வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தமிழ்நாட்டுத் தெருக்களுக்கும் இடங்களுக்கும் பிற மொழிப் பெயர்கள்!

நம் நாடு தமிழ்நாடு என எண்ணக்கூடாது என்பதற்கான சான்றுதான் இப்பெயர்ப்பட்டியல். பதிவிற்கு நன்றி. இந்நேரத்தில் நான் என் கட்டுரை ஒன்றின் பகுதியைப் பதிவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1996 நவம்பரில் நடத்திய ‘தமிழ் ஆட்சிமொழி : சிக்கல்களும் தீர்வுகளும்’ என்னும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கத்தில் ‘’தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் - ஓர் இனிய கனவு’’ என்னும் தலைப்பில் நான் அளித்த கட்டுரையின் ஒரு பகுதி. (இதன் முழுமையையும் முன்பே முனைவர் அருள் நடராசன் கேட்டிருந்தார்.)
பெயர் சூட்டல்
தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், நகர்கள் முதலியவற்றிற்குப் பெயர் சூட்டும் பொழுது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி அமைப்புகள் தமிழ் வளர்ச்சித் துறையினரின் ஒப்புதலைப் பெறுவதில்லை. அவற்றைத் தமிழ் வளர்ச்சி இயக்குநருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆணையை மாற்றித் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஒப்புதல் பெற வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டும் பின்பற்றுவதில்லை. எனவே, எலலாம் அயல்மொழியாய் மாறி வருகிறது. ஊர்தோறும் பதவிப் பெயர்களைக் கொண்டு நகர்களுக்குப் பெயர் சூட்டுகின்றனர். எனவே, என்.சீ.ஓ.காலனி, டி.ஆர்.ஓ.காலனி, தாசில்தார் காலனி, சர்வேயர் காலனி, எஞ்சினீயர் காலனி, போன்று அயல்மொழிப் பெயர்கள் இடம் பெற்று விடுகின்றன. இருக்கின்ற தமிழ்ப்பெயர்களையும் திருத்தமாக எழுதுவதில்லை. பிற மாநிலங்கள், நாடுகளில் பெயர்களை அவரவர் மொழிக்கேற்ப திருத்தமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அமைந்து தொடர்பான ஆணைகள் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன. தமிழ்நாட்டில்தான் ஆணைகள் பெயரளவு ஆணைகளாக இருக்கின்றன. எதிர்ப்புக் குரல்கள் பெரிதுபடுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் இவ்வாறு எதிராகக் கூறுவோர் விரட்டப்படுவார்கள் என்ற அச்சத்தாலும் மண்ணிற்கேற்ப ஒத்துப்போவோம் என்ற உணர்வினாலும் அமைதியாக இருக்கின்றனர். இங்கே பெயர் மாற்றத்தால் தமிழ் வளர்ந்துவிடுமா என்ற குரல்தான் ஒலிக்கிறதே தவிர, தமிழ் வளர்ச்சியில் பெயர்மாற்றமும் தமிழ்ப்பெயர் சூட்டலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன என்பது உணர்த்தப்படுவதில்லை. பெயர் மாற்றம் தொடர்பான முழு உரிமையும் நம் அரசிற்கு வேண்டும். தகவல் மட்டும் நடுவணரசிற்குத் தொடர் நடவடிக்கைக்காகத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்ப் பெயர் சூட்டப்படும் பொது நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் உள்ளவர்களே மிகுதியாக உள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்பது ‘பீடி யுனிவர்சிட்டி’ எனச் சுருக்கப்படுவதுபோல் சுருக்கப்படக்கூடாது என்னும் நிலை வர வேண்டும். பேரறிஞர் அண்ணா தலைமைச் செயலகம் எனக் குறிப்பிட்டது செகரட்டேரியட்டை மட்டும்தான் என்று கூறி இன்றுவரை செயிண்ட்சார்சு கோட்டை எனக் குறிப்பவர்களே மிகுதியாக உள்ளனர். செயலக முகவரிகள், அமைச்சர்களின் மடலேடுகள், விளம்பரங்கள் ஆகியவற்றிலும் இவ்வாறு குறிக்கப்படுவதை நாம் காணலாம். தலைமைச் செயலகம் தவிர, நடுவணரசின் அலுவலகங்கள், பல துறை அலுவலகங்கள் உள்ளன என்பது உண்மைதான். ஏன் அவர்கள் தலைமைச் செயலக வளாகம் எனக் குறித்திருக்கக்கூடாதா? இத்தகைய போக்குகளைப் போக்க, தமிழருக்கே உரிய ஐந்நிலப் பாகுபாட்டின் சிறப்பை உணர்த்த, ஐந்திணைக் கோட்டை என்று பெயர் சூட்டக்கூ்டாதா? அல்லது தமிழ்க்கோட்டை என்று அழைக்கக்கூடாதா?
பெரும்பாலான அமைச்சர்கள் குடியிருக்கும் தெருவின் பெயர் ‘கிரீன்வேய்சு சாலை’ என்றுதான் இருக்க வேண்டுமா? பைந்தமிழ்ச்சாலை என்று பெயர் மாற்றக்கூடாதா? வெள்ளையர் தெரு, கறுப்பர் தெரு என்ற இனப்பாகுபாடு தேவைதானா? வெள்ளிவீதியார் தெரு அல்லது வெள்ளை நாகனார் தெரு, கார் நாற்பது தெரு, எனப் புலவர்கள், நூல்கள் பெயர்களைச் சூட்டலாமே! இன்னும் பொருத்தம் இல்லாத பெயர்கள் பல உள்ளன. காவல் ஆணையர் அலுவலகத் தெருவில் அவ்வலுவலகமே இப்பொழுது இல்லை. சங்கப்புலவர் காவற்பெண்டு பெயரைச்சூட்டலாமே! மேலும் அவ்வாறான பெயர்கள் தமிழில் அமையாமையால் அவற்றின் அடிப்படையிலான பேருந்து நிறுத்தங்கள், கடைகள், அலுவலகங்கள் முதலியனவும் அயல்மொழிப் பெயரில் அமைந்து விடுகின்றன. எடுத்துக் காட்டாக முனிசிபல் காலனி மதுரையில் உள்ளது. அப்பெயரில் அஞ்சலகம் உள்ளது. (மதுரை, மாநாகராட்சி ஆன பின்பும் இப்பெயர் நீடிப்பதே தவறு.) திருச்சிராப்பள்ளியில் மெயின்கார்டுகேட் உள்ளது. (மேல வாயில், கீழ வாசல் போல) தலை வாயில் அல்லது தலைவாசல் எனலாமே! இருக்கின்ற பெயர்களை மொழி பெயர்த்துக் கொண்டிராமல் ஒத்து வரக்கூடிய அல்லது முற்றிலும் புதிய தமிழ்ப்பெயர்களை, ஆங்கிலப் பெயர் உள்ள இடஙகளுக்குச் சூட்ட வேண்டும். உணர்வே இல்லாத மக்கள் நிறைந்துள்ள தமிழ்நாட்டில் வெறும் அரசாணைகளால் என்ன பயன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

62 Englishman names in chennai-
-------------------------------------
Adams Street (Washermanpet)
Anderson Road (Ayanavaram)
Austin Nagar (Alwarpet)
Ballard Street (Perambur):
Bamford Road (Ayanavaram)
Binny Colony (Madhavaram)
Bishops Garden (RA Puram)
Branson Garden Street (Kilpauk):
Clemens Road (Vepery)
Cox Street (Park Town)
DeCaster Main Road (Ayanavaram):
Demellows Road (Ayanavaram):
Doomingkuppam (San Thome)
Dooming Street (San Thome):
Duncan Road (Ayanavaram)
Edward Park Road (Choolai)
Fisher Road (Perambur):
Flowells Street (Guindy)
Flower Street (Saidapet)
Foxen Street (Perambur)
Francis Joseph Street (George Town)
George Avenue (Poes Gardens)
Gills Lane (George Town)
Gills Street (George Town)
Goomes Street (George Town)
Grays Nagar (Choolai)
Gregory Street (George Town)
Heaton Road (Perambur):
Hopman Street (St Thomas Mount)
Isac Street (Park Town):
Jeremiah Road (Vepery)
Jesson Street (Park Town)
Jones Road (Saidapet)
Kellys Road (Kilpauk)
Kennett Lane (Egmore)
Lafford Street/Lane (Chindadripet)
Lambeth Avenue (RA Puram)
Lamech Avenue (Nungambakkam)
Lettangs Road (Vepery/Purasawalkam)
Lloyds Colony (Royapettah):
Lock Street (Ayanavaram)
Maddox Street (Park Town)
Menads Street (Puraswalkam):
Millers Road (Puraswalkam/Vepery):
Morse Road (Ayanavaram)
Nancy Street (Purasawalkam)
Noble Street (St Thomas Mount):
Philips Street (George Town):
Queen Victoria Road (Poonamallee):
Rex Street (Egmore)
Ritherdon Road (Vepery)
Robertson Road (Vepery):
Rutland Gate (Nungambakkam)
Samson Road (Ayanavaram)
Sargent Road (Ayanavaram)
Slaterpuram (Mylapore)
Solomon Street (St Thomas Mount):
Teeds Gardens (Perambur)
Thomas Street (Teynampet)
Wallace Garden (Nungambakkam):
Williams Street (Perambur)
Wheners Road (Egmore):
++++++++++++++++++++++++++++++++++++++
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக