என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது.
” முதல் எனப்படுவது நிலம் பொழுதும் இரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே ”
என்பர் ஆசிரியர். உலகத்திற்கு முதன்மையாக
இருப்பன இவையே யன்றோ ! இவை யாரால் எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டன என்று
வரையறுத்துக் கூற முடியாத இயல்பினவாக இருக்கின்றன. இடமும் காலமும் என்றும்
உள்ளனவாதல் வேண்டும். ஆகவே என்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன்
சிறப்பு நோக்கின் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தது ஆகின்றது.
பேரா.சி.இலக்குவனார்:
தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 133
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக