புதன், 26 ஆகஸ்ட், 2015

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன்

rasapakshe-prison02
lee Rhiannon_01
மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன்
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சேவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்” என்று ஆத்திரேலிய பேரவை(செனட் சபை) உறுப்பினர் இலீ இரியன்னன் (Lee Rhiannon) தெரிவித்துள்ளார்.
 நடைபெற்றுமுடிந்த எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் அவர் தனது சுட்டுரையில்(டுவிட்டரில்) இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
தேர்தலில் அடைந்த தோல்வியானது, மகிந்த மற்றும் அவரது உடன்பிறப்புகளை     ஃகேக்கில் அமைந்துள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முற்படுத்தக்கூடிய வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக