ஆசியவியல் நிறுவனம், சென்னை
(Institute of Asian Studies, Chennai)
சீயோன் பயிற்றகம், தென் கொரியா
(Institute of Seon, South Korea)
சாஓலின் கோயில், சீனா
(Shaolin Temple, China)
உலகப் போதிதருமர் பேரவை, சப்பான்
(World Association of Bhodhidarma, Japan)
ஞாலப் போதிதருமர் ஒன்றியப் பேரவை, ஆங்காங்கு
(United Universe Bodhidharma Association, Hong Kong)
புலம் பெயர்ந்த தமிழர்க்கான பன்னாட்டுப் பேரவை, மொரிசீயசு
(International Association of Tamil Diaspora, Mauritius)
இந்தியக் கலை-பண்பாட்டு உறவு பேரவை, புதுதில்லி
(Indian Council for Cultural Relations, New Delhi)
ஆகியன இணைந்து
போதிதருமர் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தை
ஆடி 28 & 29, 2016 /ஆக. 13 &14, 2015 ஆகிய இரு நாள்களிலும்
சென்னை யிலுள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடத்தின.
முதல் நாள் முற்பகல் தொடக்க விழா நடைபெற்றது.
- சீன நாட்டு சவோலின் ஆலய இயக்குநர் குத்துவிளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கி வைக்கப்படுகின்றார்.
- மேடையில் மலேசிய நாட்டு தத்தோ. குமரன், நிறுவன இயக்குநர் சான் சாமுவேல், சீனநாட்டு சி யான் லின் , தென்கொரியப் பேராசிரியர் சின்வோல், மருத்துவர் மோகன், சப்பானியப் பேராசிரியர். கெம்பே.
- சவோலின் ஆலய இயக்குநர் சி யான்லின் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்கிறார் மருத்துவர் செயப்பிரகாசு நாராயணன்
- மலேசிய நாட்டு தத்தோ. குமரன் அவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்கும் ஆசியவியல் நிறுவன இயக்குநர் சான் சாமுவேல்.
தொடர்ந்து கல்விவள்ளல் செயராமன் அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது.
பின்னர் வெவ்வேறு அமர்வுக் கூடங்களில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
மாலையில் தற்காப்புக்கலைக் காட்சிகள் நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக
கலைமாமணி இரேவதி முத்துச்சாமிகுழுவினரின்
போதிதருமர் – நாட்டிய நாடகம்
நடைபெற்றது. கொரியா, சீனா, சப்பான் முதலான அயல்நாட்டவரும் கண்டு களிக்கும் வகையில் நாட்டிய நாடகம் சிறப்பாக நடைபெற்றது.
இரண்டாம் நாளும் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. மாலையில் நிறைவு விழா நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக