வழக்கு மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழக்கு மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 செப்டம்பர், 2013

தமிழை வழக்கு மொழியாக்க நடவடிக்கை: தலைமை நீதிபதி உறுதி

"தமிழைச், சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்} என்பதுதான் முதன்மை வேண்டுகோள். இதற்கான நடவடிக்கை எடுக்க உரியன செய்வதாகத்தலைமை நீதிபதி (பொ) உறுதி அளித்துள்ளார். அவ்வாறிருக்க, "தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதி மன்றங்களில் தமிழை கட்டாய மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்"  என முதன்மையைத் திரிப்பது ஏன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


தமிழை வழக்கு மொழியாக்க நடவடிக்கை: தலைமை நீதிபதி உறுதி

Comment (1)   ·   print   ·   T+  
தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதி மன்றங்களில் தமிழை க் கட்டாய மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அகர்வால் உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டுவந்த வழக்குரைஞர்கள் கு.ஞா.பகத்சிங், மு.வேல்முருகன் மற்றும் இறை.அங்கயற்கண்ணி ஆகிய மூவரும் தங்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் 3 பேர் உயர்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரும் 2006-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்றங்களின் மொழி ஆங்கிலம் என இருப்பதை திருத்தம் செய்து அந்தந்த மக்களின் தாய்மொழியே உயர் நீதிமன்றங்களின் மொழி என மாற்றம் செய்ய வேண்டும்.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் 1961-ம் ஆண்டிலேயே அந்த மாநிலங்களின் மொழியான இந்தியை உயர்நீதிமன்ற மொழியாக மத்திய அரசு ஆக்கியது. தமிழுக்கு மட்டும் தடை விதிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் தாய்மொழியிலேயே சாட்சியங்கள் முதலானவற்றை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கீழமை நீதி மன்றங்களில் தமிழை கட்டாய மொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று தமிழை சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் உறுதியளித்ததைத் தொடர்ந்து, வழக்குரைஞர்கள் மூவரும் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதனிடையே, இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திங்கள், 15 ஜூலை, 2013

உயர் நீதிமன்றத்தின் மொழியாகத் தமிழ்: கருணாநிதி

உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாகத் தமிழ்: கருணாநிதி வலியுறுத்தல்


சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கு மொழியாகத் தமிழைச் சட்டப்படி கையாளுவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்று தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:-
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சவுதி அரேபியாவில் தவிக்கும் கணவரை மீட்டுத் தரக் கோரிய வழக்கில் தமிழில் வாதாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் அரசியல் அமைப்பு அமர்வு, உயர் நீதிமன்றத்திலும்,  உச்ச நீதிமன்றத்திலும் ஆங்கிலத்தில்தான் வாதாட வேண்டுமென்று ஆயிஷா பானு என்பவர் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.நீதிபதியின் மீது எந்தவிதமான குறையையும் நான் சொல்ல முன்வரவில்லை.
2006 டிசம்பர் 6-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழைக் கொண்டு வரவேண்டுமென்று சட்டப்பேரவையில் நானே (கருணாநிதி) முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தத் தீர்மான நகலை தமிழக ஆளுநரின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை அவர் இல்லத்தில் சந்தித்து, சட்டப்பேரவையின் தீர்மானத்தைக் கொடுத்து, வழக்கு மொழியாகத் தமிழைக் கொண்டு வருவதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் உச்ச நீதிமன்றம் ஆட்சேபணை தெரிவித்த காரணத்தினால் மத்திய அரசினால் அப்போது தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க முடியவில்லை.
எனினும் தமிழகத்தில் அப்போது திமுக ஆட்சி நடைபெற்ற காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகளின் விசாரணைகள் எல்லாம் தமிழிலே நடைபெற்றன.உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதாக எம்.ஒய்.இக்பால் இருந்தபோது தமிழிலேயே வாதாட அனுமதித்தார்.தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தமிழில் வாதாட அனுமதி மறுத்ததைக் கண்டித்து, வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அந்தப் போராட்டம் மிகவும் நியாயமான போராட்டம் என்பதை வழக்குரைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.
வட மாநிலங்களில் ஹிந்தி வழக்காடும் மொழியாக அனுமதிக்கப் பட்டுள்ளதுபோல, தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திலும் வழக்காடும் மொழியாக தமிழைச் சட்டப்படி கையாளுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.