வியாழன், 26 மே, 2011

Demanding Separate welfare board for Buddhist: பெளத்தர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

புத்தர் கருத்துகளை விரும்புபவர்கள் பின்பற்றலாம். ஆனால் தனி வாரியம் என்பதெல்லாம் தேவையற்ற ஒன்று. புத்த சமயம் என்ற பெயரில் திருமணச் சடங்குகளைப் பலர் பாலி மொழியில் அல்லது பாலிச் சொற்களைக் கலந்து நடத்துகின்றனர். அயல்  சமயங்கள் எதுவாயினும் பின்பற்றுவோர் பின்பற்றலாம். ஆனால், அரசு ஊக்கப்படுத்தக் கூடாது. புத்த நெறியைப் போற்ற விரும்புவர்கள் முதலில் சிங்களத்தையும் சீனத்தையும் சப்பானையும் புத்த நெறிப்படி வாழ்ந்து
தமிழர் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டு அவர்கள்  வாழ்வைப்பறித்தவர்களுக்குத்தண்டனை வழங்கி, எஞ்சியவர்களுக்கு விடுதலை வழங்கித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யட்டும்! பிறகு இங்கு உரிமை கேட்கட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போ
 


பெளத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கக் கோரிக்கை

First Published : 26 May 2011 12:12:04 AM IST


பண்ருட்டி, மே 25: பௌத்தர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு புத்திஸ்ட் சொசைட்டி-புத்தபூமி பாசறை கோரிக்கை விடுத்துள்ளது.இந்த அமைப்பின் சார்பில் புத்தரின் 2600-வது பிறந்த நாள் விழா கீழ்கவரப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை நடந்தது.புத்த பூமி பாசறை நிறுவனர் என்.வி.ஜெயசீலம் தலைமையில் விழா நடைபெற்றது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கும், அமைச்சர்களாக பதிவியேற்றுக்கொண்ட எம்.சி.சம்பத், செல்வி ராமஜெயம், பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.பெüத்தர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டுவது, மனித இனத்தை சீரழைக்கும் போதை பொருள்கள் மற்றும் மதுவை ஒழித்து தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழாவில் உலக பெüத்த சங்க செயலர் எச்.எல்.விருத்தி(லண்டன்), முன்னாள் சிறுபான்மை குழு உறுப்பினர் பிக்கு அசுவகோஷ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பி.மூர்த்தி, முன்னாள் பதிவுத் துறை அதிகாரி டி.கே.ராஜா, பிரசார செயலர் எம்.அரங்கநாதன், தலைவர் செüந்தரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலர் எஸ்.வி.புத்தப்பிரியன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக