பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஜூன், 2013

பூமிக்கு அப்பால் பறந்து சென்ற விண்பாறை ஆய்வு

பூமிக்கு அப்பால் பறந்து சென்ற  3  அ.க./கி.மீ. நீளமுடைய விண்பாறை ஆய்வு
பூமிக்கு அப்பால் பறந்து சென்ற சுமார் 3 கி.மீ. நீளமுடைய விண்பாறை ஆய்வு
வாசிங்டன், சூன் 2-

பூமியிலிருந்து 58 லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் 2.7 கிலோமீட்டர் நீளமுடைய விண்பாறை ஒன்று வெள்ளியன்று கடந்து சென்று இருக்கிறது. இந்த விண்பாறையானது '1998 க்யூ.இ-2' என அழைக்கப்படுகிறது.

ஒரு சிறிய துணைக்கோளும் இந்த விண்பாறையை சுற்றி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பூமிக்கு அருகே பறந்து சென்ற இந்த விண்பாறையை குறித்து விவரங்களை ரேடர் டெலெஸ்கோப் மூலம் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளனர்.

பூமிக்கு அப்பால் இதுபோன்று சுமார் 9000 விண்பாறை மற்றும் விண்கற்கள் பறந்துக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய ஒரு விண்பாறை பூமியில் மோதுமானால் இங்கு உயிர்கள் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

பூமிக்கு அடியில் ஆங்கிலேயர் காலப் பாலம்



பூமிக்கு அடியில் ஆங்கிலேயர் கால ப் பாலம்
சென்னையில், பூமிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆங்கிலேயர் கால கட்டுமானம் என, தொல்லியல் துறை ஆய்வில், தெரிய வந்துள்ளது. சென்னை கடற்கரை சாலையில், அகில இந்திய வானொலி நிலையம் எதி@ர, மின் வாரிய பணிகளுக்காக, பஸ் நிறுத்தத்திற்கு அருகே, பள்ளம் தோண்டிய போது, பழங்கால கட்டுமானம் இருந்தது, தெரிய வந்தது. சாலைக்கு கீழே, மூன்று கருங்கல் தூண்கள் உள்ளன.அதற்கு கீழே, சிறிய செங்கற்களால் அமைக்கப்பட்ட, 100 அடி நீள சுவர் உள்ளது.

பஸ் நிலையத்திலிருந்து, 10 அடி தூரத்தில், அரை வட்ட வடிவில், சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு கீழே, பாதாள சுவர் உள்ளது. இது குறித்து, தொல்லியல் வல்லுனர்கள், சமீபத்தில் ஆய்வு நடத்தினர். ஆய்வு குறித்து, தொல்லியல் துறை அதிகாரி, ஒருவர் கூறியதாவது: இது, ஆங்கிலேயர் காலத்து கட்டுமானமாக இருக்கலாம். நீர் வழித் தடம் இருந்ததற்கான தடயங்களும், கிடைத்துள்ளன. இக்கட்டுமானம், நீர் வழியைக் கடப்பதற்காக, அமைக்கப்பட்ட பாலமாகவும் இருக்கலாம். அப்பகுதியில் பாலம் அமைந்ததற்கான காரணம் குறித்து, அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரியவரும். இவ்வாறு, தொல்லியல் அதிகாரி தெரிவித்தார்.

- தினமலர் செய்தியாளர் -

புதன், 2 ஜனவரி, 2013

சூரியனுக்கு அருகில் செல்கிறது பூமி

 சூரியனுக்கு அருகில் செல்கிறது பூமி


சென்னை: சூரியனுக்கு அருகே பூமி செல்லும் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கோள்கள் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதன் காரணமாக, அவை சூரியனுக்கு மிக அருகிலும், மிக தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சுற்றி வரும். இதன்படி, சூரியனை, பூமி நெருங்கும் நிகழ்வு நாளை (ஜனவரி 2) நடக்கவுள்ளது. அப்போது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவு 14.7 கோடி கி.மீ., ஆக இருக்கும். எனினும் இதன் காரணமாக பூமியின் தட்பவெப்ப நிலையில், எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சனி, 10 நவம்பர், 2012

பூமியைப் போன்று புதிய கோள் கண்டுபிடிப்பு : new planet discovered

பூமியை ப் போன்று புதிய  கோள் கண்டுபிடிப்பு
பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு
இலண்டன், நவ. 9-
 
விண்வெளியில் எச்.டி. 40307 என்ற நட்சத்திரத்தை சுற்றி ஏற்கனவே 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அவை பூமியை போன்று மனிதர்கள் வாழ தகுதியுடையவை என அறிவித்தனர்.
 
இந்த நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை விட 7 மடங்கு பெரியது. சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவில்தான் இந்த புதிய கிரகமும் எச்.டி. 40307 நட்சத்திரத்தில் இருந்து உள்ளது.
 
பூமியில் உள்ளது போன்ற தட்பவெப்பநிலை இங்கு நிலவுகிறது. திரவ நிலையிலான தண்ணீரும், நிலையான சுற்றுச்சூழலும் உள்ளது. இதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியும் என ஹெட்பேர்க்குஷயர் பல்கலைக்கழக விஞ்ஞானி மிக்கோ துயோன தெரிவித்துள்ளார்.
 
மேலும், எச்.டி. 40307 நட்சத்திரத்தை சுற்றி மேலும் 2 புதிய கிரகங்கள் உள்ளன. அது குறித்த ஆய்வு நடந்து வருகிறது.

வியாழன், 18 அக்டோபர், 2012

பூமிக்கு மிக அருகில் புதிய கோள் கண்டுபிடிப்பு - discover of new planet near earth

பூமிக்கு மிக அருகில் புதிய கோள் கண்டுபிடிப்பு
மாலை மலர்  
பூமிக்கு மிக அருகில் புதிய கோள் கண்டுபிடிப்பு
ஜெனீவா, அக்.18-

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த கோள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமிக்கு பின்புறமாக அமைந்துள்ளது. பூமியைப் போன்ற அளவிலேயே இந்த புதிய கோளும் உள்ளது. புதிய கோள் அதன் சூரியனுக்கு வெகு அருகில் இருக்கிறது. இதன் சுற்றுப்புற வெப்ப நிலை 1,200 டிகிரி செல்சியஸ் (2 ஆயிரத்து 192 டிகிரி பாரன்ஹீட்) ஆகும்.

புதிய கோள் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை ஜெனீவாவில் ஸ்டீபன் உத்ரி, சேவியர் டமஸ்கியூ ஆகிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஸ்டீபன் உத்ரி கூறுகையில், பூமியின் பின்னால் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இது நமது பக்கத்து வீடு போன்று, வெகு அருகில் அமைந்திருப்பது சிறப்பானது என தெரிவித்தார். இதே போன்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாப்லினும் கருத்து தெரிவித்தார்.