கொழும்பு, ஏப்.25: இலங்கையின் நெருங்கிய கூட்டாளி நாடு இந்தியா என்றார் இலங்கை புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ்.
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் கொழும்பில் முதல்தடவையாக செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த போது பெரிஸ் இதைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: பூடான் தலைநகர் திம்புவில் தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் 16-வது உச்சி மாநாடு வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் இறுதியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற இந்திய தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணி, ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணி ஆகியவை குறித்து இந்திய தலைவர்களிடம் விளக்கப்படும்.
இலங்கையின் நலன் கருதி இந்திய தலைவர்கள் கூறும் கருத்துக்கு மதிப்பளித்து கேட்கப்படும். இலங்கை எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கை குறித்தும் இந்திய தலைவர்களிடம் கூறப்படும்.
நான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்திய தலைவர்களை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் நான் கடந்த சில ஆண்டுகளாகவே நெருங்கிய தொடர்பு வைத்துள்ளேன் என்றார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ்.
தமிழினப் பகையிலும் கொலைவெறிச் செயல்களிலும் கை கோத்துக் கொண்டு பணியாற்றுபவர்கள் நெருங்கிய கூட்டாளிகளாகத்தானே இருக்க இயலும். இதனை உலகம் சொன்னாலும் இந்தியா மறுக்கிறது. பழி தன் மீது மட்டும் வரக்கூடாது என்பதற்காகச் சிங்களம் அடிக்கடி உண்மையை வெளிப்படுத்துகிறது. உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டிய இனமோ பிளவுபட்டுக் கொ்த்தடிமையாக உள்ளது.
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/29/2010 3:44:00 AM
இந்தியாவில் சோனியா, கொலைஞர்,ஜெயா,இலங்கயில் கருணா, பிள்ளையான்,டக்ளஸ் போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை ஈழத்தமிழர்களின் இன்னல்கள் தொடரும். நாம் எவ்வளவுதான் அழுது புரண்டாலும் அது செவுடன் காதில் ஊதிய சங்குக்குதான் சமம். வெறும் 100 ரூபாய்க்கு வாக்கு அளிப்பவர்களிடம் நாம் என்ன எதிபார்க்கமுடியும்?
4/26/2010 11:26:00 AM
பரவசி மாநாடு அல்ல பரதேசி மாநாடு அல்லது பறவேசி மாநாடு என படிக்கவும்.
4/26/2010 11:22:00 AM
இந்தியாவின் பரவசி மாநாடு....hi guys what is this? what is it for?
4/26/2010 10:42:00 AM
Prof. RAMASAMY GAVE TIGHT SLAP IN THE FACE OF INDIAN RULING "DOGS"...SUPER POWER WITHOUT VISION AND SELF RESPECT!
4/26/2010 10:36:00 AM
ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான். “தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது....Well said Prof. Ramasamy.
4/26/2010 10:31:00 AM
Indiavoda friend illaya? Ellangaiyeda friend than indiava?
4/26/2010 9:51:00 AM
Penang Ramasamy Thamizharkalin vidivelli; Bunkar Paramasivan Prabhakaranin Adipodi Penang Ramasamy vaazhka!!! Vanni kattu vairavar killed so many children. At that time Penang Ramasamy was making garlands out of flowers in Penang. Well Penang Ramasamy!!
4/26/2010 9:26:00 AM