திங்கள், 25 ஜூலை, 2011

மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்: வி.எசு. விசய்

இந்த நிலைப்பாடு தொடரட்டும்! பிற மாநிலங்களுடன் பேசி இந்தியா முழுமையும் நுழைவுத் தேர்வு இல்லா நிலையை உண்டாக்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்: வி.எஸ். விஜய்

First Published : 25 Jul 2011 03:18:52 AM IST


வேலூர், ஜூலை 24:தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எந்த ரூபத்தில் வந்தாலும் அதை முழு வீச்சில் எதிர்ப்போம் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் கூறினார்.  மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருவதற்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  வேலூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: ஸ்டான்லி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் சீட் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. திமுக கொண்டு வந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் காட்டிலும் முதல்வர் கொண்டு வந்துள்ள மருத்துவக் காப்பீடு திட்டம் பல வகையிலும் சிறந்தது. இத்திட்டத்தை அமல்படுத்தக் காப்பீடு கழகத்தைத் தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.  மேட்டூரிலிருந்து, திருப்பத்தூர் முதல் அரக்கோணம் வரை வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். வேலூர் அரசினர் பெண்ட்லென்ட் மருத்துவமனை இன்னும் 2 ஆண்டுகளில் முழுமையான தாய்-சேய் நல மருத்துவமனையாக மாற்றப்படும். வேலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.  வேலூர் மக்கான் முதல் ஆர்க்காடு சாலை வரை மேம்பாலம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.  வேலூர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கச் சுற்று வட்டச் சாலை அமைக்கவும் முயற்சி எடுக்கப்படும் என்றார் டாக்டர் வி.எஸ்.விஜய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக