வியாழன், 4 ஏப்ரல், 2013

ஒரு புதுப்படி எரிபொருளில் 1000 கல் செல்லும் உந்து!

ஒரு புதுப்படி எரிபொருளில் 1000 கல் செல்லும் உந்து!

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களின் அண்மைக்கால உழைப்பின் மூலம், ஒரு லிட்டர் எர்பொருளில் 1000 கி.மீ. தொலைவு வரை செல்லும் கார் வடிவமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மிகவும் லேசான எடை கொண்ட இந்தக் காருக்கு ஈக்கோ-துபை1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறுதிக் கட்ட கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த இரு வாரங்களில் இதன் சோதனை ஓட்டம் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
துபை ஆடவர் கல்லூரியின் தொழில்நுட்ப உயர் கல்லூரிப் பிரிவு ஆராய்ச்சி மாணவர்களின் இரண்டு வருட முயற்சியில் இந்தக் கார் உருவாகியுள்ளதாம். இது அரை மீட்டர் அகலமும், இரண்டு மீட்டர் நீளமும், அரை மீட்டர் உயரமும், 25கிலோ எடையும் கொண்டதாக அமைந்துள்ளது. ஜூலை மாதத்தில் இது ஓட்டத்துக்குத் தயாராகும் என்றும், யு.ஏ.இ. நாட்டில் இதுபோல் 4 தயாரிப்புகள் சோதனை முயற்சியில் உள்ளன என்றும் கூறியுள்ளனர்.
இந்தக் கார் தயாரிப்பின் பின்னணியில் உள்ள ஒரு மாணவரான அஹ்மத் காமிஸ் அலி சுவைதி கூறுகையில், “பெட்ரோல் கடைசி வரை இருக்கப் போவதில்லை. ஒரு நாள், பெட்ரோல் தீர்ந்து போய் அதற்கு அல்லாடும் நிலையும் வரும். எனவே, உள்ளூர் அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு  ஈக்கோ-கார்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்போது நாங்கள் இதைத் தொடங்கியுள்ளோம். இதுவே யுஏஇ நாட்டின் எதிர்காலம்” என்றார்.
வரும் ஜூலை 4-7ம் தேதிகளில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் உலக ஈக்கோ-மாரத்தானில் இந்தக் கார் இடம்பெறும் என்று கூறியுள்ளனர். குறைந்த எரிபொருளில் எவ்வளவு உச்சபட்ச தொலைவு கார் செல்கிறது என்பது போட்டியாம். இந்த இலக்கை அடைவதற்காக, மாணவர்கள் மின்சாரம், சூரிய ஒளி, மரபு சாரா எந்த வழிகளையும் மேற்கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டதாம்.
முன்னர், பிரான்ஸ் நாட்டின் பாலிடெக் நாண்டெஸ் பல்கலை மாணவர்கள் 4,900 கி.மீ. தொலைவு பயணம் செய்யக்கூடிய ஒரு காரை வடிவமைத்திருந்தனராம். அதுவே சாதனையாக உள்ளது. 


ஒரு  கல்  கல்நெய்யில்  1000  கல்  ஓடும்உந்து: துபாய் மாணவர்கள் சாதனை
  
ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார்: துபாய் மாணவர்கள் சாதனை
அபுதாபி, ஏப். 4-

ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் துபாய் நகரத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து புதிய கார் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இரண்டு வருட முயற்சிக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிலோ மீட்டர் தூரம் செல்லக் கூடியது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறைவான எடை கொண்ட இந்தக் காருக்கு இகோ துபாய்-1 என்று பெயரிட்டுள்ளனர். கோலாலம்பூரில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7 தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய குறைந்த சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில், இகோ துபாய்-1 காரை மாணவர்கள் அறிமுகப்படுத்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக