கவிஞர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குப்
பாராட்டு விழா
தமிழ்க் காப்புக் கழகத்தின் தில்லிக் கிளை கடந்த பத்துத் திங்களாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக முனைவர் புத்தேரி தானப்பன் அவர்கள் செம்மையாகச் செயல்புரிந்து வருகிறார்.
அவருடைய இலக்கியத் தொண்டினைப் பாராட்டி கடந்த ஆனி 31,2057/15 – 7 – 2026 அன்று தில்லி, நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள அரசமைப்பு மன்றத்தில் (Constitutional Club) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் உலகக் கல்விச் சாதனை விருதுக் குழு(World Educational Achievement Award Council) அவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது.
சா(ஜா)ர்கண்டு மாநிலத்தின் முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.
விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களுக்குக் கடந்த ஆடி 10, 2057/26-7-2026 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
விருது பெற்ற முனைவர் புத்தேரி தானப்பன் அவர்களை முன்னை நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களும் அனைத்திந்திய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முனைவர் முகுந்தன் அவர்களும் புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான புலவர் இராமலிங்கம் அவர்களும் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக