eezham-with-prapakaran01TNPF-LOGO_tha.the.ma.mu.

தமிழ்த்

தேசிய மக்கள் முன்னணிக்குத்

தமிழ் இனத்தின் சார்பில்

திறந்த மடலாக

வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம்:

  தோல்வி என்பது வெற்றிக்கான முதற்படியே. அதுவே முடிவல்ல. தமிழீழ மக்கள் சந்திக்காதவையல்ல, நீங்கள் சந்தித்திருப்பது. ஆகவே தொடர்ந்தும் தமிழீழ மக்களுடன் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் உறுதியாக செயல்படுங்கள்.
  1. இவ்வளவுகாலமும் சம்பந்தனும், சுமத்திரனும் மாவை சேனாதிராசா உட்பட கூட்டமைப்பில் உள்ளவர்கள் செய்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இனி வரும்காலங்களிலும் தமிழ்த் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு கூட்டமைப்பு தமிழீழ மக்களிற்கு வஞ்சகங்கள் செய்யும்போது கூட்டமைப்பின் உண்மை முகத்தை உடனடியாக மக்கள் முன் தெரியப்படுத்திக் காண்பியுங்கள்.
  2. இன உணர்வாளர்கள் மாணவர்கள், பிற அனைவரையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்வாங்கிச் செயல்படவேண்டியது மிக முதன்மையானது. இனத்தின் தேவையும் கூட.
3. தமிழீழத்தின் எந்த மூலையில் யாரைக்கேட்டாலும் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் செயல்பாட்டை தெரியாத எவரும் இல்லை என்கின்ற உண்மை நிலையைச் செயல்வடிவில் இனத்துக்கான கடும் உழைப்புடன் ஏற்படுத்துங்கள்.
4. தமிழினத்தை இனப்படுகொலைகள் செய்தபின்பு எந்த முள்ளி வாய்க்கால் மண்ணில் இலங்கை முப்படைகள் மகிழ்ச்சியுடன் ஏற்றினரோ அதே சிங்கக்கொடியைச்சம்பந்தர், யாழில் வைத்து இரணிலுடன் சேர்ந்து ஏந்தி மகிழ்ந்தார். இலங்கைப் பாராளுமன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று பேசினார். தேர்தலின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மாவீரர்கள் பற்றியும் பிரபாகரன் பற்றியும் மக்கள் முன்னிலையில் பேசியுள்ளனர். அவர்களைபற்றி கதைக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என ஒரு தேர்தல் கூட்டத்தில் பொதுமகன் ஒருவன் கேள்வி கேட்டபோது அப்பொதுமகனை அடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இப்படியான நடவடிக்கைகளை மிக வன்மையாகக் கண்டிப்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் பின் நிற்ககூடாது .
5. சுமத்திரன் இராசபக்சவின் மகனுடனும் இலண்டனில் வசிக்கும் ஈழத்து முதன்மையான ஆள் ஒருவருடனும் அவுத்திரேலியா விளையாட்டரங்கில் ஒன்றாக இருந்து மட்டைப்பந்தாட்டம் பார்கின்றார் என்றால், அவ்வாறு தமிழ்த் தேசியம் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் உண்மையைத் தமிழீழ மக்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கு உள்ளது.
  இங்கு குறிப்பிடப்பட்டவர் தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழினத்தை இனப்படுகொலைகள் செய்த சோனியாவை இலண்டன் வந்தபோது சந்தித்தார் என்றால் தமிழீழ மக்களுக்கு எதிரான சதிவலைகள் எங்கெல்லாம் பின்னப்பட்டுள்ளன என்பதைத் தமிழீழ மக்களுக்குத் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
  மிக அண்மையில் சுமத்திரன் இலண்டன் சென்று குறிப்பிடப்பட்ட அந்த ஆளுருடன் நின்று வெளிநாட்டுச் சார்பாளர்களைச் சந்தித்து முதன்மையான கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டுள்ளது. என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
6. மூன்று தமிழ்க் கட்சிகள் இருந்து உண்மையாகவோ பொய்யாகவோ மூன்றும் தமிழ்த் தேசியத்தை பேசினால் எந்தக் கட்சி உண்மையென்று மக்களால் உடனடியாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது. இது ஒரு வகையில் மக்களைக் குழப்பும் வேலையாக அமைந்து விடும். ஆகவே, தமிழீழ மக்களின் ஒவ்வோர் இனம் சார்ந்த செய்திகளில் நேரடியாகச் செயல்வடிவில் எந்த இடமென்றாலும் எந்த நேரமென்றாலும் அங்கெ சென்று செயல்படுங்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயல்பாடே தமிழீழ மக்களை இனம் சார்ந்து உண்மையாக செயல்படுபவர்கள் இவர்கள்தான் என அடையாளப்படுத்தும்..
7. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் இனத்துக்கு எதிராக, எங்காவது   இரண்டகத்துடன் வஞ்சகமாகச் செயல்பட்டால் அது வெளிநாடுகள் என்றாலும் சரி தமிழீழத்தில் என்றாலும் சரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதுடன் உடனடியாக அது என்ன என்பதை  தமிழீழ மக்களுக்கு சென்றடையச் செய்யுங்கள். வெள்ளையர்கள் வெளியேறியதிலிருந்து இன்றுவரை மூன்றே முக்கால் இலட்சத்துக்கு மேற்பட்ட எங்கள் உறவுகளையும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களையும் தமிழினம் இழந்துள்ளது.
 இந்த ஈகங்களின் -தியாகங்களின்- மேல்நின்று யாரும் வஞ்சகம் செய்ய தமிழ் இனம் ஒருபோதும் இடமளிக்க இயலாது. காலம் நிச்சயம் வஞ்சகம் – துரோகம்- செய்பவர்களுக்கு விடை கூறும். வெல்க தமிழ்! தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்!

இரவி கார்த்தி, முகநூல்