புதன், 3 ஏப்ரல், 2013

உன்னதமான உயிருக்குத் தீயிடுவது தவறு!







உன்னதமான உயிருக்கு த் தீயிடுவது தவறு!

தீக்காயத்திற்கானஇந்தியாவின் முதல் சிறப்பு மருத்துவர் செயராமன்:
கடந்த 40 ஆண்டுகளாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீக்காய சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து, சமீபத்தில் ஓய்வு பெற்றேன். 1988ம் ஆண்டு,அமெரிக்கா சென்று, தீக்காயத்திற்காக பயிற்சி பெற்ற, முதல் இந்திய மருத்துவர் நான் தான்.நெருப்பால் உடலில் தீ பற்றிக் கொண்டால், முதலில் தண்ணீரை எடுத்து, உடல் முழுவதும் ஊற்ற வேண்டும். அப்போது தான், காயத்தின் ஆழம் குறையும்; தீ பரவுவதும் குறையும். அது போல், ஆசிட் பட்டால், காயம் பட்ட இடத்தில், பால் ஊற்றினால், காயத்தின் ஆழம் குறையும். மாறாக, தண்ணீரை ஊற்றினால், காயம் மேலும் அதிகரிக்கும். எனவே தீக்காயத்தின் தன்மை அறிந்து, முதலுதவி செய்வது அவசியம்.என் அனுபவத்தில், எந்த பணக்காரரும் தீக்குளித்து தற்கொலை செய்ததில்லை. பொதுவாக ஏழை மக்கள் தான், இதில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, குடும்ப பிரச்சனையில் கணவனையோ, மனைவியையோ மிரட்டுவதற்காக, சும்மாவேனும் உடலில் தீ வைத்து, கடைசியில் உயிரிழப்பில் முடிவடையும்.

உலக அளவில் தீ விபத்து நடைபெறுவதில், இந்தியா, எட்டாவது இடத்தில் உள்ளது. உன்னதமான உயிரைத் தாங்கிய உடலை, எந்த உபயோகமும் இன்றி, அற்ப காரணங்களுக்காக தீயிட்டு, தற்கொலை செய்வது குறைய வேண்டும். ஒருவர் மீது, திட்டமிட்டு ஆசிட் வீசுவது, சமீபத்தில் அதிகரித்துள்ளது.தீ ஏற்படுத்தும் காயம், மாத்திரை மருந்தால் சிறிதளவே ஆறும். ஆனால், முன்பு போல், வேகமாக செயல்பட முடியாமல், வீட்டிலேயே முடங்குவதால் உண்டாகும் பாதிப்பை, குறைப்பது கடினம். பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு, தன்னம்பிக்கை உண்டாக்க, அவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பை, நானே ஏற்படுத்தி
தருகிறேன்.ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட வினோதினிக்கும், வேலைவாய்ப்பை பற்றி சொன்னேன். "நான் நிச்சயம் வேலை செய்கிறேன் டாக்டர்' என, மகிழ்ச்சியாககூறினாள். ஆனால், புரோட்டின் பற்றாக்குறையால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையாமல் இருந்திருந்தால், ஓர் ஆண்டிற்குள் பாதிப்பிலிருந்துமீண்டிருப்பாள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக