93kullaapuram_nerpayir

தேனி மாவட்டத்தில்   சூறாவளிக்காற்றால்

சேதமடைந்த நெற்பயிர்கள்

  தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற்குற்பட்ட குள்ளப்புரம் பகுதியில் சூறாவளிக்காற்றால் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் உழவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
  தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையும், பலத்த சூறாவளிக்காற்றும் வீசுவதால் அறுவடைக்கு   ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து பூமியில் விழுந்து உள்ளன. இதனால் பல நூறாயிரம் மதிப்புள்ள நெற்பயிர் வீணாயின. தேவதானப்பட்டிப் பகுதியில் இயற்கைச் சீற்றத்தால் வாழை, கரும்பு, நெல், தென்னை முதலானவை சேதமடைந்து வருகின்றன. இதனால் அவ்வப்பொழுது உழவர்கள் இழப்படைகின்றனர். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள் பார்வையிடுவதோடு சரி. அதன்பின்னர் எந்தத் துயரீட்டு நிதியும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதில்லை எனக் குற்றம் சுமத்துகின்றனர் உழவர்கள். எனவே தேவதானப்பட்டிப் பகுதியில் சூறாவளிக்காற்றால் பாதிப்படைந்த நெற்பயிர்களைப் பார்வையிட்டுத் துயரீட்டு நிதி வழங்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி உழவர்கள்.
93vaikaianeesu_name