http://www.yarl.com/forum3/
இந்திய ப் பாராளுமன்ற க் குழுவின் வருகை இலங்கை அரசுக்குச் சாதகமாக அமையும்- அமைச்சர் சமரசிங்க!
- Perampalam Kanapathippillaiஇந்திய சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் இலங்கை விஜயம் தற்போதைய காலகட்டத்தில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அந்நாட்டு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் மக்களின் ஒரு பிரிவினர் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகளில் பரப்பி வரும் பிரசாரத்தை இந்திய பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விஜயத்தின் மூலம் முறியடிக்க முடியும் என்றும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கமே இருப்பார்கள் என்றும் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா எதிராக வாக்களித்தமைக்காக அதனுடனான உறவு எந்தவகையிலும் பாதிக்காதெனவும், அதனை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் விஜயத்தின் பின் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக