சனி, 30 ஜூலை, 2011

திருவாரூரில் தாலின்: தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்குத் திரு சங்கரலிங்கனார் உண்ணாதிருந்து உயிர் விட்டமை, தமிழ்த்திரு சின்னச்சாமி முதலான பலர் உயிர் விட்டமை, ஈழத்தில் ஈகி திலீபன் உணவுமறுத்து உயிர் விட்டமை,தமிழினப் படுகொலைகளைத் தடுப்பதற்காக ஈகி முத்துக்குமரன் முதலான பலர் உயிர்விட்டமை என அறவழியில்  நல்ல காரணங்களுக்காக உயிர் துறந்தவர்களின் நோக்கங்களைப் புறக்கணித்த அரசு,  நம்மைப்போல் கோடி மடங்கு சொத்து உள்ளவர்க்காக, தமிழ் என்று சொல்லிக் கொண்டு ஆங்கிலவழிப்பள்ளி நடத்துபவருக்காக, தமிழ் என்று சொல்லிக்கொண்டு நிறுவனஙகளின் பெயர்களை ஆங்கிலத்தில் சூட்டியுள்ளவர்க்காக, இன்னும் இவை போன்ற பல காரணங்களுக்காகத் தண்டிக்கப்படாதவருக்காகத் தீக்குளித்தால்  என்ன செய்யும் என்று எதிர்பார்க்கிறார் இந்தத் தொண்டர்? கட்சி சார்பிலான மொழி இனப் போராட்டங்களில் ஈடுபடுங்கள். ஆனால், தீக்குளிப்பு  கற்பனையிலும் வேண்டவே வேண்டா! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திருவாரூரில் ஸ்டாலின்: தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

First Published : 30 Jul 2011 01:30:29 PM IST


திருவாரூர், ஜூலை 30: திருத்துறைப்பூண்டி அருகே இன்று காலை கைது செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் திருவாரூருக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே வர்த்தகர் சங்க கட்டடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார். கட்டடத்துக்கு வெளியே திரண்டிருர்ந்த திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் விரைந்து வந்து, அந்தத் தொண்டரைத் தடுத்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து திமுக தொண்டர்கள் ரகளையில் இறங்கினர். இதைத் தடுக்க போலீஸார் உடனே லேசான தடியடி நடத்தி தொண்டர்கள் கூட்டத்தைக் கலைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக