பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது. நிலநூல்,
வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல்,
மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும்.
அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக்காலத்தும் நிலைத்து நிற்குமாறு
இலக்கியம் இயற்றுதல் இயலும். கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும்,
கண்ணாற் காணும் உலகியல் வழக்காயினும் முற்றும் கற்றுத் துறை போய புலவர்களே
செம்மையுற இயற்றுதல் இயலும். தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த
புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய் ஆய்தொறும் ஆய்தொறும் அளப்பில்
இன்பம் அளிக்கும் செந்தமிழ் இலக்கியங்களை இயற்றினர்.
பேராசிரியர் சி.இலக்குவனார் :
தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 142-143
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக