திங்கள், 9 ஏப்ரல், 2012

இதைச் சொல்வதன்நோக்கம் விடுதலைப் புலிகளுடன்போர் என்ற பெயரில் எஞ்சியுள்ள தமிழர்களையும் அழிக்கத்தான். எனினும் அவர்கள் கனவு நனவாகாது. ஈழத்தமிழ் மக்கள் தங்கள் தாயக உரிமையை மீட்டெடுப்பர்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
 
 
விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்துவிடவில்லை: இலங்கை அமைச்சர் பதுயுதீன்

  தினமணி First Published : 09 Apr 2012 10:07:03 AM IST


கொழும்பு, ஏப்.9: புலிகளுடைய போராட்டம் முடிந்து, அந்த இயக்கம் அழிந்து விட்டது என நாம் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை ஜெனிவா சென்ற போது அறிய முடிந்தது என இலங்கையின் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர்  ரிச்சார்ட் பதுயுதீன் தெரிவித்தார்.கிண்ணியா பிரதேச முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்  கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இன்னும் உயிர் வாழ்கிறது விடுதலைப்புலிகள் இயக்கம்: 
 இலங்கை மந்திரி அலறல்
கொழும்பு, ஏப். 9-
 
இலங்கையில் கிண்ணியா என்ற இடத்தில் பொது நூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடந்தது. அதில் கைத்தொழில் வர்த்தக துறை மந்திரி ரிச்சார்ட் பது யுதீன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
 
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் வந்து அவர்களின் போராட்டங்களின் நியாயங்களையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன் வைத்தனர். அந்த மாநாட்டில் பல மொழிகளைப் பேசுகின்ற தமிழ் சகோதர்களைக் கண்டோம். 15 மொழிகள் பேசுபவர்கள் கூட அங்கு கலந்து கொண்டு தமிழ் இனத்திற்காக குரல் கொடுத்தார்கள். தமிழ் மக்களை அழைத்து பல்வேறு கூட்டங்களை அந்த பேரவையில் நடத்தினார்கள்.
 
தமிழ் ஈழத்துக்காக போராடியது விடுதலைப்புலிகள் இயக்கம். அதே வேளை இந்தியா மூலம் பெற்றுக் கொடுக்க வந்த அதிகூடுதலான அதிகாரங்களைக் கொண்ட வட கிழக்கு இணைந்த மாகாண சபை முறையை இந்த இரண்டு தீர்வுகளும் ஏதோ ஒருவகையில் பின்னடைந்திருப்பதை காண முடிந்தது. எனினும் அமெரிக்காவும் மேற்கத்தைய நாடுகளும் ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
இந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சினை பெரிதாகப் பேசப்படுகின்ற சர்வதேச பிரச்சினையாக இன்று மாறியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சர்வதேசம் பேசுகின்ற அளவுக்கு இலங்கை தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது எதைச் சொல்கிறது என்றால் ஒரு இனத்தின் உரிமை போராட்டம் அழிந்து சென்றாலும் அவர்களின் இழப்புக்களும் தியாகங்களும் அவர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற உண்மை புலப்படுத்துகின்றன.
 
இந்த வகையில் முஸ்லிம் சமூகம் ஆயுதம் ஏந்தி தங்களுக்கு ஒரு நாடு தேவை அல்லது ஒரு மாவட்டம் தேவை அல்லது ஒரு பிரதேசம் தேவை என்று போராடவில்லை. தவிர காணி அதிகாரமோ போலீஸ் அதிகாரமோ கேட்கவில்லை. இருந்தபோதும் முஸ்லிம் சமூகம் பல பாதிப்புகளையும் அநியாயங்களையும் எதிர் கொண்டு சொத்துக்களையும் இழந்தது. இன்று இந்த அரசாங்கத்தோடு எல்லா முஸ்லிம் கட்சிகளும் இணைந்திருக்கின்றன. இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.
 
இந்த நாட்டில் விசுவாசம் கொண்ட முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்குகின்ற பூர்வீகக் காணி தொடர்பான பிரச்சினைகள் எமக்கு கவலையளிகின்றன. விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிந்து அந்த இயக்கம் அழிந்து விட்டது என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த இயக்கம் அழியவில்லை. இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதை ஜெனீவா சென்றபோது அறிய முடிந்தது.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக