விமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 4 செப்டம்பர், 2013

சீனா: 5 அகவையில் விமானம் ஓட்டிய சிறுவன்

சீனா: 5  அகவையில் தனியாக விமானம் ஓட்டிப் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்
சீனா: 5 வயதில் தனியாக விமானம் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்
பீஜிங், செப். 4-

சீன த் தலைநகர் பீகிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது தொடர்ந்து 35 நிமிடங்கள் தனியாக விமானம் ஓட்டிய சிறுவன், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினான்.

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஹி லிஷெங். தன்னுடைய 5 வயது மகனை எதற்கும் அஞ்சாத சாகசக்காரனாக உருவாக்க வேண்டும் என்பதில் இவருக்கு தனியாத ஆர்வம்.

இந்த ஆர்வம் அவருக்குள் வெறியாக உருவெடுக்க தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம், நியூயார்க் நகரின் மைனஸ் 13 செல்சியஸ் உறைபனியில் தனது 5 வயது மகன் டுவோடுவோ-வை வெறும் ஜட்டியுடன் அமர வைத்ததன் மூலம் இவரும் இவரது மகனும் பிரபலமடைந்தனர்.

இந்நிலையில், இவருக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் டுவோடுவோ-வை மட்டும் தனியாக அமர்த்தி பீஜிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது அவன் விமானத்தை செலுத்தி வட்டமிட்டு பறக்கும் சாகசத்தை கண்டு ஹி லிஷெங் பரவசமடைந்துள்ளார்.

அந்த விமானம் தரையிறங்கியதும், இவ்வளவு நேரம் தங்களின் தலைக்கு மேலே வட்டமிட்ட விமானத்தை ஓட்டியவன் 5 வயது சிறுவன் என்பதை அறிந்த பொதுமக்கள் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர்.

விமானம் ஓட்டுவதற்கு, போதுமான பயிற்சியும், லைசென்சும் தேவை என்ற விதிமுறைகளை மீறி 5 வயது சிறுவனை விமானம் ஓட்ட வைத்த ஹி லிஷெங் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

சனி, 25 மே, 2013

விமானம் வடிவமைக்கும் பெண்!

விமானம் வடிவமைக்கும் பெண்!

விமானங்களை வடிவமைக்கும், உலக அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற, மாணவி ஸ்வீட்டி பாடே: நான், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவள். சென்னையில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்'கில், நான்காம் ஆண்டு படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது, ஆகாய விமானத்தை, அண்ணார்ந்து பார்ப்பதில் ஏற்பட்ட சந்தோஷம் காரணமாக, "ரிமோட்டில்' பறக்கும் சிறிய ரக விமானங்களை, சிறு வயதிலேயே செய்ய ஆரம்பித்தேன். தற்போது, அதற்கான படிப்பையும் தொடர்கிறேன். அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்,"கிரீன் ஏவியேஷன் - பசுமை வான்வெளி போக்குவரத்து' என்ற தலைப்பில், போட்டி நடத்தியது. அதில், 200 பேர் வரை பயணம் செய்யும் வசதியுள்ள, "டால்பின்' வடிவில் அமைக்கப்பட்ட, எங்கள் விமானம், மற்ற விமானங்களை விட, குறைந்த எரிபொருள் மற்றும் அதிக செயல் திறன் மிக்கதாக இருந்ததால், 2011ம் ஆண்டு, மூன்றாம் பரிசு கிடைத்தது. இதற்கு, குறைந்தபட்ச விமான ஓடுதளமே போதும். கடந்த, 2012ம் ஆண்டு நடந்த போட்டியில், பல்வேறு சிறப்பு தன்மைகளோடு, விமானத்தை கையாளும் செலவையும் குறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட, "செரா கருடா - 2.0' விமானம், இரண்டாம் பரிசு பெற்றது. "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அஸ்ட்ரோனாடிக்ஸ் பவுண்டேஷன்' நடத்திய, வடிவமைப்பு போட்டி மற்றும் சாதாரண மக்களும், விண்வெளிக்கு சுற்றுலா சென்று வர, என் தலைமையில் தயாரிக்கப்பட்ட, "நவசிட்ஜிவாஹா' என்ற விண்வெளி விமான வடிவமைப்பு என, இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். பிரான்சில் நடந்த, ஏரோஸ்பேஸ் தொடர்பான கான்பரன்சில், என் ஆய்வு அறிக்கைகள், தேர்வு செய்யப்பட்டன. அதற்கான காப்புரிமையும், என்னிடம் உள்ளது. ஜெர்மன் ஏரோஸ்பேஸ் சென்டர், அவர்களின் புதிய ஏரோகிராப்ட் புராஜெக்ட்டுக்கு பணியாற்ற, அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், "இஸ்ரோவில்' பணியாற்றி, விண்வெளி துறையில், இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதே, என் எதிர்கால லட்சியம்.

சனி, 12 ஜனவரி, 2013

விமானத்தில் பயணம் செய்த 10அடி நீள மலைப் பாம்பு!

விமானத்தில் பயணம் செய்த 10அடி நீள மலை ப் பாம்பு! பயணிகள் பரபரப்பு!

சிட்னி: ஆசுதிரேலியாவின்விமானத்தில் மலை பாம்பு ஒன்று 1:45 மணி நேரம் பயணித்து விமான பயணிகளை பரபரப்புக்கு உள்ளாக்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குவாண்டாஸ் விமானம் ஒன்று கைரேன்ஸ் என்னும் இடத்தில் இருந்து போர்ட் மொரேஸ்பை க்கு காலை 6:15 க்கு புறப்பட்டது. விமானம் பரந்த சிறிது நேரத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் ரெக்கையில் எதோ அசைவதை கண்டார். உன்னிப்பாக கவனித்ததில் அது ஒரு 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு என தெரிய வந்தது. விமானத்தில் மலைப்பாம்பு பயணிக்கும் தகவல் விமான பணி பெண்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் விமானத்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் பரபரப்புக்கு உள்ளாகியது. விமானம் பல ஆயரம் அடி உயரம், அதுவும் 400கி.மீ வேகத்தில் பறக்கிறது. மேலும் வெளி வெப்பம் -12 டிகிரி செல்சியஸ் யாக உள்ளது, எனவே இந்த பாம்பு இனியும் உயுருடன் இருக்க வாய்ப்பு எல்லை என விமானி தெரிவித்தார். விமானத்தில் பாம்பு பயணிக்கும் தகவல் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும் பாம்பு உயுருடன் இருப்பதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். விமானத்தில் பாம்பு எவ்வாறு ஏறியது ? விமானம் கிளம்பும் முன்பு விமானத்தின் இறக்கைகள் சரிபர்க்கபடும். அப்பொழுதும் கூட பாம்பு இருப்பதை ஏன் கவனிக்க வில்லை போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த நிறுவனம், விமானம் அதிக வேகத்தில் பறக்கும் பொழுது பாம்பு தனது கட்டுப்பாட்டை இழந்து வெளியில் தெரிந்ததாக கூறினார். 

திங்கள், 19 நவம்பர், 2012

விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் ஓட்டுகின்றனர்:

விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் விமானம் ஓட்டுகின்றனர்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்
விமானிகளில் மூன்றில் ஒருவர் தூக்கத்தில் விமானம் ஓட்டுகின்றனர்: ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்
லண்டன், நவ. 19-

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர், விமானிகளின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கொஞ்சம் அசந்தாலோ அல்லது கவனம் சிதறினாலோ ஏற்படும் விளைவை எண்ணிப் பார்த்தாலே நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் விமானிகளில் பலர் அரைத் தூக்கத்தில் விமானம் ஓட்டுகிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆய்வு முடிவு அதைத்தான் சொல்கிறது.

ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒரு விமானிகள், நடுவானில் விமானம் கட்டுப்பாட்டுக்குள் வந்து சீராக சென்றுகொண்டிருக்கும்போது தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு விமானிகள் காக்பிட்டில் (விமானிகள் அறை) இருக்கும்போது சோர்வை சமாளித்துக்கொண்டு இருக்கின்றனர்.

விமானிகள் சங்கமான ஐரோப்பிய காக்பிட் அசோசியேசன் வெளியிட்ட இந்த ஆய்வு முடிவில், பெரும்பாலான விமானிகள் விமானம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அரைத் தூக்கத்திலோ அல்லது எழுப்பும் வரை முழு தூக்கத்திலோ இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவலை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் நடத்திய ஆய்வில், 43 முதல் 54 சதவீத விமானிகள் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது சோர்வு காரணமாக தானாகவே தூங்கியதாகவும், சக விமானி எழுப்பும் வரை தூங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

2010 முதல் 2012-ம் ஆண்டு வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய விமானிகளிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவு வெளியான சில வாரங்களில், விமானத்தில் விமானிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வேலை நேரம், ஓய்வு தேவை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு அதன் திட்டங்களை ஐரோப்பிய விமான பாதுகாப்பு ஏஜென்சி முன்மொழிந்துள்ளது.

புதன், 31 அக்டோபர், 2012

விமானத்தைப் பள்ளியாக மாற்றிய ஆசிரியர்

விமானத்தை ப் பள்ளியாக மாற்றிய ஆசிரியர்

திபிலிசி:ஜார்ஜியா நாட்டு ஆசிரியர் ஒருவர், பழைய விமானத்தை விலைக்கு வாங்கி, அதை, பள்ளிக் கூடமாக மாற்றி உள்ளார்.ஜார்ஜியாவின், ரஸ்தாவி நகரை சேர்ந்தவர் காரி சாப்பிட்சி. இவர், பாலர் பள்ளியை நடத்துவதற்காக, ஜார்ஜியா நாட்டு ஏர்லைன்சிடமிருந்து, பழைய விமானம் ஒன்றை, விலை கொடுத்து வாங்கினார். விமானி அறையை மட்டும் மாற்றாமல் அப்படியே விட்டு விட்டார். பயணிகள் அமரும் பகுதியை பள்ளியாக மாற்றினார். மழலையர்கள் பைலட்டாகும் கனவுடன், இந்தப் பள்ளிக் கூடத்துக்கு உற்சாகமாக வருகின்றனர். பைலட் அறையில் உள்ள கருவிகளை இயக்கி பார்த்து மகிழ்கின்றனர்.இந்த பள்ளியில் படிக்க, மாதக் கட்டணம், 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
- தினமலர்

செவ்வாய், 30 அக்டோபர், 2012

நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன் வலவர்கள்(பைலட்டுகள்)

நடுவானில் பறந்த விமானத்தில் தூங்கிய பிரிட்டன்  வலவர்கள்(பைலட்டுகள்)
தினமலர்
இலண்டன்,: "பிரிட்டன் ஏர்லைன்ஸ்' விமானத்தின் இரண்டு பைலட்டுகள், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே, தூங்கிக் கொண்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பைலட்டுகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில், விமானத்தின் முதன்மை பைலட், கழிப்பறைக்கு செல்வதற்காக, சக பைலட்டுகளிடம், விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து, முதன்மை பைலட், விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது, பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு, மற்றொரு பைலட்டிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும், பதில் வரவில்லை. மூன்றாவது பைலட்டை தொடர்பு கொண்ட போதும், பதில் கிடைக்கவில்லை.
நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன், விமானிகள் அறைக்கு சென்று பார்த்தபோது, விமானிகள், தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை, நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும், உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும், மூன்றாவது பைலட் தூங்கி கொண்டே தான் இருந்தார்.
இவர்களது பெயரை, பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது.இது குறித்து, பைலட்டுகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், "விமானம் பறக்கும் போது, அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான்' என்றனர்.விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து, விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது 

புதன், 8 ஜூலை, 2009

விமானத்தில் எலிகளுடன் பயணம் செய்த பயணிகள் !



இஸ்லாமாபாத், ஜூலை 7: பாகிஸ்தான் சர்வதேச விமானத்தில் (பி.ஐ.ஏ.) பயணம் செய்த பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு இயக்கப்படும் விமானத்தில், அழையா விருந்தாளிகளாகப் புகுந்த ஒரு டஜன் எலிகளுடன் பயணிகள் பயணம் செய்தனர். பி.கே.-792 என்ற அந்த விமானம் பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் நகரிலிருந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்துக்கு திங்கள்கிழமை இயக்கப்பட்டது. அந்த விமானத்தில் அங்குமிங்கும் வட்டமிட்ட பெருச்சாளி போன்ற பெரிய வகை எலிகளால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து, அந்த விமானம் திங்கள்கிழமை அதிகாலை ராவல்பிண்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதன்பிறகே, இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். எலிகளின் தொந்தரவால், அன்று முற்பகல் 11.30 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்ல வேண்டிய அந்த விமானம் ராவல்பிண்டியிலேயே நிறுத்திவைக்கப்பட்டது. இந்த விமானத்தில் இருந்த எலிகளைப் பிடிக்க லாகூரிலிருந்து 50 எலிப்பொறி சாதனங்கள் வரவழைக்கப்பட்டன. இருப்பினும், திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை எலிகள் அனைத்தையும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அந்த விமானத்தில் லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் வேறொரு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். லண்டன் விமான நிலையத்தின் சரக்குகள் ஏற்றி அனுப்பும் மையத்திலிருந்து இந்த எலிகள் தங்களது விமானத்துக்குள் நுழைந்திருக்கலாம் என பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன துணை இயக்குநர் முகம்மது லத்தீப் கூறினார். விமானத்தில் பயணிகளுடன் எலிகளும் பயணித்தது குறித்து பாகிஸ்தான் வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் அரங்கேறின.