மு.க. தாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மு.க. தாலின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மார்ச், 2013

மு.க. தாலின் வீட்டில் மை.பு.பி. /சிபிஐ ஆய்வு

மு.க. தாலின் வீட்டில்  மை.பு.பி. /சிபிஐ  ஆய்வு திமுகவுக்கு மத்திய அரசு தரும் நெருக்கடி?


மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக பொருளாளர்  ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகளின் சோதனைக்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை
மேலும் ஸ்டலினின் நண்பரான ராஜாசங்கர் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது
இன்று காலை 7.15 மணி முதல் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்டாலினின் வீட்டுக்கு இன்று காலை அதிகாரிகள் 7 பேர் குழு வந்ததாகத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக் கார்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் ஒன்று ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் பெயரில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வெளிநாட்டு கார் இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் திமுக விலகிய நிலையில், அடுத்த 2 நாட்களுக்குள் சிபிஐ சோதனை மூலம் அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவே இந்த சோதனை பார்க்கப்படுகிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


செவ்வாய், 13 நவம்பர், 2012

என்.வி.நடராசன் நூற்றாண்டு விழா : மு.க.தாலின்

என்.வி.நடராசன் நூற்றாண்டை ஒட்டி நவ.27. கட்சியின் சார்பில் விழா: மு.க.தாலின்

First Published : 12 November 2012 06:13 PM IST
திமுகவின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராஜனின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார் மு.க.ஸ்டாலின்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``திமுக அமைப்புச் செயலாளராக இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பணியாற்றியவர் என்.வி.என். அல்லும் பகலும் கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றிய பண்பாளர்’’ என்றார்.
மேலும், ``என்.வி.என்.னின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நூற்றாண்டு விழா வருகிற 27ஆம் தேதி கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்’’ என்றார்.
என்.வி.நடராசனின் 100வது பிறந்த நாளையொட்டி திங்கள் கிழமை காலை சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள என்.வி.நடராஜனின் பேத்தி என்.வி.என்.எஸ். டாக்டர் கனிமொழி இல்லத்திற்குச் சென்ற ஸ்டாலின், என்.வி.என். திருவுருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

வியாழன், 8 நவம்பர், 2012

ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு: மு.க. தாலின்

ஐ.நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு: இலண்டன் மாநாட்டில் மு.க. தாலின் வலியுறுத்தல்

First Published : 08 November 2012 02:39 AM IST
ஈழத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை மற்றும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
பிரித்தானியா தமிழர் பேரவை சார்பில் லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றக் கட்டடத்தில் உலகத் தமிழர் பன்னாட்டு தமிழ் மாநாட்டில் அவர் பேசியது:
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி எங்களை அனுப்பியிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக திமுக குரல் கொடுத்து வருகிறது.
ஈழத்தமிழர் பிரச்னையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனிதச்சங்கிலிகள், உண்ணாவிரதங்கள், வேலைநிறுத்தம் என பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். 1985-ம் ஆண்டு ஈழப்போர் நடைபெற்ற நேரத்தில் இந்தியாவின் கவனத்தை ஈர்ப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழர் ஆதரவாளர் அமைப்பை (டெசோ) உருவாக்கினார்.
போருக்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்காக டெசோ அமைப்பை கருணாநிதி மீண்டும் தொடங்கியுள்ளார்.
12-8-2012-ல் சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஈழத்தமிழர்களின் துயரங்கள், பிரச்னைகள் உள்ளடங்கிய 14 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. 
இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான மனுவை நவம்பர் 1-ம் தேதி ஐ.நா.விலும், நவம்பர் 6-ம் தேதி ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் வழங்கியுள்ளோம்.
இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தக்க தருணத்தில் நடைபெறும் இந்த மாநாடு ஈழத்தமிழர்களின் பிரச்னைகளின் மீது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க உதவியாக இருக்கும்.
இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழர்களுக்கு சமத்துவம், கண்ணியம், சுயமரியாதை கிடைக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என ஐ.நா.வும், பல உலக நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
ஈழத்தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் ஈழத்தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார் ஸ்டாலின்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.