common entrance exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
common entrance exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜூலை, 2011

மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்: வி.எசு. விசய்

இந்த நிலைப்பாடு தொடரட்டும்! பிற மாநிலங்களுடன் பேசி இந்தியா முழுமையும் நுழைவுத் தேர்வு இல்லா நிலையை உண்டாக்கட்டும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வை எதிர்ப்போம்: வி.எஸ். விஜய்

First Published : 25 Jul 2011 03:18:52 AM IST


வேலூர், ஜூலை 24:தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எந்த ரூபத்தில் வந்தாலும் அதை முழு வீச்சில் எதிர்ப்போம் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் கூறினார்.  மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருவதற்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறைச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  வேலூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியது: ஸ்டான்லி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் சீட் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. திமுக கொண்டு வந்த மருத்துவக் காப்பீடு திட்டத்தைக் காட்டிலும் முதல்வர் கொண்டு வந்துள்ள மருத்துவக் காப்பீடு திட்டம் பல வகையிலும் சிறந்தது. இத்திட்டத்தை அமல்படுத்தக் காப்பீடு கழகத்தைத் தேர்வு செய்ய ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.  மேட்டூரிலிருந்து, திருப்பத்தூர் முதல் அரக்கோணம் வரை வசிக்கும் மக்கள் பயனடையும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். வேலூர் அரசினர் பெண்ட்லென்ட் மருத்துவமனை இன்னும் 2 ஆண்டுகளில் முழுமையான தாய்-சேய் நல மருத்துவமனையாக மாற்றப்படும். வேலூரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.  வேலூர் மக்கான் முதல் ஆர்க்காடு சாலை வரை மேம்பாலம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.  வேலூர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கச் சுற்று வட்டச் சாலை அமைக்கவும் முயற்சி எடுக்கப்படும் என்றார் டாக்டர் வி.எஸ்.விஜய்.

புதன், 22 செப்டம்பர், 2010

தமிழக நலன்களை காக்க கருணாநிதிக்கு அக்கறை இல்லை: ஜெயலலிதா


சென்னை, செப்.22: மருத்துவப் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றியமைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி எடுக்காததில் இருந்து, அவருக்கு தமிழக நலன்களில் அக்கறை இல்லை என்பது தெரிகிறது என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:     17.9.2010 அன்று மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான (Post Graduate Medical Courses) சேர்க்கை பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அமைய வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் குழுவின் (Medical Council of India) கருத்துருவை தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு ஆதரிக்கிறது என்றும், இதற்கான அறிவிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.  மருத்துவச் சேவையின் தரத்தையும், மருத்துவக் கல்வியின் தரத்தையும் உயர்த்தும் நோக்கத்தில் பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.      இதோடு நின்றுவிடாமல், மருத்துவ படிப்பிற்கான (M.B.B.S.) சேர்க்கையும் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வரைவு சட்ட திட்டங்கள் நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல், இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலையும் அரசு தலைமை வழக்குரைஞர் கோரி இருக்கிறார். “அரசின் கொள்கை முடிவில் எங்களை இணைக்காதீர்கள்" என்றும், "கருத்துருவை சமர்ப்பிக்காமல் எப்படி அனுமதி அளிக்க முடியும்?” என்றும் உச்ச நீதிமன்றம் பதில் அளித்து இருக்கிறது. “மாணவர்கள் மாறுகின்ற தன்மை உடையவர்கள்; படிப்படியாக செல்லுங்கள்; முதலில் பட்டமேற்படிப்பில் இதை நடைமுறைப்படுத்துங்கள்” என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.    இது மட்டுமல்லாமல், இந்திய மருத்துவக் குழுவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பொது நுழைவுத் தேர்வுக்கான சட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு  ஒப்புதல் அளித்துவிட்டதாகவும்; பொது நுழைவுத் தேர்விற்கு பிறகு ஒருங்கிணைந்த ஆலோசனை வழங்கப்படும் என்றும்; மருத்துவப் படிப்பினை முடித்து வெளியேறும் போது அவர்களுக்கு ஒரு தேர்வு வைக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.  இந்த வழக்கை ஒரு வாரம் கழித்து பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.    உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வாதங்கள் எல்லாம் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு மவுனியாக இருக்கிறார் கருணாநிதி. பொது நுழைவுத் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. சமூக நீதிக்கு எதிரான இந்த கொள்கை முடிவை எடுத்த மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது.     சமூகநீதியை காப்பதற்கான அக்கறை கருணாநிதியிடம் இருப்பதாகத் தெரியவில்லை.  69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கருணாநிதிக்கு இருந்திருந்தால், பொது நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றியமைக்க முயற்சி எடுத்து இருக்க வேண்டும்.  இல்லையெனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.  இதைச் செய்யாததிலிருந்து தமிழ்நாட்டின் நலன்களை, தமிழர்களின் நலன்களை காப்பதற்கான அக்கறை  கருணாநிதிக்கு இல்லை என்பது தெரிகிறது.    மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் என்ற வகையில், கூட்டு அதிகாரப் பட்டியலில் (Concurrent List) உள்ள ‘கல்வி’ மாநிலப் பட்டியலில் (State List) சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வரும் சூழ்நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் பறிக்கின்ற வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல்.எனவே ஏழை, எளிய, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ - மாணவியர் நலன்களுக்கு எதிரான பொது நுழைவு தேர்வு முறையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எனவே, கூறுவது யார்? நோக்கம் என்ன? என்று ஆராயாமல் முதல்வர் உடனே தலையிட்டு நம் உரிமை காக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவி அறிக்கையுடன் நின்று விடாமல் வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாகச சேர்த்துக் கொள்ளச் செய்து வாதிட்டு வெற்றிக்கு வழி வகுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2010 12:36:00 PM
யம்மாடி தெரியுமடி உங்க நாடகம் அப்பன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் எனபது தானே உன் ஆசை.எதையாவது சொல்லி நாடகமாடி திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறாதா நாம் உள்ளே செல்ல பாதை போடலாமே என்று நப்பாசை தானே உனக்கு உன் ஆசை எல்லாருக்கும் புரியுமடி நாயே.உன் ஆசையில் மன்னுதண்டி பெரிய பொறுப்பு உனக்கு மட்டும் தான் இருக்கு எனபது போல அறிக்கை விடு அப்புறம் கொடநாடு போய் தோழியின் கத கதப்பிள் இரு நாடாளும் முக வுக்கு தெரியாதாக்கும் தமிழ் நாட்டு நலன் பறிபோகும் என்று இவ சொல்ல வந்துட்டா கம்னாட்டி.நீ என்ன நாடகம் போட்டாலும் நீ ஒரு ஆட்டக்காரி தான்.
By periya karuppan.kadalur
9/22/2010 12:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
சமூக நீதியைக் காப்பதில் கருணாநிதிக்கு அக்கறை இல்லை: ஜெயலலிதா


 

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

மருத்துவ நுழைவுத் தேர்வு: மத்திய அரசு கைவிடும்?


சென்னை, ஆக.19: மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.  இவ்வாறு முடிவை நிறுத்திவைப்பதற்கு முன்னோட்டமாக, மருத்துவ பொது நுழைவுத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிக்கை வெளியிடுவதை மத்திய அரசு வியாழக்கிழமை நிறுத்தி வைத்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு: மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அடுத்த கல்வி ஆண்டு (2011-12) முதல் மாணவர்கள் சேர, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எழுதும் நடைமுறையை இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.  மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு முடிவை எதிர்த்து மகாராஷ்டிர மாநில சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது நுழைவுத் தேர்வு முறை கூடாது என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினார்.  இதைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே உள்ள வழக்கில் தங்களையும் வாதியாக இணைத்துக் கொள்ளுமாறு, தமிழக அரசு புதன்கிழமை, மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வரும் செப்டம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.மாநிலங்களவையில்... மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும்  பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தக் கூடாது என்று தி.மு.க. உறுப்பினர் சிவா, அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தமிழகத்தில் பொறியியல்-மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். இவ்வாறு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்பது, மாநிலங்களின் உரிமையில் தலையிடும் செயலாகும் என்று அவர்கள் கூறினர்.மக்களவையில்...பொது நுழைவுத் தேர்வு பிரச்னையை மக்களவையில் அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் மு.தம்பிதுரை எழுப்பினார். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார் தம்பிதுரை.
கருத்துக்கள்

தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும் முதன்மை எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு எதிர்ப்பைக் காட்டியதன் விளைவு இந்திய நிலயிலான பொதுத் தேர்வு நீக்கப்படுகிறது. இதே ஒற்றுமையை அனைத்து நிலைகளிலும் காட்ட வேண்டும். ஆளும்கட்சிக்குப் பொதுத் தேர்வு வேண்டா என்னும எண்ணம் இருந்தாலும் எதிர்க்கட்சியும் இதனைப் போராட்ட ஆயுதமாக எடுத்ததால்தான் வெற்றி கிட்டுகிறது. எனவே, எதிர்க்கட்சி சிறப்பாகச் செயல்படும்பொழுதுதான் வெற்றி பெற இயலுகிறது. இல்லையேல் எத்தனையோ மடல்கள் அடைந்த குப்பைத்தொட்டி நிலைதான் இது தொடர்பான கடிதத்திற்கும் ஏற்பட்டிருக்கும். மாறாக நற்பெயர் வாங்குவதில் ஏற்பட்ட போட்டிப் பாராளுமன்றத்தில் ஒரே குரலாக எதிரொலித்து நன்மையில் முடிந்துள்ளது. இனிமேலாவது தமிழ் உரிமை, தமிழக உரிமை, தமிழர் தாயக உரிமை, உலகத் தமிழர் உரிிமை என எல்லாவற்றிலும் ஒத்த கருத்தில் இணைந்து குரல் கொடுக்கும் நிலை வரவேண்டும். 
வாழ்க தமிழினம்!வெல்க தமிழர் தாயகம்! உலகத் தமிழர் உரிமையுடன் உயர்க! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 4:21:00 AM
தெலுங்கராக வாழ்ந்துகொண்டு தமிழனாக நடிக்கும் கருணா(க) நிதி மத்தியில்.. .இராமசாமி இவனல்லவா மான‌ தமிழன் மலேசியாவின் ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் P.இராமசாமியும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.குலசேகரன் அவர்களும் உள்ளடங்கிய பிரத்தியேக குழு இலங்கைத் தீவில், இலங்கை இராணுவத்தினால், மே மாதம், 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என பேராசிரியர் ராமசாமி அவர்கள் இன்று கோலலம்பூரில் தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் தெரிவித்தார்.. தமிழர்களின்தாயக‌ பகுதிகளில், இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும் வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர்
By gopu
8/20/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 
பொது நுழைவுத் தேர்வை அறவே நீக்கியது திமுக: கருணாநிதி


மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை நிறுத்திவைத்தது மத்திய அரசு

First Published : 21 Aug 2010 12:00:00 AM IST



தமிழகம்
பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்: ஜெயலலிதா
First Published : 20 Aug 2010 12:42:32 AM IST

Last Updated : 20 Aug 2010 03:18:35 AM IST
 

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


சென்னை, ஆக.15: மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தினால், அது தமிழகத்தில்  பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையைப் பாதிக்கும் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:""2011-12-ம் கல்வி ஆண்டு முதல் அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்பில்  (எம்.பி.பி.எஸ்) மாணவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு வந்தபோது மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு இவ்வாறு கூறியுள்ளது.தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தொழில் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை 2007-08-ம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், சமூக-பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பலன் அடைந்து வருகின்றனர். அத்துடன் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் விரும்பி பணியாற்றும் நிலை விரைவில் ஏற்படும் வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.மாநில உரிமையில் குறுக்கீடு: மத்திய அரசு அறிவித்துள்ள அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த முறை காரணமாக மருத்துவம்-முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் ஒரு குழப்ப நிலை உருவாகும் என்றும் அஞ்சப்படுகிறது.உச்ச நீதிமன்ற வழக்கில்...: பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையை தமிழக அரசு பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இப்போது மத்திய அரசு தெரிவித்துள்ள புதிய முறையினால், இந்த இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.  சமூகநீதி கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் மாநிலம் தமிழகம் என்பதால், மேல் குறிப்பிட்ட வகுப்பினரை நுழைவுத் தேர்வு முறை பாதிக்கும். மேலும் உச்ச  நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.எனவே தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறு பரிசீலனை செய்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

பாராட்டுகள். இதே போல் எல்லா வகை அனைத்து இந்தியப் பொதுத் தேர்வுகளையும் ஒழிக்க வேண்டும். இந்த நேரத்தில் இந்தியனாகக் காட்டிக் கொள்வதாக எண்ணித் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்னும் அரசின் கோரிக்கையை உடனே கைவிட வேண்டும். துணை முதல்வர் தில்லியில் நடந்த மாநாட்டொன்றிப் பேசியதாக ஒரு நாளிதழில் படித்தேன். முழுப் பொறுப்பில்லாத பொழுதே மீனவர் படுகொலைகள் நின்ற பாடில்லை. மத்தியஅரசே முழுப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டால் அந்தோ பரிதாபம்! மத்திய அரசின் பொருளதவியை நாடலாம்; பயிற்சியையும் அதற்கான செலவையும் நாடலாம்; தமிழக அரசின் கட்டுப்பாட்டில் மத்தியப் படை இயங்கவும் வேண்டலாம். ஆனால், மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசிடம் ஒப்படைப்பதாக இருப்பின் எதற்கு இந்த அடிமை அரசு தேவை? மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே தமிழக அரசைக் கொண்டு வரலாமே! எனவே, இதில் மறு ஆய்வு செய்க! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
8/16/2010 7:41:00 AM
Ada looosupayale!
By Somasundaram
8/16/2010 6:35:00 AM

வியாழன், 18 பிப்ரவரி, 2010

நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு: ராமதாஸ் எதிர்ப்பு



சென்னை, பிப்.17- பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு திட்டம் என்பது ஏழை, எளிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரானது.

கல்வி என்பது மத்திய-மாநில அரசுகளின் கூட்டு அதிகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பொது நுழைவுத் தேர்வு என்னும் மத்திய அமைச்சர் கபில் சிபலின் திட்டம் கூட்டாட்சி முறையை மீறுவதாக உள்ளது.

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கொண்டு வரப்படும் இந்த சட்ட முன்வடிவை கடுமையாக எதிர்ப்போம் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், இத்தகைய முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கேரளம் போன்ற மாநிலங்களை ஒன்றிணைத்து போராட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கட்சி அரசியல் நோக்கத்தில் இல்லாமல் உள்ளபடியே தமிழ் மக்கள் நலன கருதி பிற தேசிய மக்களுடன் இணைந்து நாடு தழுவிய கல்வி முறையை எதிர்த்து மத்திய அரசு இதனைக் கைவிடச் செய்ய வேண்டும். இல்லையேல் அரசியல் அல்லது அரசு பேரத்திற்கான எதிர்ப்பு என எண்ணி பதவி எலும்புத் துண்டைப் போட்டு மத்திய அரசு வாயை அடைத்துவிடும். உண்மையான கூட்டாட்சி நம் நாட்டில் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/18/2010 3:49:00 AM

untill before british period muslim community was more than 80 percent educated. Once british gouvt introduced compulsory english teaching,after 50 yrs muslim community educated level decresed to 20 percent. Till now it is going on (except in tamilnadu and kerala). so we in tamailnadu poor people and village student can be affected in near future if we face any change before prepared to be ready. Education is the only tools to any society to develop or dying. nowadays north inda and upper caste is getting jeolosy of tamil nadu's development in education, industries, etc.So we (tamil nadu) should be very careful. TN Gouvt should not loose its control in education.

By Raja
2/18/2010 1:50:00 AM

தொப்புள் கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழன் அறியத் தருவது யாதெனில்,கல்வியில் கை வைத்து பின்னர் படிப்படியாக அடி மடியில் கை வைக்கும் நிலை வந்து விடாமல் முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சியில் பேதமின்றி எதிர்க் குரல் எழுப்புங்கள்! நாம் ஈழத் தமிழர்,இலங்கையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தோம்,இருக்கிறோம்!ஆனால் கல்வியில் நாம் தான் முன்னனியில் இருக்கிறோம்!இதன் காரணமாகவே எழுபதுகளில் கல்வியில் தரப்படுத்தல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டோம்!இதுவும் கூட ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு உந்து சக்தியானது!உங்களுக்குப் புரிய வேண்டும்,ஆரம்பத்திலேயே கல்வியில் கை வைத்தால் அது எதற்காக?தொடரும் பல்கலை அனுமதி,வேலை வாய்ப்பு என்று வாழ்க்கையே போராட்டமாகி விடும்!எமது ஆயுதம் தாங்கிய போராட்டம் வெறுமனே ஹீரோ ஆவதற்கல்ல!உரிமைக்கானது

By Yoga
2/18/2010 1:02:00 AM

ஐ.ஏ.எஸ், தேர்வுக்கு அடிப்படை கல்வி தகுதி பட்டபடிப்பு, பெரும்பாலும் பட்டபடிப்பை ஆங்கில வழியிலேயே கற்றதால் முன்பு அதிக அளவில் தேர்வுபெற்றனர். பள்ளி கல்வியில் பொதுவான பாடதிட்டம் பொதுவான ஒரே ஒரு மொழியில் இல்லாத நிலையில் தாய்மொழி வழியே கற்கும் மாணவர்கள் பாதிப்படையவே செய்யும். தவிர்க்க, இந்தி பேசும் மாணவர்களும் இந்தி அல்லாத பொதுமொழி ஆங்கிலத்திலேயே, எந்த ஒரு சூழலிலும், இருப்பது கட்டாயம். இந்தி அனுமதிக்க படுமானால,1 கட்டாயம், தாய்மொழியையும் அனுமதிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ். தேர்வில் குறைவானவர்கள் தேர்ச்சி பெறுவது தேர்வு தாள் திருத்துவோரே காரணம். ஆங்கிலத்தில் அதிக அலவு தேர்வு பொற்றவர்கள் திடீரென திறமை குறைந்தவர்களாகிவிட முடியாது. தமிழில் தேர்வெழுதினால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நிலை வரவேண்டும். இல்லாமல் போனதற்க்கு நமது புலமை மிக்க பேராசிரியர்களே காரணம்.

By Unmai
2/17/2010 11:54:00 PM

Tamilal என்ற பெயரில் ஏதோ பெரிய புடுங்கி போல எழுதியதாக நினைப்பா?

By Indian
2/17/2010 11:52:00 PM

ramadoss solvadu migaum sari.nallavttukku atharau enhirundu vanthalum erpom

By appu
2/17/2010 11:27:00 PM

Ramadas you are correct. Go head.

By jerome
2/17/2010 10:54:00 PM

I agree with Gopal's comment.

By Manidhan
2/17/2010 9:23:00 PM

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல எதிர்கட்சிகாரன பார்த்து கேட்கிரேன் ஆட்சி நடத்துறியா இல்ல அராஜகம் நடத்துரியா என்னய்யா தப்பு பன்னுனான் எங்க ராமதாஸு கோபாலபுரத்துல குனியவச்சு என்னா அடி போன மாசம் போயஸ்கார்டன்ல கூட ஒரு சம்பவம் நடந்துச்சு அவருக்கு வலி தெறியாம இருக்க பின்னால கிரீஸ் தடவி விட்டு அடுச்சாங்க அந்த நாகரீகம் கூட தெறியாது உனக்கு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்னா அடி....

By வண்டு முருகன் - ப.ம.க
2/17/2010 9:00:00 PM

பாகம் -1 தமிழ்மக்களுக்கு வனக்கம்! சமீபத்தில் ஒரு நாள் நான் டெல்லியில் இருந்து இரயிலில் சென்னைக்கு முதல் வகுப்பு பெட்டியில் பயனம் செய்தேன் நான் இருந்த கம்பார்ட்மெண்ட் நிரம்பியிருந்தது அப்போது எதிர் இருக்கையில் இரண்டு மனிதர்கள் வெள்ளை வேஷ்ட்டி சட்டை அனிந்த தமிழர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் நான் அவர்களை கவனித்தேன் அப்போது அதில் ஒருவர் மற்றொருவரிடம் நீங்கள் எங்கே போறீங்க...? மற்றொருவர் நான் சென்னைக்கு போகிறேன், ஓ அப்படியா நானும் சென்னைக்குத்தான் போறேன் ஆமாம் சென்னயில எங்க போறீங்க..? பக்கத்துலதான் விழுப்புரத்துக்கு போறேன், ஓ அப்படியா நானும் விழுப்புரம்தான் போறேன், விழுப்புரத்துல எங்க போறீங்க..?

By Tamilan
2/17/2010 8:59:00 PM

பாகம்-2 பக்கத்துலதான் தைலாபுரம் போறேன் அப்படியா நானும் தைலாபுரம்தான் போறேன், தைலபுரம் எதுக்கு போறீங்க..? ராமதாஸு வீட்டுக்கு போறேன், அட நானும் ராமதாஸு வீட்டுக்குத்தான் போறேன், ஆமா ராமதாஸ் வீட்டுக்கு ஏன் போறீங்க, அட அந்த ராமதாஸே நான் தாண்டா அது சரி என் வீட்டுக்கு நீ ஏன் வர்ற..? ஏன்னா நான் உங்க மகன் அன்புமனிப்பா இதை கேட்டுக்கொண்டிருந்த பயனிகள் (என்னை தவிர) அடப்பாவிங்களான்னு ஓடுற ரயில்ல இருந்து குதிச்சு தற்கொலை பன்னிகிட்டாங்க இவனுங்களுக்கு பொழுது போகலைன்னா இப்படித்தான் பேசி பேசி மக்களையெல்லாம் கொல்லுவானுங்க அதனால தமிழர்கள் கவனமாக இருக்கவும் இவனுங்க பேச்சுக்கு தமிழர்கள் யாரும் செவிசாய்க்கவேண்டாம்

By Tamilan
2/17/2010 8:58:00 PM

அய்யா ராமதாஸ் அவர்களே நான் உங்கள் கட்சியின் தீவிரமானதொண்டன் உங்களுக்கு ஒரு வின்னப்பமுங்க எங்க வீட்டு டாய்லட் பைப்புல தன்னி வர மாட்டேங்குது நீங்க தான் அதை எப்படியாவது ஒரு அரிக்கை விட்டு தன்னி வர வைக்கனும்ங்க ஒங்களுக்கு புன்னியமா போகும் செய்வீங்களா

By முனியாண்டி
2/17/2010 8:48:00 PM

Gopal's comment is very valid.

By Karthik
2/17/2010 8:34:00 PM

மருத்துவரின் எதிர்ப்பு நிலை அரசியல் உள்நொக்கமும் அடங்கியதாக இருக்கலாம். ஆனாலும் நாடு தழுவிய பொதுத்தேர்வு என்பது தென்னிந்தியர்களுக்கு அதுவும் குறிப்பாகத் தமிழர்களுக்கு, கிராமப்புறத் தமிழ் மக்களுக்கு நல்லதல்ல. இது இந்தி மொழி மக்களுக்குச் சாதகமாக அமையும் வாய்ப்பே மிக அதிகம். முன்பு ஆங்கிலத்தில்தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃஃப்.எஸ், எழுத முடியும் என்ற நிலை இருந்த காலத்தில் தென்னிந்திய மக்கள்தான் அதிகமான அளவிலும், டாப் ரேங்கிலும் தேர்வு பெற்றார்கள். பின்னர் பிராந்திய மொழிகளில் (இந்தியில்) எழுதலாம் என்ற நிலை வந்ததும் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை நிலை தலைகீழாக மாறியது. இந்தநிலை +2 கல்வியில் நாடு தழுவிய பொதுத்தேர்வு மூலம் நடக்க வாய்ப்புகள் அதிகம். நாடு தழுவிய பொதுத்தேர்வு முறை நல்ல நோக்கம். ஆனால், அதை நடைமுறைப்படுத்தி வருங்காலத்தில் ஆதாயம் பெற நினைக்கும் மக்களால் ஒருதலைப் பட்சமான குறைகளே அதிகமாக்கப்படும். ஆகவே, நாடு தழுவிய பொதுத்தேர்வு முறை இப்பொழுது நல்லதல்ல, வரவேற்கத்தக்கதல்ல‌.

By Gopal
2/17/2010 7:50:00 PM

Dr. Ramadoss statement is correct

By priya
2/17/2010 7:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்