ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 அக்டோபர், 2013

குன்னூரில் ஆனைமலை பல்லி: ஆய்வு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82668320131015004011.jpg

குன்னூரில் சிக்கிய "ஆனைமலை பல்லி': அபூர்வ உயிரினம் குறித்து ஆய்வு
 
ஊட்டி: அரிய வகை பல்லியினம் குறித்த ஆய்வில், ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில், அரிய வகை பல்லியினம், ஒருவரது வீட்டு தோட்டத்தில் இருந்துள்ளது. அதை, ஊட்டி அரசுக் கலை கல்லூரி விலங்கியல் துறை மாணவர்கள், ஆய்வு செய்து வருகின்றனர். கல்லூரி பேராசிரியர்கள் சனில், கண்ணன், மாணவர் மோகன் கூறியதாவது: ஊர்வன வகையை சேர்ந்த இப்பல்லியினம், "ஹெபிடெக்டைல்ஸ்' வகையை சார்ந்தது. இது, "ஆனைமலை பல்லி' எனவும் அழைக்கப்படுகிறது. "ஹெபிடெக்டைல்ஸ் ஆனைமலையன் மற்றும் ஹெபிடெக்டைல்ஸ் பிரினெட்டஸ்' என, இரு பல்லியினங்களின் சிற்றினத்தில் இருந்து, வேறுபட்டு காணப்படுகின்றன.

இதன் வால் மற்றும் உருவ அமைப்பு, சற்று வேறுபட்டு காணப்படுவதால், புதிய சிற்றினமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரவில் உத்வேகத்துடன், சிலந்தி மற்றும் பல வகை பூச்சிகளை விரும்பி உட்கொள்ளும் இப்பல்லிகள், பூச்சிகளை கட்டுப்படுத்தும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. இவை பெரும்பாலும், ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா, ஆப்பரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களில் காணப்படுகின்றன; 7.5 முதல், 15 செ.மீ., வளரக் கூடியவை. இவற்றால் மனிதர்களுக்கு எவ்வித தீங்கும் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஞாயிறு, 2 ஜூன், 2013

பூமிக்கு அப்பால் பறந்து சென்ற விண்பாறை ஆய்வு

பூமிக்கு அப்பால் பறந்து சென்ற  3  அ.க./கி.மீ. நீளமுடைய விண்பாறை ஆய்வு
பூமிக்கு அப்பால் பறந்து சென்ற சுமார் 3 கி.மீ. நீளமுடைய விண்பாறை ஆய்வு
வாசிங்டன், சூன் 2-

பூமியிலிருந்து 58 லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் 2.7 கிலோமீட்டர் நீளமுடைய விண்பாறை ஒன்று வெள்ளியன்று கடந்து சென்று இருக்கிறது. இந்த விண்பாறையானது '1998 க்யூ.இ-2' என அழைக்கப்படுகிறது.

ஒரு சிறிய துணைக்கோளும் இந்த விண்பாறையை சுற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பூமிக்கு அருகே பறந்து சென்ற இந்த விண்பாறையை குறித்து விவரங்களை ரேடர் டெலெஸ்கோப் மூலம் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.

பூமிக்கு அப்பால் இதுபோன்று சுமார் 9000 விண்பாறை மற்றும் விண்கற்கள் பறந்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய ஒரு விண்பாறை பூமியில் மோதுமானால் இங்கு உயிர்கள் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

வியாழன், 21 மார்ச், 2013

மு.க. தாலின் வீட்டில் மை.பு.பி. /சிபிஐ ஆய்வு

மு.க. தாலின் வீட்டில்  மை.பு.பி. /சிபிஐ  ஆய்வு திமுகவுக்கு மத்திய அரசு தரும் நெருக்கடி?


மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக பொருளாளர்  ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகளின் சோதனைக்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை
மேலும் ஸ்டலினின் நண்பரான ராஜாசங்கர் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது
இன்று காலை 7.15 மணி முதல் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாலினின் வீட்டுக்கு இன்று காலை அதிகாரிகள் 7 பேர் குழு வந்ததாகத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக் கார்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் ஒன்று ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வெளிநாட்டு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் திமுக விலகிய நிலையில், அடுத்த 2 நாட்களுக்குள் சிபிஐ சோதனை மூலம் அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே இந்த சோதனை பார்க்கப்படுகிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெள்ளி, 8 மார்ச், 2013

பாலியல் வன்முறை அதிகரிப்பு

தில்லி மாணவி கற்பழிப்பு நிகழ்விற்குப்  பிறகு பாலியல் வன்முறை அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்துக்கு பிறகு பாலியல் பலாத்காரம் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
புதுடெல்லி, மார்ச். 8-
நாட்டின் தலைநகரான டெல்லியில் பெண் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கொதித்து எழுந்து போராடினார்கள். இதையடுத்து மத்திய அரசு கற்பழிப்பு குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகும் கற்பழிப்பு குற்றங்கள் குறையவில்லை. தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பாலியல் கொடுமை அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமையும், வியாழக்கிழமையும் ஓட்டலில் பணிபுரிந்த இளம்பெண், 15 வயது வேலைக்கார சிறுமி, குடும்பத்தலைவி, வேலை தேடி வந்த பெண், மற்றும் 8 வயது சிறுமி என 5 பேர் கற்பழிக்கப்பட்டனர்.
டிசம்பர் சம்பவத்துக்கு பின் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்பட்டதற்கு பதிலாக குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும் டெல்லியில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படும் சம்பவம் நடப்பதாகவும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு (2012) ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படும் சம்பவம் நடந்தது. இந்த ஆண்டு அதுவும் தொடக்கத்திலேயே பல மடங்கு அதிகரித்து இருப்பது போலீஸ் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதேபோல் டெல்லியை ஒட்டி உள்ள நகரங்களான குர்கான், நொய்டாவிலும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. குர்கானில் மாதத்துக்கு 7 கற்பழிப்பு மற்றும் மானபங்கம் சம்பவங்கள் நடந்தது. அது தற்போது 8 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று காலை குர்கானில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த 27 வயது பெண் சக ஆண் ஊழியரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறியிருந்தார். பின்னர் அவர் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆனால் போலீசார் வழக்கை முடிக்கவில்லை. அது பொய் புகாரா? நடந்தது என்ன என்று விசாரணை நடக்கிறது.
நொய்டாவிலும் இந்த ஆண்டு கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் 4 பாலியல் கொடுமை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு மாதத்துக்கு 10 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
கற்பழிப்பு சம்பவங்கள் குறைவதற்கு பதிலாக அதிகரித்து இருப்பது போலீசுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கவலை அளிப்பதாக உள்ளது.
டெல்லியில் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்று ஆய்வு நடத்தியதில் 90 சதவீத பெண்கள், 'இரவு நேரத்தில் டெல்லியில் நடமாடுவது பாதுகாப்பானது அல்ல' என்று தெரிவித்துள்ளனர்.
3-ல் 2 பங்கு பெண்கள் கூறுகையில், டெல்லி தெருக்களில் நடந்து செல்லும் போது தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அலுவலகங்களில் பாலியல் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். வீடுகளில் நடந்த குற்றங்கள் குறைந்துள்ளது. ஆனால் வேலை பார்க்கும் இடங்கள் இன்னும் பெண்களுக்கு சவாலாகவே விளங்குவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் அல்ல. 94 சதவீதம் பேரும், இரவு நேரம் பாதுகாப்பானது அல்ல 96 சதவீதம் பேரும், மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது சிறப்பானது என்று 67 சதவீதம் பேரும் அலுவலகத்தில் செக்ஸ் கொடுமையை எதிர்த்து போராட வேண்டி இருப்பதாக 63 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வியாழன், 10 ஜனவரி, 2013

இயற்கைச் சாய ஆய்வு


இயற்கைச் சாயம் உற்பத்தியி்ல் ஆய்வு : அரசு கல்லூரி மாணவிகள் அபாரம்
 
 
 
கோவை,: இராசாயன சாயக்கழிவு பிரச்னைக்கு இயற்கை முறையில் சாயங்கள் தயாரிப்பதே தீர்வாக அமையும் என்ற நோக்கில் அரசு கல்லூரி மாணவிகள் தங்களின் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர். உணவுகளில் பயன்படுத்தும் ராசாயன சாயங்கள் நமக்கு ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பிற துறைகளில் பயன்படுத்தப்பட்டு பின்பு வெளிவரும் ராசாயன சாயக்கழிவுகளால் நிலத்தடி நீர், நதி, விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.
இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில், சென்னை அண்ணா பல்கலை மாணவியர் சரண்யா, திவ்யாலட்சுமி, உஷா ஆகியோர் கோவை அரசு கலை கல்லூரியில் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி மேற்பார்வையில் இயற்கை சாயங்கள் தயாரிப்பு என்ற தலைப்பில் கடந்த 1 வருடமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்ச் உள்ளிட்ட 8 சாயங்களை தூய செந்தூர் பொடி,மஞ்சள், சோத்துக்கத்தாலை, வேப்பம், மாதுளை, மாசிக்காய், ஓம விதை மற்றும் பொடி, கருந்துளசி, ராமர் துளசி உள்ளிட்ட இயற்கை தாவரங்களில் மைக்ரோ என் கேப்சுலேன் மற்றும் கிராஸ் லிங்கிங் தொழில்நுட்ப முறை பயன்படுத்தி தயாரித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை அரசு கலை கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் ரவி கூறுகையில், "" ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய நேரம் இது. தற்போது அண்ணா பல்கலை எம். டெக் மாணவியர் 3 பேர் இயற்கை சாயம் தயாரிப்பு சார்ந்த ஆராய்ச்சியை செய்து வருகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சாயங்கள் 15 தடவை நீரில் அலசினாலும் சாயம் போகாது மேலும் உணவு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சியை இந்த ஆராய்ச்சி உருவாக்கும். அரசின் ஒத்துழைப்பு இதற்கு கிடைத்தால் ஆராய்ச்சிகள் பெரிய அளவில் செய்து சாதிக்க இந்த மாணவிகளால் முடியும், '' என்றார்.ஆராய்ச்சியில் மாணவிகள் கூறுகையில்,
"" தொடர்ந்து இந்த ஆராய்ச்சிகள் 2 அல்லது 3 ஆண்டுகள் முயற்சித்தால் ராசாயண சாயங்களுக்கு மாற்றாக இயற்கை சாயங்களை பயன்படுத்த முடியும். உணவு துறையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ராசாயன சாயங்கள் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவால் புற்றுநோய் உட்பட பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதை அடிப்படையாக வைத்து இயற்கை சாயங்கள் தயாரிக்கும்ஆராய்ச்சியில் இறங்கினோம். பல தாவரங்களை ஆராய்ச்சி செய்து தொழில்நுட்ப உதவியுடன் எட்டு நிறங்களை உருவாக்கியுள்ளோம். இயற்கை முறையில் அனைத்து சாயங்களையும் உருவாக்குவது சாத்தியமே என்று மாணவிகள் தெரிவித்தனர்.
 

புதன், 26 டிசம்பர், 2012

3 அ.கோ.(கி.மீ.) தொலைவிலேயே தொலைந்த சுற்றுச்சூழல்

மூன்று கி.மீ., தூரத்திற்குள் தொலைந்த சுற்றுச்சூழல் : மதுரை மாணவர்கள் ஆய்வு

மதுரை: "மூன்று கி.மீ., தூரத்திற்குள் தொலைந்த சுற்றுச்சூழல், விவசாயம்'குறித்து, மதுரைக் கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு சர்வதேச அளவில் சிறந்தவற்றுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

விப்ரோ நிறுவனம் நடத்திய "எர்த் என் 2012' சர்வதேசப் போட்டிக்கு, பள்ளி, கல்லூரிகளில் இருந்து 1200 ஆய்வுகள் அனுப்பப்பட்டன. சிறந்த 40 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இத்திட்டத்தை தயாரித்த உதவிப்பேராசிரியர் பாலகிருஷ்ணன், மாணவர்கள் ஆறுமுகதாஸ், ஆனந்தசீனிவாசன், நாகராமிகா, அனுஸ்ரீ கூறியதாவது: சிறப்பு படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறியியல் மாணவர்கள். நகரமயமாதலில் ஏற்படும் விளைவுகள், தண்ணீர் பற்றாக்குறை, தட்ப வெப்பநிலை மாற்றம், பல்லுயிர் பரவல் தலைப்புகளில் ஒன்றைப் பற்றி திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். ஆனால், நான்கு தலைப்புகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி, அறிக்கை தயாரித்தோம். இதற்காக மதுரை நாகமலை-துவரிமான் மூன்று கி.மீ., நெடுஞ்சாலையை ஆய்வு செய்தோம். 200 மீட்டர் அகலம், மூன்று கி.மீ., தூரத்திற்கு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன. ஆண்டுக்கு 3200 நெல்மூடைகளை இழந்துள்ளோம். அங்கிருந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான ஏழு கிணறுகளை மூடியதால், 65 ஏக்கரில் விவசாயம் நின்றது. விளைநிலங்கள் மனைகளாக மாறின. 20 ஆண்டுகளாக இருந்த 15 மரங்கள் வெட்டப்பட்டன. இதன் மூலம் பசுமையின் பரப்பும், ஆக்ஸிஜன் அளவும் குறைந்தது. நிறைய இடங்களில் நெடுஞ்சாலையுடன் கிராமத்து குறுக்குத் தெருக்கள் இணைகின்றன. சாதாரண ரோடுகளைப் போல, கிராமத்தினர், கால்நடைகள் கடப்பதால், உயிரிழப்பு ஏற்படுகிறது. மூன்று கி.மீ.,தூரத்திற்குள், சுற்றுச்சூழலில் இவ்வளவு பிரச்னைகளை தெரிய முடிந்தது. காஷ்மீர்-கன்னியாகுமரி வரை, எத்தனை ஆயிரம் கி.மீட்டரில் விளைநிலங்கள், மரங்கள் அழிந்திருக்கும். இதை விளக்குவதே நோக்கம். ஆய்வு செய்த தூரத்திற்கு, மரக்கன்றுகள் வழங்கினால், நடத் தயாராக இருக்கிறோம். மீண்டும் பசுமையை ஏற்படுத்த வேண்டும். விளைநிலங்களை மனைநிலங்களாக மாற்றக்கூடாதென, துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம், என்றனர்.


திங்கள், 19 நவம்பர், 2012

விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் ஓட்டுகின்றனர்:

விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் விமானம் ஓட்டுகின்றனர்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்
விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் விமானம் ஓட்டுகின்றனர்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்
லண்டன், நவ. 19-

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர், விமானிகளின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கொஞ்சம் அசந்தாலோ அல்லது கவனம் சிதறினாலோ ஏற்படும் விளைவை எண்ணிப் பார்த்தாலே நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் விமானிகளில் பலர் அரைத் தூக்கத்தில் விமானம் ஓட்டுகிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆய்வு முடிவு அதைத்தான் சொல்கிறது.

ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒரு விமானிகள், நடுவானில் விமானம் கட்டுப்பாட்டுக்குள் வந்து சீராக சென்றுகொண்டிருக்கும்போது தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு விமானிகள் காக்பிட்டில் (விமானிகள் அறை) இருக்கும்போது சோர்வை சமாளித்துக்கொண்டு இருக்கின்றனர்.

விமானிகள் சங்கமான ஐரோப்பிய காக்பிட் அசோசியேசன் வெளியிட்ட இந்த ஆய்வு முடிவில், பெரும்பாலான விமானிகள் விமானம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அரைத் தூக்கத்திலோ அல்லது எழுப்பும் வரை முழு தூக்கத்திலோ இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவலை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் நடத்திய ஆய்வில், 43 முதல் 54 சதவீத விமானிகள் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது சோர்வு காரணமாக தானாகவே தூங்கியதாகவும், சக விமானி எழுப்பும் வரை தூங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

2010 முதல் 2012-ம் ஆண்டு வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய விமானிகளிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவு வெளியான சில வாரங்களில், விமானத்தில் விமானிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வேலை நேரம், ஓய்வு தேவை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு அதன் திட்டங்களை ஐரோப்பிய விமான பாதுகாப்பு ஏஜென்சி முன்மொழிந்துள்ளது.

வெள்ளி, 16 நவம்பர், 2012

நிலத்தடி நீர் மிகுதியும் சுரண்டப்படுவது சென்னையில்தான்

http://img.dinamalar.com/data/gallery/gallerye_015555586_586590.jpg








ஒட்டு மொத்த தமிழகத்திலும், சென்னையில் உள்ள நீர் நிலை படுகைகள் தான் அதிக சுரண்டலுக்கு ஆளாகியிருப்பதாக, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.


ஆறு மாநிலங்களில் ஆய்வு:மத்திய நீர்வள துறையின் ஒரு அங்கமான மத்திய நிலத்தடி நீர் வாரியம் கடந்த மாதம் தமிழகம் - புதுவை, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம், கேரளா, மேகாலயா ஆகிய ஆறு தென் மாநிலங்களின் நீர் நிலை படுகைகளை ஒட்டி, நிலத்தடி நீரின் தற்போதைய அளவு, நீரின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது.

அதில் சென்னை மாவட்டத்தின் நீர் நிலை படுகைகள் அதிகளவில் சுரண்டலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், வட சென்னையை தொடர்ந்து தென் சென்னையில் அடையாறு, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில், நிலத்தடி நீரில் கடல்நீரின் கலப்பு அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

"
நைட்ரேட்' அதிகரிப்பு: இந்த ஆய்வில் சென்னை நிலத்தடி நீரின் தரம் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: சென்னை நிலத்தடி நீர் அதிக சுரண்டலுக்கு உள்ளாகியுள்ளது. நிலத்தடி நீரில் "நைட்ரேட்' அளவு அதிகமாகியுள்ளது. ஒரு லிட்டர் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவான, 45 மி.கிராமை விட கூடுதலாக "நைட்ரேட்' உள்ளது.
நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பது அதிகரித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு, சென்னை மாவட்டம் குறித்து, மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வுகளிலும் இதே தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.எனினும், இந்த ஆய்வுகளுக்குப் பின் சென்னையில் உள்ள நீர் நிலை படுகைகளின் தரத்தை உயர்த்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.


சரி செய்ய முடியாது:கடந்த 2008 ம் ஆண்டு ஆய்வில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளான, திருவான்மியூர் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளின் நில அமைப்பு, ஒன்றுடன் ஒன்று இணைந்துவிட கூடியதாக மாறி வருகிறது என, சுட்டி காட்டப்பட்டிருந்தது. கடல் நீர் அதிக அளவு, நிலத்தடி நீரில் கலந்து, நீரின் தரம், மண்ணின்தன்மை ஆகியவை, நிரந்தரமாக மாறினால் மீண்டும் அவற்றை சரி செய்ய இயலாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவிலும், வட சென்னை பகுதிகளான மீஞ்சூர், எண்ணூர், தென்சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர்பகுதிகளில், நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பு அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்ன காரணம் :பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் முக்கிய நீர் படுகைகளான கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் நேரடியாக கழிவு நீர் கலப்பதால், இந்த நீர் நிலை படுகைகளை சுற்றி நிலத்தடி நீரில் "நைட்ரேட் ' அளவு அதிகரித்திருக்கலாம். மேலும், கடல் நீர் உட்புகுந்து நிலவியல் மாறுகிறது என்றால், தண்ணீரின் ஓட்டம் மாறியிருக்கும். ஒரு பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முழுமையாக உறிஞ்சப்பட்டால், அந்த இடத்திற்கு கடல் நீர் வந்து சேரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வு நடந்தது எப்படி?:சென்னையில், 174 ச.கி.மீ., பரப்பளவில் 149 ச.கி.மீ., பரப்பளவு வண்டல் மண், 4 ச.கி.மீ., செந்நிற களிமண், மற்றும் மீதம் 24 ச.கி.மீ., பரப்பளவு "சார்னோகைட்'என்ற கடின பாறை நிலப்பரப்புடன் உள்ளது.இவற்றில் வட சென்னை மத்திய சென்னை பகுதிகளான பெரம்பூர், வில்லிவாக்கம், ஜார்ஜ் டவுன், அடையாறு, திருவான்மியூர் ஆகியவை வண்டல் மண் பகுதிகள். தென் சென்னையில் தான் அதிக பாறை பகுதிகள் உள்ளன. அதில், சைதாப்பேட்டை, தரமணி, கிண்டி, தாம்பரம் மற்றும், பரங்கி மலை ஆகிய பகுதிகள் பாறை பகுதிகள். சென்னையில் நிலத்தடி நீரை கண்காணிப்பதற்கான, 11 ஆழ்துளை கிணறுகள் மற்றும் "பீசோ' மீட்டர் எனப்படும் நிலத்தடி நீரை ஆய்வு செய்யும் கருவி பொருத்தப்பட்ட மூன்று கிணறுகள் என, மொத்தம் 14 கிணறுகள் உள்ளன. குடிநீர் வாரியம் இந்த, 14 கிணறுகளின் மூலமாக சென்னையில் உள்ள நிலத்தடி நீரின் அளவையும், நீரின் தரத்தையும் ஆய்வு செய்து மதிப்பிடுகிறது.