும் அருமையாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் கலைஞர் தன்னிகரற்றவர். ஈழத்தில் ஆயிரக்கணக்கான சிறுமிகள்,  தாய்மை நிலையில் இருந்தவர்கள்,  திருமணமானவர்கள், மூதாட்டிகள், பெண்போராளிகள், எனப் பல நிலைகளில்  கொடூரக் கற்பழிப்புகள் நடந்த பொழுதும் பிறப்பு உறுப்புகளில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்தும்  உயிரைப்பறித்த பின்பும் இழிவாகவும்  கூட்டாளியின் கூட்டாளியாகிய சிங்களர்கள் நடந்து கொண்ட பொழுதும்  தொடர்பான காட்சிப்பதிவுகளும் படங்களும் வந்த பொழுதும் பழைய பதிவு எனக்கூறி அவற்றிற்கு எதிர்ப்பு தேவையில்லை என மூடிமறைத்த பொழுதும் கண்களையும் வாயையும் மூடிக் கொண்டடிருந்து விட்டு, தம்முடைய ஆட்சியில் காவலர்களாலும் வனத்துறையினராலும்  கற்பழிப்புகள் நடந்த பொழுது அமைதி காத்துவிட்டு இப்பொழுது கூக்கூரல் இடுவது போன்றதுதான் தில்லிக்கும் தமிழகத்திற்கும் உள்ள ஏற்றத்தாழ்வு என்பதை இப்பொழுது மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றார்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


தில்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு : கருணாநிதி

மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் டெல்லிக்கும், தமிழகத்துக்கும் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு என்று கருணாநிதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் அனுப்பிய அறிக்கையில், டெல்லியில் பேருந்து ஒன்றில், 23 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மாணவி கற்பழிக்கப்பட்ட
நிகழ்ச்சிக்கு நீதி கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் மாணவர்கள் 100 பேர் காயமடைந்துள்ளனர். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா வீட்டிற்கு முன்பு மாணவர்கள் தர்ணா நடத்தியிருக்கிறார்கள்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் ஐந்து பேர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளையெல்லாம்
தெரிவித்திருக்கிறார்கள். கோரிக்கைகள் அனைத்தையும் அனுதாபத்தோடு கேட்டுக் கொண்ட சோனியா காந்தி அவர்கள், அவர்களது முக்கிய கோரிக்கையான பலாத்காரக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தைத் திருத்த வேண்டும் என்பதை ஏற்கத் தயார் என்று உறுதி அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் பிரச்சினையில் பொது மக்களின் கோபம் நியாயமானதுதான். இந்தக் கற்பழிப்பு வழக்கிலே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். அவர்களை விட்டு விட மாட்டோம்” என்று உறுதி கூறியிருக்கிறார்.
இந்தக் கற்பழிப்பு பற்றி விசாரிக்கவும், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்வது பற்றி பரிந்துரைக்கவும் உச்ச நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கற்பழிப்பு எங்கே நடைபெற்றாலும் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். அது டெல்லி யிலே நடைபெற்றாலும் எதிர்க்க வேண்டியது தான், தமிழகத்திலே நடைபெற்றாலும் எதிர்க்க வேண்டியதுதான். ஆனால் தமிழகத்திலே நடைபெறுவது என்ன? டெல்லியிலே கற்பழிப்புச் சம்பவம் நடைபெற்ற அடுத்த இரண்டாம் நாள், 20-12-2012 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில், செய்துங்க நல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தில் புனிதா (வயது 13), நாசரத்தில் உள்ள மகளிர் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். அன்றைய தினம் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
21ஆம் தேதி காலையில் பள்ளி செல்லும் வழியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில், சீருடை அணிந்த மாணவி கலைந்த ஆடையோடு பிணமாகக் கிடப்பதாகச் செய்தி பரவியது. அந்த மாணவியின் முகத்தை பலவந்தமாக தாக்கியதற்கான காயங்களும், நகக் கீறல்களும் இருந்திருக்கின்றன. அவள் பள்ளிக்குச் சென்ற போது வழி மறித்து காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும், பின்னர் சுடிதாரின் துப்பட்டாவினால் அவளது கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதும் வெளிப்பட்டது.
டெல்லியிலே கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி நல்ல வேளையாக உயிரோடு இருக்கிறார். ஆனால் தமிழகத்திலே 13 வயதே நிரம்பிய, ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த புனிதா கற்பழிக்கப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டிருக்கிறாள். புனிதாவின் கொலைக்காக கிளாக்குளம் கிராம மக்கள் சம்பவத்தைக் கண்டித்து சாலை மறியல் நடத்தியிருக்கிறார்கள். புனிதா படித்த பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு போராட்டத்திலே ஈடுபட்டுள்ளார்கள். டெல்லியில் கற்பழித்தவர்களும் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் புனிதாவைக் கற்பழித்தவனையும் காவலர்கள் கைது செய்துள்ளார்கள். ஆனால் டெல்லியிலே மத்திய அரசும், அந்த மாநில அரசும் அங்கே நடைபெற்ற சம்பவத்திற்காக நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், “தமிழகத்திலே ஓர் அரசு இருக்கிறதா? கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஏழை புனிதாவிற்காக தமிழக அரசு சார்பில் ஏதாவது நடவடிக்கை உண்டா? டெல்லியில் நடைபெற்றதும் கற்பழிப்பு தான், தமிழகத்திலே நடைபெற்றதும் கற்பழிப்பு தானே? டெல்லி சம்பவத்திற்காக பிரதமரே அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் தமிழகத்திலே கொலையே செய்யப்பட்ட புனிதாவின் குடும்பத் தாருக்கு அரசின் சார்பில் யாரோ ஒரு அமைச்சராவது சென்று ஆறுதல் கூறியது உண்டா? தமிழகத்திலே அரசு என்ற ஒன்று இருக்கிறதா? தமிழ்ச்சாதி என்பதால் புனிதாவின் கொலை சாதாரணமாகி விட்டதா?”
பாலியல் குற்றங்கள் கொடுமையானவை மட்டுமல்ல; கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்பதிலே கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. எனினும் குற்றத்தின் தன்மை ஒரேமாதிரியாக இருக்கும் போது, இடத்துக்கு இடம், அதனைக் கண்டித்திடும் தொனியில் சில அரசியல் கட்சிகள், வேறுபாடு காட்டுவது வினோதமாக மட்டுமல்ல - வேதனை தருவதாகவும் இருக்கிறது.
சில தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் கூட டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு குரல் கொடுத்துள்ளனர். ஆனால், புனிதாவைப் பற்றிய ஞாபகம் அவர்களுக்கு வரவில்லையே என்பது வருத்தத்துக்குரியது.
இந்த நிலையில்தான் வரும் 26ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அதன்படி, புதனன்று  தூத்துக்குடியில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 அக்டோபர், 2012

அந்தோ பாவம்! தமிழ் த் தேசிய க் கூட்டணி த் தலைவர்கள் தில்லி பயணம்

அந்தோ பாவம்! தமிழ் த் தேசிய க் கூட்டணி த் தலைவர்கள் தில்லி பயணம்

தினமலர்
கொழும்பு : இலங்கையைச் சேர்ந்த, தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள், மூன்று நாள், இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.இலங்கையில், விடுதலை புலிகளுடனான, சண்டை ஓய்ந்த பிறகு, அந்நாட்டு அரசு, தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்திய அரசும் தமிழர்களுக்கு, வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறது. ரயில்வே திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.வடக்கு மாகாணத்தில், அடுத்த ஆண்டு, தேர்தல் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் ஏழு பேர், இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ,அழைப்பின் பேரில், தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் சம்பந்தன் தலைமையில் டில்லி சென்றுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா உள்ளிட்ட தலைவர்களை இவர்கள் சந்திக்கின்றனர்.தமிழர்களுக்கு, அதிகாரங்கள் வழங்க வழிவகை செய்யும், 13வது சட்டத் திருத்தம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இவர்கள் விவாதிக்க உள்ளனர்.