உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கலைஞர்களுக்கு இலலித் கலா அகாடமி வழங்கும் உதவித்தொகை

கலைஞர்களுக்கு இலலித் கலா அகாடமி வழங்கும் உதவித்தொகை

டெல்லியில் உள்ள லலித் கலா அகாடமி கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலைஞர்கள், கலை விமர்சகர்கள், கலை ஆய்வாளர்கள்  என திறமையான 40 கலைஞர்களை தேர்வு செய்து உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விசுவல் ஆட்ஸ் துறையை சார்ந்தவர்களுக்கு மாதம்தோறும் ரூ.10,000 என ஓராண்டுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
www.lalitkala.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை ப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் லலித் அகாடமி, மண்டல அலுவலகம், எண் 4, கிரீம்ஸ் காலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

திங்கள், 29 ஜூலை, 2013

இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை-போராட்டம் : பொன் இராதாகிருட்டிணன்



ஒன்றை எதிர்க்கும் முன் அது குறித்து முழுமையும் அறிந்து எதிர்க்க வேண்டும். சிறுபான்மையருக்கான தேசிய ஆணையச்சட்டம், 1992  பிரிவு 2 (சி) இன் கீழ் இசுலாம், கிறித்துவம், புத்தம்,  சீக்கியம், பார்சியம் ஆகிய சமயங்களைச் சார்ந்தவர்களுக்ககுக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கல்வி ஆராய்ச்சி பயிற்சி மாநிலக் குழு (SCERT) சார்பில் சமய வேறுபாடின்றி அனைவருக்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன் கீழ் இந்து மாணாக்கர்கள் உதவித்தொகை பெற விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
ஆனால், பிற சமய மாணாக்கர்களுக்கு வங்கி மூலம் உரூ பா 2000 அளவில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இத்தொகை எவ்வாறு யார் மூலம் வழங்கப்படுகிறது என அறிந்து அதனை எதிர்க்கலாம். சட்டம் தரும் சலுகையை எதிர்க்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

இந்து மாணவர்களுக்கு உதவித்தொகை தில்லியில் போராட்டம் நடைபெறும்: பொன் இராதாகிருட்டிணன் அறிவிப்பு



இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் ஜூலை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவசான், செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி உட்பட பலர் பேசினார்கள். இதில் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

கடந்த ஒரு ஆண்டில் இந்து இயக்க நிர்வாகிகள் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 19 கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த படுகொலைகளுக்கு விளக்கமளித்து டிஜிபி அறிக்கை வெளியிடும் போது, இந்த கொலைகள் அனைத்தும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதும் பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் உடனடியாக மூன்று எம்.பி.க்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த குழுவும் விசாரணை நடத்திய பின்னர் காவல்துறை தலைவர், தலைமை செயலர், உள்துறை செயலர் என மூன்று பேரை சந்திக்க அனுமதி கோரினோம். ஆனால் உள்துறை செயலர் மட்டுமே சந்தித்தார். இந்த சந்திப்புக்கு முன்னரே டிஜிபி அறிக்கை கொடுக்கிறார். டிஜிபி-யின் அறிக்கையை தமிழக பா.ஜ., நிராகரிக்கிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.,வின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அதன் தலைவர்களை குறிவைத்து கொலை செய்கின்றனர். அண்மையில் சில "டிவி'க்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் பா.ஜ., பத்து சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், இரண்டு தொகுதிகளில் தனிப்பட்ட செல்வாக்கில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது இதை 15 சதவீத வளர்ச்சியாக மாற்றநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்து இயக்க தலைவர்களை கொன்று பா.ஜ.,வையும் ஆயுதம் எடுக்க வைக்க முயற்சிக்கின்றனர். அது நடக்காது. நான் வெட்டப்பட்டால் கூட அது நடக்காது.

தமிழ்நாட்டில் ஒரு நாள் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும். பிற மத குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டாம் என்று பா.ஜ., கூறவில்லை. மாறாக இந்து குழந்தைகளுக்கும் அந்த உதவித்தொகையை வழங்குங்கள் என்றுதான் கோருகிறோம். இதற்காக விரைவில் டில்லியிலும் ஒரு போராட்டம் நடத்த திட்டமிடப்படுள்ளது. நரேந்திர மோடி பிரதமரானதும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் உத்தரவில் கையெழுத்திடுவார். டாக்டர் அம்பேத்கார் கண்ட கனவுகளை நனவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார். போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.



செவ்வாய், 22 ஜனவரி, 2013

2 அடி உயரத் தம்பி உதவித்தொகை கோரி விண்ணப்பம்



ஒரு குடும்பத்தில் 2 அடி உயரத் தமையன் தம்பியர் : உதவித்தொகை கோரி "கடைக்குட்டி' விண்ணப்பம்


இராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஒரு குடும்பத்தில் பிறந்த 3 சகோதரர்களும் 2 அடி உயரமே உள்ளனர். இவர்களில் இளையவர் வாழ உதவித்தொகை கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். திருப்பாலைக்குடியை சேர்ந்தவர் காதர்கனி, 47. இவர் இரண்டு அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளார்.



வழியின்றி தவிப்பதால், அரசு உதவித்தொகை கோரி ராமநாதபுரம் கலெக்டர் நந்தக்குமாரிடம் மனு கொடுத்தார். இவர் கூறியதாவது: தந்தை ரபீக், 79. தாயார் இபுராஹிம்மா சமீபத்தில் இறந்துவிட்டார். உடன் பிறந்த இரு சகோதாரர்களும் இரண்டு அடி உயரமே உள்ளனர். மூத்தவர் சீனி உம்மர், 58, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சகோதரர் நாகூர்கனி பிச்சை எடுக்கிறார்.

நான், பெரியம்மா மகள் வீட்டில் தங்கி உள்ளேன். என்னால், எந்த வேலையும் செய்ய முடியாது. உதவிக்கு ஆள் தேவை. மாற்றுத்திறனாளி அடையாள அட்டை இருக்கிறது. வாழ வழியின்றி உள்ளதால் அரசின் உதவித்தொகை கோரி மூன்று முறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இப்போதும் மனு கொடுத்துள்ளேன், என்றார்.



கலெக்டர் நந்தக்குமார் கூறியதாவது: குறை தீர் கூட்டத்தின்போது, நானும் டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் இருவரும் மனுக்களை வாங்கினோம். காதர்கனி மனு குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை. இருப்பினும், அவரது மனு குறித்து விசாரணை நடத்தி உரிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 

சனி, 6 அக்டோபர், 2012

பெண்கள் உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை

பெண்கள் உயர்கல்வி பெற கல்வி உதவித்தொகை

First Published : 03 October 2012 11:20 AM IST
பெண்கள் பல்வேறு துறைகளில் அதிகாரம் பெற ஊக்கப்படுத்துவதற்காகவும் உயர் கல்வி பெறவும்  பேர் அண்ட் லவ்லி நிறுவனம் உதவித்தொகை வழங்கவுள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்பு என்ற வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10வது ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ள பேர் & லவ்லி அறக்கட்டளை நாடு முழுவதிலுமிருந்தும் பெண்களிடமிருந்து உயர்கல்வியை மேற்கொள்வதற்காக பேர் & லவ்லி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுகிறது. இந்த ஸ்காலர்ஷிப் திட்டம் மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் குறித்த தகவல்கள் www.fairandlovely.in என்ற தளத்தில் கிடைக்கப்பெறும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அகியவைகளில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களை பெறுவதே இதற்கான குறைந்தபட்ச தகுதியாகும்.
விண்ணப்பிக்கும் முறை; www.fairandlovely.in என்னும் தளத்திலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். ஆர்வமுள்ள பெண்கள் 1800 220 130 என்னும் கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான இறுதித் தேதி 30 அக்டோபர், 2012 ஆகும். பின்வரும் முகவரிக்கும் விண்ணப்பங்கள் தபாலில் அனுப்பப்படலாம்: பேர் & லவ்லி ஸ்காலர்ஷிப்  2012, பேர் & லவ்லி அறக்கட்டளை, தபால் பெட்டி எண்.11281, மரைன் லைன்ஸ் தபால் அலுவலகம், மும்பை – 400 020

வியாழன், 2 ஜூலை, 2009

உரிமைக்குரல்...
தினமணி






உதவித் தொகையை பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.10,000-மாகவும் பட்டமேற்படிப்பு படிக்கும் டாக்டர்களுக்கு ரூ.25,000-மாகவும் அரசு உயர்த்த வேண்டும் என்று கோரி, சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்த மருத்துவ மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள 3,650 பட்டமேற்படிப்பு, பயிற்சி, உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மருத்துவர்கள் வியாழக்கிழமை (ஜூலை 2) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கருத்துக்கள்

சரியான கோரிக்கை. மருத்துவம் முடித்து விட்டுத் தங்கள் உழைப்பை நல்குகிறார்கள். பயிற்சியாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் இந்த உழைப்பையும் கருத்தில் கொண்டு பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். சில ஆயிரம் மட்டுமே உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்துவதால் அரசிற்கு இழப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், ஐந்தாண்டு முடித்த பின்பும் அவர்களது வருவாயை நம்பியுள்ள குடும்பத்திற்கு உதவ இயலாமல் உள்ள மருத்துவர்களின் குடும்பங்கள் - கடன்பட்டும் இடர்ப்பட்டும் படிக்க வைத்த குடும்பத்தினர் - சிறிதேனும் மன அமைதி காண்பர். எனவே, மருத்துவர்களின் படிப்புக் காலத்தைக் கருத்தில் கொண்டும் அவர்களின் குடும்பத்தினரின் நலன்களைக் கருத்தில் கொண்டும் உதவித் தொகையை உடனே உயர்த்துக! மருத்துவர்களின் கவனம் தொழலில் மட்டுமே இருக்க வழிவகை செய்க!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/2/2009 4:21:00 AM