93tapewater

தேவதானப்பட்டியில்  ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி

தேவதானப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில்  ஆழ்துளைக் கிணறு மோசடி நடைபெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 தேவதானப்பட்டி அருகே உள்ள 17 ஊராட்சிகளுக்கும் வறட்சித் துடைப்புத்திட்டத்தின் கீழ்ச் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ்  உரூ1.50  இலட்சமும், ஆழ்துளைக்கிணறு,   தரைத்தொட்டி அமைப்பதற்கு  உரூ. 2.25  இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் அதற்கான பணி வழங்கப்பட்டது. இதில் சில ஊராட்சிகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்காமல் ஏற்கெனவே ஊராட்சிகளுக்கு வரும் குடிநீர்க் குழாய் இணைப்பைத் தோண்டி அதிலிருந்து இயந்திரம் மூலம் தண்ணீர் ஏற்றி வருகின்றனர்.
  இதே போல சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ஒதுக்கப்பட்ட  நிதியிலும் ஆழ்துளைக்கிணறு அமைக்காமல் வெறும்  தரைத் தொட்டிகளை மட்டும் அமைத்துப் பணம் கையாடல் செய்துள்ளனர்.
  இதனால் ஊராட்சிப் பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவி வருகிறது.
  எனவே மாவட்ட ஆட்சியர் ஒவ்வோர் ஊராட்சியிலும் ஆய்வு மேற்கொண்டு மோசடி நடைபெற்ற இடத்தைக் கண்காணித்து  ஆழ்துளைக்கிணறு அமைத்துப் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
93vaikaianeesu_name