கனடியத் தமிழ் இளையோர் நடத்தும்
கிளித்தட்டு 2015 நிகழ்வு
கனடியத் தமிழ் இளையோர் நடத்தும்
கிளித்தட்டு 2015 நிகழ்வு வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் ஆவணி 13 /
ஆகத்து மாதம் 30 ஆம் நாள் மாநாயகர்(மேசர்) அப்பாசு அலி பூங்காவில் காலை 9
மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.
அழிந்து போகும் தமிழர் தாயாக மண்ணின்
நினைவுகளை மீட்கும் தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு
கனடிய மண்ணில் இளையவர்களால் அணிகளாக அணி வகுத்து மாபெரும் விளையாட்டுப்
போட்டி நிகழ்வாக நடைபெறவுள்ளது.
தேசிய உணர்வோடு இந்த மண்ணில் எம்
இளையவர்கள் வாழவும் தடைகளை வென்று வெற்றிகளைப் படைக்கும் தீரத்தைக் கற்றுக்
கொள்ளவும் இந்தமத் தடகள விளையாட்டை எம் இளையவர்கள் வாழ்விலும் உளவியல்
வலிமைக்கான பயிற்சியாக கடைப்பிடிக்கும் முகமாக கனடா தமிழ் இளையோர்
அமைப்பினர் கனடிய இளையோருக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்திக் கோடை
விடுமுறைக் காலத்தில் கனடா வாழ் இளையோர் அனைவரையும் அணி திரட்டி நடத்தி
வருகின்றனர்.
கனடிய மண்ணில் பிறந்தாலும் தமிழர்
விளையாட்டுகளை தமிழர் கலை-பண்பாட்டு விழுமியங்களை தாங்கி நிற்கும்
தமிழர்கள் நாங்கள் என உற்சாகமாகக் கிளித்தட்டு விளையாட அணி திரண்டு
இருக்கும் அத்தனை இளையவர்களுக்கும் வாழ்த்துகள்.
எங்கள் இளையவர்களின் தாயக உணர்வு கூடிய
இந்த நிகழ்வைக் கனடா வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் அணி திரண்டு ஊக்கமும்
ஆக்கமும் அளிக்க முன் வாருங்கள் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தி இவர்கள்
முயற்சி வெற்றி பெற வாழ்த்துங்கள் என வேண்டுகின்றேன்.
– செந்தமிழினி பிரபாகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக