திங்கள், 25 ஜூலை, 2011

Azhagiri boycott? : புறக்கணித்தார் அழகிரி?

அழகிரி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான நேர்வுகளி்ல் அவர் பெற்ற செல்வமும் செல்வாக்கும் கட்சிக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, கட்சிகாக் உழைக்கும் தான் புறக்கணிக்கப்படுவதாக அவர் எண்ணுவதில் தவறில்லை. எனினும் நாணயமான அரசியலே நாட்டிற்குத்  தேவை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புறக்கணித்தார் அழகிரி?

First Published : 25 Jul 2011 01:07:34 AM IST


கோவை, ஜூலை 24: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற திமுக பொதுக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் தனது ஆதரவாளர்களுடன் மதுரை புறப்பட்டுச் சென்றுவிட்டார்.  கோவை சிங்காநல்லூரில் உள்ள அண்ணா வளாகத்தில் திமுகவின் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை தொடங்கியது.  சனிக்கிழமை காலை தொடங்கிய செயற்குழு கூட்டத்தின்போது, கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, செயல் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.  இதற்கு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் செயற்குழுவில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், இரு தரப்பினரையும் சமரசம் செய்து பேசினார்.  இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை பொதுக் குழு கூட்டத்தின் இடையே பேசிய கோவை முன்னாள் எம்.பி. மு.ராமநாதன், ""கட்சியை வழிநடத்தக் கூடிய அடுத்த தலைவர் யார் என்பதை இந்தக் கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது.  அப்போது சிலர் "தளபதி, தளபதி' என்று மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு, ஆரவாரம் செய்தனராம். இதனால் மு.க.அழகிரி உள்பட அவரது ஆதரவாளர்கள் பலரும் கோபம் அடைந்ததாகத் தெரிகிறது.  காலையில் தொடங்கிய பொதுக் குழு கூட்டம் முடிந்த பிறகு கட்சித் தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட அனைவரும் மதிய உணவுக்காக வெளியே சென்றனர்.  தான் தங்கியிருந்த கோவை ரெசிடென்சி ஹோட்டலுக்கு மு.க.அழகிரி புறப்பட்டுச் சென்றார். அச்சமயத்தில், கட்சித் தலைவர் மு.கருணாநிதியை சில நிமிட நேரம் தனியே சந்தித்துப் பேசியதாகத் தெரிகிறது. அப்போது மு.க.அழகிரியிடம் கருணாநிதி சமரசம் செய்து பேசினாராம்.  அதன் பின்னர் ஓய்வெடுக்கச் சென்ற அவர், பிற்பகல் மீண்டும் கூடிய பொதுக் குழு கூட்டத்துக்கு வரவில்லை.  இதனிடையே மாலை 5.30 மணி அளவில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் வெளியே வந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக