செம்மைவனப் பொங்கல்விழா :azhai_semmaivanapongal

செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்!

நண்பர்களே,
  ஊருக்குச் செல்ல வாய்ப்பற்றவர்கள், ஊருக்குச் சென்றாலும் செம்மைக் குடும்பங்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட விரும்புவோர் அனைவரும் செம்மை வனத்திற்கு வரலாம்.
  மரபுவழிப்பட்ட வகைகளில் பொங்கலைக் கொண்டாடுவோம். செம்மண் காட்டு ஓடையில் குளிக்கலாம், புதர்க் காடுகளில் திரியலாம், செம்மை வனத்தில் அமைதி நிலை உணரலாம், எந்த பேதமும் பாராமல் ஆடலாம் பாடலாம்.

  தை 1, 2 (சனவரி 15, 16) இரு நாட்களும் கொண்டாட்டம் நிகழும்.

  கட்டணம் ஏதுமில்லை. இணைப்பில் உள்ள தொடர்பாளர்களிடம் உங்கள் வருகையைப் பதிவு செய்தால், ஏற்பாடுகளுக்கு ஏதுவாக இருக்கும்.
  கொண்டாட வரும் குடும்பங்களைச் செம்மைக் குழுவினர் வரவேற்கிறோம்!
சில குறிப்புகள்:
1. செம்மை வனத்தின் அமைவிடம்: திருச்சி – தஞ்சை சாலையில் செங்கிப்பட்டி எனும் சிற்றூர் உள்ளது. அங்கிருந்து தச்சன் குறிச்சி செல்லும் வழியில் பாரத எரிவாயு நிறுவனம் (Bharath gas plant) செல்ல வேண்டும். பாரத எரிவாயு நிறுவனத்தைக் கடந்த பின்னர்க் கரிநெய்ச் சாலை(Tar Road) முடிந்துவிடும். அதில் சிறிது தொலைவு சென்றால், செம்மை வனம் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் வழிகாட்டிப் பலகை இருக்கும்.
  1. செம்மை வனம் ஆச்சாம்பட்டி எனும் ஊரில் உள்ளது. ஆனால், ஆச்சாம்பட்டி ஊர் இருக்கும் பகுதியும் செம்மைவனம் இருக்கும் பகுதியும் வேறு வேறு. பலர், ஆச்சாம்படிக்குச் செல்லும் வழியை விசாரித்து ஊருக்குள் சென்றுவிடுகிறார்கள். ஆகவே, செங்கிப்பட்டியில் இருந்து பாரத எரிவாயு செல்லும் வழி எது எனக் கேட்டு அதன்வழி வர வேண்டும். ஆச்சாம்பட்டி செல்லும் வழி எது எனக் கேட்க வேண்டா.
  2. செம்மை வனம் இருப்பது காட்டுப் பகுதி. வாகனப் போக்குவரத்து இல்லை. தனி வாகனம் இல்லாதோர், செங்கிப்பட்டியிலிருந்து மிதியூர்தியில்(auto) எடுத்து வரலாம். மிதியூர்தி ஓட்டுநர் திரு.தட்சிணா மூர்த்தியின் தொடர்பு எண்: 99432 26540. நான்கைந்து பேர்களாக இணைந்து மிதியூர்திக் கட்டணத்தைப் பகிர்ந்துகொள்ளலாம்.
செம்மைவனம் : azhai_semmaivanapongal02

-செந்தமிழன் மணியரசன்

அகரமுதல 112 மார்கழி 11, 2046 / திசம்பர் 27, 2015