வெள்ளி, 30 ஏப்ரல், 2010

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்



காஞ்சிபுரம், ஏப். 29: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் ஜூலை 28-ம் தேதி போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.÷சித்திரை முழுநிலவு நாளையொட்டி வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் கடற்கரையில் புதன்கிழமை இளைஞர் பெருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்று ராமதாஸ் பேசியது:இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் என அறிவித்த அரசு வன்னியர்களுக்கு 8 சதவீதம் மட்டும் வழங்குகிறது.தமிழ்நாட்டில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களின் ஜனத்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜூலை 18-ம் தேதி பூம்புகாரில் வன்னிய மகளிர் பெருவிழா நடத்தப்படும்.கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு ஜூலை 28-ந் தேதி ஒன்றிய, நகர, வட்டார, மாவட்ட அலுவலகங்கள் முன் தமிழகம் முழுவதிலும் அறவழியில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தப்படும்.போராட்டத்துக்கு முன்னர் வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து என்னுடைய தலைமையிலான குழு முதல்வரை சந்திக்க உள்ளது என்றார்.
கருத்துக்கள்

அரசியல் கட்சித் தலைவர்கள் சாதிஅடிப்படையில் பரப்புரை மேற்கொண்டால் கடூஞ்சிறைத்தண்டனை வழங்க வேண்டும். அரசியல் கட்சியே சாதி வெறியில் ஈடுபட்டால் அக்கட்சியைத் தடை செய்ய வேண்டும். சாதிச் சங்கங்கள்அரசியலில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டும். நம்நாடு உருப்பட இதுவே வழி. பல நல்ல கொள்கைகளை உடைய இராமதாசு தான் சாதிச் சங்கம் நடத்துவதா அல்லது அரசியல் கட்சி நடத்துவதா என முடிவெடுத்து இரண்டில் ஒன்றில் மட்டும் கருத்து செலுத்த வேண்டும். சாதி இருக்கின்றது என்பானு்ம் இருக்கின்றானே என்னும் நிலை வர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/30/2010 2:45:00 AM

எதிர் காலத்துல யாராவது ஒரு வன்னியர் முதலமைச்சரா வந்துரப் புடாதுன்னு நல்லா திட்டம் போட்டு ஜாதிய கெடுக்குராருய்யா !

By Thiri*
4/30/2010 2:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக