concession to S.C.Christians லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
concession to S.C.Christians லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 டிசம்பர், 2010

reservation to s.c.christians : தலித் கிறித்தவர்களுக்கு இடஒதுக்கீடு; போராட்டம் நடத்தவும் தயார்: கருணாநிதி

நம் நாட்டில் தொண்டாற்றிய கிருத்தவர்கள் யாரும் இந்துவாக மாறவில்லை. திருவாசகத்தால் உருகி மொழிபெயர்த்த அறிஞர போப் அவர்களும் தன் சமயத்தில்  இருந்து மாறவில்லை. அதுபோல் இந்து சமயத்தினர் கிருத்துவ சமயக் கருத்துகளைப் படிப்பது தவறல்ல. ஆனால், சமய மாற்றம் என்பது ஆயிரத்தில் ஒன்றாக எப்போதாவது  நடைபெறுவதாகத்தான் இருக்க வேண்டும். சமய மாற்றம் பண்பாட்டு மாற்றமாக மாறுகிறது. தமிழர்களாகஇருப்பினும் பல கிருத்துவ அமைப்புகள் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. ஏறத்தாழ அனைத்துக் கிருததுவர்களுமே இந்துக்கள் அளிக்கும் பொங்கல் முதலான உணவினை இந்துக் கடவுளுக்கு வழிபாட்டில் அளித்திருப்பீரு்கள் என்று வாங்குவதில்லை. பள்ளிகளில் கிருத்துவர்கள் நடத்தும் கொடுமை தனி.  இத்தகைய சூழலில் சமயம் மாறியவர்களுக்குச் சலுகைகள் நீடிக்கக் கூடாது.  அதற்கு முதலவரும் போராடக் கூடாது. எல்லாச் சமயக் கருத்தையும் வரவேற்போம். ஆனால், சமய மாற்றத்தைக் கட்டுப்படுத்துவோம. அப்படியும் மாறினால் இப்பொழுது உள்ளதபோல் சலுகைகளை நிறுத்துவோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு; போராட்டம் நடத்தவும் தயார்: கருணாநிதி
First Published : 24 Dec 2010 12:21:43 AM IST

சென்னை, டிச.23: தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற போராடவும் தயார் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.  சென்னையில் வியாழக்கிழமை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் மற்றும் அனைத்து திருச்சபைகள் இணைந்து நடத்திய கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அவர் பேசியது: கிறிஸ்தவ சமுதாயத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல.  நான் சார்ந்துள்ள கட்சி மட்டுமல்ல, சமுதாய இயக்கமும் கூட. அந்த இயக்கத்தில் எங்களை வழிநடத்தியவர்களில் பலர் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அதில் முக்கியமானவர் நான் பிறந்த திருவாரூருக்கு அருகில் பிறந்த ஏ.டி. பன்னீர்செல்வம்.  ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துகொண்டு இருந்தது. சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ராஜாஜி, பெரியாரும், சோமசுந்தரபாரதியும் மட்டும்தான் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்றார்.  அப்போது எழுந்த பன்னீர்செல்வம், ஹிந்தியை அந்த இருவர் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், ஹிந்தியை ஆதரிப்பது நீங்கள் மட்டுமே என்று பதிலடி கொடுத்தவர். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தீவிரமாகப் போராடியவர்.  முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதைப்போல கிறிஸ்தவர்களுக்கும் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினோம். அதனால், அவர்களுக்குப் பாதிப்பு என்று தெரிந்ததும், அதனை நீக்கிவிட்டோம்.  இப்போது, என்னிடம் நீங்கள் 3 கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். தலித் கிறிஸ்தவர்களுக்கும் இந்து தலித்துகளுக்கு வழங்கப்படுவதைப்போல இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. யாராலும் மறுக்க முடியாதது.  இதுபோன்ற கோரிக்கைகளை நான் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையில் என்னிடம் வைத்துள்ளீர்கள். நீங்கள் என்ன கேட்டாலும் கொடுப்போம். நீங்கள் சொன்னதையெல்லாம் கேட்போம். இங்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் நிறைவேற்றும் பொறுப்பை தி.மு.க. ஏற்றுக்கொள்ளும் என்று உறுதியளிக்கிறேன்.  இங்கே பேசியவர்கள், நான் இந்தியாவையும், மத்திய அரசையும் ஆட்டுவிப்பதாகச் சொன்னார்கள். நான் யாரையும் ஆட்டி வைப்பவனும் அல்ல. ஆடுபவனும் அல்ல.  ஆனால், நீங்கள் என்னை ஆட்டிவைத்தால், நான் ஆடத் தயாராக இருக்கிறேன். உங்கள் கோரிக்கைகளுக்கு கலை உணர்வோடு நான் தரும் பதில் இதுதான்.  தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் கால்டுவெல் போன்ற கிறிஸ்துவ அறிஞர்கள் பெரும் தொண்டாற்றியுள்ளனர். கால்டுவெல்லின் நினைவைப் போற்றும் வகையில் அடுத்த வாரம் நெல்லையில் நடைபெறும் நினைவு விழாவில் நான் பங்கேற்க உள்ளேன்.  சிறுபான்மை மக்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். சிறுபான்மை மக்களுக்காக எந்தத் தியாகம் செய்யவும் நாங்கள் தயார். ஆட்சியில் இருந்தால் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றலாம். ஆட்சியில் இருந்தாலும் இன்னொரு அரசின் மூலம்தான் கோரிக்கை நிறைவேற்ற முடியும் என்றால் அறிவு, அணுகுமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறைவேற்றுவோம். அப்படியும் நிறைவேற்ற முடியாவிட்டால், அதற்காக கிறிஸ்தவ மக்களோடு இணைந்து நான் போராடவும் தயாராக இருக்கிறேன்.  நான் இப்படிச் சொல்வதால் கிறிஸ்தவர்களைப் போராட்டத்துக்கு அழைக்கிறார் என்று யாரும் தவறாக நினைக்கக் கூடாது. உங்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் துணையோடு நான் நிறைவேற்றுவேன் என்றார் முதல்வர் கருணாநிதி.  விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ்,பேராயர்கள் ஏ.எம்.சின்னப்பா, தேவசகாயம், எஸ்றா சற்குணம், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் வின்சென்ட் சின்னதுரை, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ், ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஜெசிந்தா குவாட்ரஸ், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை போதகர் பால் தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இலக்குவனார் திருவள்ளுவர் அவேர்களே நீங்கள் சொல்லியது சூப்பர்.
By ulakanathan
12/24/2010 10:16:00 AM


செவ்வாய், 30 நவம்பர், 2010

பணிக்குறைபாடு பற்றித் தெரிவிக்க ௧௫௦௦ அல்லது ௧௫௦௩ இற்குப்பேசும் பொழுது எப்பொழுதும் பதிவுக் குரல்தான் கேட்கின்றது. முதலில் அதனைச் சரி செய்து உடனுக்குடன் குறைகளைக் களைந்தாலே இதன் இணைப்பை யாரும் துறக்க மாட்டார்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பி.எஸ்.என்.எல். எஸ்.டி.டி.யில் புதிய சலுகை: நாளை முதல் அமல்

First Published : 30 Nov 2010 01:54:48 AM IST


சென்னை, நவ. 29: பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனம் சாதாரண தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு எஸ்.டி.டி. வசதியில் புதிய சலுகையை புதன்கிழமை (டிசம்பர் 1) முதல் அமல் செய்கிறது.  சாதாரணத் தொலைபேசி வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் நாட்டில் எந்த ஊரிலும் உள்ள வேறொரு சாதாரண தொலைபேசிக்கு எஸ்.டி.டி. மூலம் தொடர்பு கொண்டால் மூன்று நிமிடங்களுக்கு ஒரு யூனிட் என்ற அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும். எந்த நிறுவனத்தின் சாதாரண தொலைபேசியாக இருந்தாலும் இதே கட்டணம்தான் வசூலிக்கப்படும்.  வாடிக்கையாளர் பயன்படுத்தும் தொலைபேசி கட்டண திட்டத்துக்கு ஏற்ப இது ரூ.1 அல்லது ரூ.1.20 ஆக இருக்கும்.  இப்போது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு யூனிட் என்று அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படுகிறது. புதிய சலுகையால் பி.எஸ்.என்.எல். சாதாரண தொலைபேசி வாடிக்கையாளருக்கு எஸ்.டி.டி. வசதியில் 50 சதவீதம் கூடுதல் சலுகை கிடைக்கிறது.  தொலைபேசித் துறையில் போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். சாதாரணத் தொலைபேசியை திரும்ப ஒப்படைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக நிறைய திட்டங்களை அந் நிறுவனம் அளித்து வருகிறது.  சென்னையில் சாதாரணத் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர் விரும்பினால் அதே கடைசி 5 அல்லது 4 எண்களைக் கொண்ட பி.எஸ்.என்.எல். செல்போன் சிம் கார்டு வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.  கட்டணங்கள் பெருமளவு சரிந்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். கூடுதல் சலுகைத் திட்டத்தை இப்போது அறிவித்துள்ளது.  நாட்டில் 3.51 கோடி சாதாரண தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல். மூலம் இயங்குகின்றன. தொலைபேசி வாடிக்கையாளர்களில் 85 சதவீதம் பேர் பி.எஸ்.என்.எல். நிறுவன சேவையைப் பயன்படுத்துகின்றனர்.  இத் துறையின் வருவாயில் 92 சதவீதம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குதான் கிடைக்கிறது. 602 மாவட்டங்களில், 7330 நகரங்கள், 5.6 லட்சம் கிராமங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொலைபேசி மூலமாக இணைக்கிறது.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

Latest indian and world political news information

சென்னை:மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை, ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்குமாறு, பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம்:கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களை, எஸ்.சி.,க்கள் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு சலுகைகளை அவர்களும் அனுபவிக்க வகை செய்யும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னையை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு, ஏற்கனவே மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.


அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உத்தரவுப்படி, எந்த நபரும் இந்து, சீக்கிய, புத்த மதங்களைத் தவிர வேறு எந்த மதத்தை தழுவியிருந்தாலும், அவர்கள் ஆதிதிராவிடர்களாக கருதப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில், 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில், இந்து மதம் தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆதிதிராவிடர்களாக கருதப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து 1956ல் செய்த திருத்தத்தில் சீக்கிய மதமும், 1990ல் செய்த திருத்தத்தில் புத்த மதமும், ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.ஆதிதிராவிடர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவர்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகுபாடு காண்பிக்கப்படுகின்றனர் என தமிழக அரசு கருதுகிறது.


மேலும், மற்ற மதங்களை பின்பற்றும் ஆதிதிராவிடர்களுக்கும், அதற்கான சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென தமிழக அரசு உறுதியளித்து வந்துள்ளது.எனவே, ஆதிதிராவிடர்களை மத ரீதியாக வேறுபடுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பாராவை நீக்குவது தான் சரி என, தமிழக அரசு கருதுகிறது. இதனால், இவ்விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும், ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்க பார்லிமென்ட்டில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.


நகல் எடுக்க | எழுத்தின் அளவு: Decrease font Enlarge font |
மின்னஞ்சல் | RSS | Bookmark and Share


வாசகர் கருத்து
நமது முதல்வர் போன்றோர் இருக்கும்வரை தமிழனும் தமிழும் உருப்படாது !!! மத சண்டை முடியாது !!! இந்து மதம் வேண்டாமாம் ஆனால் இந்து மத சலுகை மட்டும் வேண்டுமாம் !! என்ன கொடும சார் இது வெரிகுட்
by KA SENGU,tRICHY,India 03-04-2010 12:55:36 IST
Why they should be considering as SC.There are no cast system in Islam and Christianity. The politicians are only creating this type of problems’ and MK always wanted Dalit people stays back and vote for his party. He will give 30 kg rice to dalit woman and Quarter to Dalit man. Please stop this. Let dalit should live their life with self respect even though they are poor. Please try for the equality
by T venkatesan,chennai,India 03-04-2010 12:11:45 IST
இதில் இருந்து என்ன தெரிகிறது அரசியலில் எந்த மதத்தை சேர்த்தவர்கள் அதிகாரத்தில் இருகிறார்களோ அவைர்கள் வெற்றி அடைகின்றார். வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக வழங்க படுகின்ற சலுகை அவர்கள் மதம் மாறியதினால் பறிக்கபடுகிறது என்றால் நாட்டின் மதசார்பின்மை என்பது போலி என்று நிருபனம் ஆகின்றது.
by AA ஹாஜா மைதீன் ,BruneiDarussalam,Brunei 03-04-2010 06:13:58 IST
if the so called forward community is once and for all destroyed, then no question reservation for this and that religion\caste arises. may be then India may flourish or our politician may have good sleep
by mohan kumar,chennai,India 03-04-2010 06:06:54 IST
இவர்கள் தான் அம்பேத்கரின் கொள்கைகளை காப்பாற்றுபவர்கள் மதம் மாற ஜாதி ஒரு காரணம் என்று கண்டுபிடித்தவர்கள் ஏன் இந்த சலுகைகளை எதிற்பார்க்க வேண்டும். அவர்களுக்கு தான் ஏகப்பட்ட கல்வி நிறுவனகள் மிஸ்ஸினரீஸ் முலம் நடத்த படுகிறதே
by s ராம்,chennai,India 03-04-2010 05:33:13 IST
நமது முதல்வர் போன்றோர் இருக்கும்வரை தமிழனும் தமிழும் உருப்படாது !!! மத சண்டை முடியாது !!! இந்து மதம் வேண்டாமாம் ஆனால் இந்து மத சலுகை மட்டும் வேண்டுமாம் !! என்ன கொடும சார் இது !!!
by கிருஷ்ணன் ,coimbatore,India 03-04-2010 04:26:05 IST
இவ்வாறான கோரிக்கையும் செயல்பாடும் தாய்மண் பண்பாட்டிற்கான சாவுமணி என்பதை யாரும் உணருவதில்லை. நேற்று வரை தமிழராக இருந்தவர் கிறித்துவராக மாறியதும், தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் கடவுளுக்குப்படைக்கவில்லை எனக் கூறிப் பொங்கல அளித்தாலும் ஏற்பதில்லை. கிருத்துவ ஆண்டைத்தான் பின்பற்றுவோம் எனத் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. ஐரோப்பிய கிருத்துவ அறிஞர்கள் தமிழ் இலக்கியச் சிறப்பால் கவரப்பட்டு சமய இலக்கியங்களைப்படித்தாலும் மொழி பெயர்த்தாலும் சமயம் மாறவில்லை. அதுபோல் ஒருவர் எச்சமயக் கருத்தையும் போற்றத் தடையில்லை. ஆனால், சமய மாற்றம் என்பது பத்தாயிரத்துக்கு ஒன்று என்ற அளவில் மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். வேறு சமயத்திற்குச் சென்றால் உயர்ந்த நிலை அடைவோம் எனக் கருதி அல்லது கற்பிக்கப்பட்டு அச் சமயத்தைப் பின்பற்றி மாறுபவர்கள் தாம் சார்ந்திருந்த சமயச் சலுகைகளை இழக்க வேண்டியதே முறையாகும். பிற சமயம் மாறுபவர்கள் அந்தப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதால் காலம் காலமாகப்பின்பற்றி வந்த மண்ணின் பண்பாட்டை உதறுகிறார்கள். (ஈழத்தில் இசுலாமியச் சமயத்தைப்பின்பற்றியதாலேயே தமிழர்களும் இசுலாமியர்களும் என வேறுபடுத்திக் காட்டி நடந்து கொள்வதை மறக்க வேண்டா.) சமய, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும்.
by I. Thiruvalluvan,chennai,India 03-04-2010 03:26:16 IST