புதன், 22 டிசம்பர், 2010

Priority for tamil G.O.in English: தமிழுக்கு முன்னுரிமை: ஆங்கிலத்தில் உத்தரவு

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவு, ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க, அரசு சமீபத்தில் உத்தர விட்டுள்ளது. இதன்படி 20 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, செப்., 30 ல் அரசாணை வெளியிடப் பட்டது.ஆனால், இந்த உத்தரவு ஆங்கிலத்தில் உள்ளது. பல நூறு கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு, ஐகோர்ட்டில் தமிழ், தமிழ் வழி பொறியியல் படிப்பு... என, அரசு "எதிலும் தமிழ்' என்ற கொள்கையை புகுத்தி வருகிறது. ஆனால், அரசின் உத்தரவுகளில் இன்னும் ஆங்கில ஆதிக்கமே உள்ளது.

தமிழ் வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும்; இதை பலர் பின்பற்றுவதில்லை; இவர்கள் மீது என்ன நடவடிக்கை? என்பது குறித்து, அரசு குறிப்பிடவில்லை. தமிழில் கையெழுத்திட நாங்கள் கூறும் அறிவுரைகளை, மற்ற துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவதில்லை,'' என்றார்.

-நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக