புதன், 31 அக்டோபர், 2012

சென்னை - கன்னியாகுமரி இரட்டை இருப்புபபாதை த் திட்டம் கருநாடகத்தை ப் பின்பற்றி முன்னேறுமா தமிழகம்?

சென்னை - கன்னியாகுமரி இரட்டை  இருப்புபபாதை த்  திட்டம் கருநாடகத்தை ப் பின்பற்றி முன்னேறுமா தமிழகம்?

கர்நாடகா "பார்முலா'வை, தமிழகம் பின்பற்றினால் மட்டுமே, செசன்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம் போன்ற, பல்வேறு ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க முடியும்.கர்நாடகாவில், கடலோர பகுதிகளுக்கும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளுக்கும் இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டங்களுக்கான செலவில், 50சதவீதத்தை மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது.

இதன்படி, நடப்பு நிதியாண்டில், கர்நாடகாவில், 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான, ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், 3,600 கோடி ரூபாயை அம்மாநில அரசு, ஏற்றுக் கொள்வதாகஅறிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், கர்நாடகாவில் ரயில் கட்டமைப்பு பணிகளுக்காக, 15,623 கோடி ரூபாயை ரயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதே "பார்முலா'வை தமிழக அரசும் பின்பற்றினால், மாநிலத்தில் பல்வேறு ரயில் பாதை திட்டங்கள் விரைந்து முடிக்கப்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் எனலாம்.குறிப்பாக, தமிழக அரசு பாதி செலவை ஏற்றால், நத்தை வேகத்தில் நடைபெற்று வரும் கன்னியாகுமரி - செசன்னை இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை, விரைந்து முடிக்கலாம்.

இவ்வழி தடம், கன்னியாகுமரியில் துவங்கி, நாகர்கோவில், திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மாநில அளவிலான ரயில் போக்கு வரத்துக்கு முதுகெலும்பாகவும் விளங்குகிறது.சென்னையிலிருந்து, அரசு விரைவு பேருந்து மூலம் கன்னியாகுமரி செசல்வதற்கு கட்டணம், 530 ரூபாய். இது, தனியார் பேருந்தில், 670 ரூபாய். அதேசமயம்,ரயிலில் படுக்கை வசசதிக்கான கட்டணம், 305 ரூபாய் பேருந்துடன் ஒப்பிடும் போது, ரயில் பயணம் சுகமாகவும், கட்டணம் மிகவும் குறைவாகவும் உள்ளது. இதனால், ஏழை, பணக்காரர் என, வித்தியாசமின்றி அனைவரும் ரயிலில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்.
வட மாநிலங்கள்:


கன்னியாகுமரி - சென்னை இடையிலான 742 கி.மீ., தூரத்தை, ரயிலில் கடக்க, 13.30 மணி நேரமாகிறது. இது, இரு வழி பாதையாக மாற்றப்பட்டு, முழுவதும் மின்மயமாகும் பட்சசத்தில், பயண நேரம் கணிசமாக குறையும். நாகர்கோவில், கன்னியாகுமரி, மதுரை வழியாக வட மாநிலங்களுக்கு, அதிக ரயில்களை இயக்க முடியும்.இந்த வழி தடத்தில், தற்போது சென்னை - செங்கல்பட்டு (56 கி.மீ.,) மற்றும் மதுரை - திண்டுக்கல் (66 கி.மீ.,) ஆகியவை மட்டுமே, இரு வழி தடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள வழி தடங்களையும், இரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என்பது, ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை. ரயில்வே நிர்வாகம் மூன்று கட்டங்களாக இத்திட்டத்தை, நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.செங்கல்பட்டு - விழுப்புரம் செங்கல்பட்டு - விழுப்புரம் (103 கி.மீ.,), ரயில் தடத்தில், மதுராந்தகம், திண்டிவனம், மேல்மருவத்தூர் உட்பட, 14 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த பகுதியில், மீட்டர்கேஜ் மற்றும் பிராட்கேஜ் (அகல ரயில் பாதை) என, இரண்டு வகையான ரயில் வழி தடங்கள் உள்ளன.

விழுப்புரத்திலிருந்து, புதுச்சேரி, திருவண்ணாமலை, சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ரயில்கள் பிரிந்து செசல்கின்றன.கடந்த 2006-07ல் ரயில்வே நிதிநிலை அறிக்கையில், செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே, 397 கோடி ரூபாய் திட்டச் செசலவில் அகல ரயில் பாதை அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்காக, 2011-12 மற்றும் 2012-13ம் ரயில்வே பட்ஜெட்டில், முறையே, 268 கோடி ரூபாய் மற்றும் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதையடுத்து, மீட்டர்கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றதும், இரண்டு அகல ரயில் பாதைகளில் ரயில்கள் செல்லும்.

மேம்பால பணிகள்:


தற்போது, செங்கல்பட்டு - விழுப்புரம் வழி தடத்தில், விழுப்புரம் - முண்டியம்பாக்கம், மதுராந்தகம் - மேல்மருவத்தூர், இடையே மட்டும், இரு வழி பாதைக்கான பணிகள் முடிவுற்று, ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், முண்டியம்பாக்கம் - விக்கிரவாண்டி - பேரணி - மைலம் - திண்டிவனம் - ஒலக்கூர் - தொழுப்பேடு - அச்சிறுப்பாக்கம் - மேல்மருவத்தூர் - மதுராந்தகம் - கருங்குழி - படாளம் - ஒட்டிவாக்கம் - செங்கல்பட்டு ஆகிய ரயில் பாதைகளில், மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், ஆற்று பாலங்கள், மின் இணைப்பு, கடவு பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள், இந்த பணிகள் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம் - திண்டுக்கல்:


விழுப்புரம்-திண்டுக்கல் (273 கி.மீ.,) இடையே, இரு வழி அகல ரயில் பாதை அமைக்கப்படும் என, கடந்த 2008-09ம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 822 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, இந்த இருவழி பாதை திட்டத்தை, ரயில்வே துறையின், "ரயில் விகாஸ் நிகாம்' என்ற துணை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த வழி தடத்தில், விருத்தாசலம், திருச்சி உட்பட, 41 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த தடத்தில், விருத்தாசலத்திலிருந்து, ஆத்தூர் வழியாக, சேலம் ரயில் வழித்தடமும், திருச்சியிலிருந்து, கரூர், ராமேஸ்வரம், மதுரை, தஞ்சை, மார்க்கங்களில், ரயில் வழி தடங்கள் பிரிந்து செல்கின்றன.தற்போதைய நிலவரப்படி, இரு வழி பாதைக்கான ஆய்வு பணிகள்மட்டுமே முடிவடைந்துள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், குறைவான நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால், இப்பணிகள் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி - மதுரை ரயில்வே அமைச்சகம், நடப்பு2012- 13ம் நிதியாண்டடிற்கான பட்ஜெட்டில், கன்னியாகுமரி - மதுரை (246 கி.மீ.,), வழித் தடங்களை, இரு வழி பாதையாக மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தது.ஆனால், இதுநாள் வரை, இந்ததிட்டத்தை ஆய்வு செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இந்த திட்டத்தை ஆய்வு செய்து, செயல்வடிவிற் கான அறிக்கையை, ரயில்வேவாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

கேரளா:


கேரளாவை சேசர்ந்த அனைத்து எம்.பி.க்களும் கட்சி பாகுபாடின்றி, ஒன்றிணைந்து, அம்மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்õக, பார்லிமென்டில் குரல் கொடுக்கின்றனர். ரயில்வே திட்ட அறிக்கையைதயார் செய்து, ரயில்வே அமைச்சர், பிரதமர் ஆகியோரிடம் நேரடியாக அளிக்கின்றனர்.மேலும், கேரளாவில் மேற்கொள்ளப்படும் ரயிவே திட்டங்களை, இவர்கள் தீவிரமாக கண்காணித்து, காலதாமதம் ஏற்பட்டால், பார்லிமென்டில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கின்றனர். இதனால், தமிழகத்தை விட குறைந்த நிலப்பரப்பை கொண்ட, கேரளாவில், ரயில் திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த "பார்முலா'வையும், தமிழக எம்.பி.,க்கள் பின்பற்றினால், மாநிலத்தில், மந்த கதியில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் விறு விறுப்படையும். மக்கள் நலனுக்காக, கட்சி வேறுபாடுகளை மறந்து, தமிழக எம்.பி.,க்கள் ஓங்கி குரல் கொடுத்தால்,காரியம் நடக்கும்.செய்வார்களா?

எம்.பி.,க்கள் ஒன்றுபடுவரா? தமிழகத்தில், 39 லோக்சபா எம்.பி.,க்களும், 18 ராஜ்யசபா உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நியமன உறுப்பினர்கள் என,59 பார்லிமென்ட் உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரியிலிருந்து,இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர்.இவர்கள் அனைவரும், கட்சி பாகுபாடின்றி ஒன்றிணைந்து, ரயில்வே வாரிய தலைவர், திட்டக்குழு துணை தலைவர்,பிரதமர் ஆகியோரை நேரடியாக சிந்திக்க வேண்டும்.இந்த இரு வழி பாதை திட்டத்தின் அவசியத்தைவிளக்கி, அதிக நிதி ஒதுக்கீடு பெற்று தரவேண்டும் என்பதே ஓட்டளித்தரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.
அனுமதி மறுக்கலாமா?


நான் அமைச்சராக இருந்த போது, சென்னை சென்ட்ரல் - எழும்பூர் இணைப்பு வழித் தட திட்டத்திற்காக, 90 கோடி ரூபாய் ஒதுக்கினேன். ஆனால், மத்திய சிறைச்சசாலை, மெட்ரோ ரயில்என, காரணங்கள் காட்டி மாநில அரசு, திட்டத்திற்கு அனுமதி தர மறுத்தது. இதுபோன்ற முட்டுக்கட்டைகளால் தான், தமிழகத்தில்ரயில்வே திட்டங்கள் முடங்கி போயுள்ளன.

ஏ.கே.மூர்த்திமுன்னாள் ரயில்வே இணை அமைச்சசர்

மக்கள் குரல்

மக்கள் குரல்""ஆண்டுதோறும் ரயில்வே பட்ஜெட்டில், சென்னையிலிருந்து, புதிய ரயில்களை இயக்கும் அறிவிப்பு வெளியாகிறது.இதனால், வட மாநிலங்கள் மட்டுமே பயன் அடைகின்றன. கன்னியாகுமரியிலிருந்து, மதுரை வழியே மற்றமாநிலங்களுக்கு செசல்லும் வகையில், புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமது ரபிமதுரை

""தினமும் திண்டிவனத்திலிருந்து, செசன்னைக்கு வந்து வேலை பார்த்து விட்டு செல்கிறேன். இதற்கு, போக, வர நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. செங்கல்பட்டு - விழுப்புரம் இரட்டை பாதை பணி நிறைவு பெற்றால், ஒரு மணி நேர பயணம் மிச்சசமாகும்.

தனசேசகர்திண்டிவனம்


தென் மாவட்டங்கள் தொழில்வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன.நாகர்கோவில் - திருநெல்வேலி -மதுரை வழித் தடங்களில் ஒரு வழிபாதையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால், ரயில் பயணம்நெருக்கடியாக உள்ளது. தென்மாவட்ட ரயில் பாதைகள் இரு வழியாகமாற்றப்பட்டால், அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படும். இதனால்,தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாகி, அப்பகுதிமக்களின் பொருளாதாரம் மேம்படும்.

எட்வர்ட் ஜெனி, செயலர்:ரயில் பயணிகள் கூட்டமைப்பு, கன்னியாகுமரி.

மதுரை - கன்னியாகுமரிமொத்தம் - 246 கி.மீ.,நடப்பு 2012-13ம்பட்ஜெட்டில்இரு வழி பாதை அமைக்கஆய்வு செய்யஅனுமதிவிழுப்புரம் - திண்டுக்கல்மொத்தம் 273 கி.மீ.,ஆய்வு பணிகள் நிறைவுநிலம் கையகப்படுத்தல்,மேம்பால பணிகள்நடைபெற்று வருகின்றனஇரு வழி பாதை அமைக்கும் பணியை ரயில்வே விகாஸ்செசய்து வருகிறது

-தினமலர் சிறப்பு ச் செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக