வியாழன், 29 ஏப்ரல், 2010

மருத்துவத் திட்டத்தின் கீழ் ஏழைகளும் பயன்பெற வேண்டும்: மத்திய அமைச்சர் மு.க. அழகிரி



சென்னை தரமணியில் உள்ள மருத்துவப் பூங்கா மையத்தின் சார்பில் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும் மருத்துவ சிகிச்சை திட்ட தொடக்க விழாவில் வெளியிடப்பட்ட தி
சென்னை, ஏப்.28: ஏழை முதியவர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவப் பூங்காவின் மருத்துவத் திட்டம் செயல்பட வேண்டும் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.சென்னை தரமணி டைசல் பயோபார்க்கில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவப் பூங்காவின் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும் திட்டத் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பேசியது:முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த எத்தனையோ திட்டங்களில் மருத்துவக் காப்பீடு திட்டம் மிகவும் பிரகாசித்து வருகிறது. வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் எல்லாம் பாராட்டு தெரிவிக்கின்றனர்.மருத்துவப் பூங்காவின் சிகிச்சைத் திட்டத்தின் கீழ் முதியவர்களும் இளைஞராக முடியும் என்று கூறினார்கள். ஆனால், இந்த சிகிச்சைக்கு ரூ.2.5 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏழைகளும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்.தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சியோடு நோயும் அதிகரித்து வருகிறது. எனவே, மருத்துவப் பூங்காவின் திட்டம் நோய்களைத் தடுப்பதில் உதவியாக இருக்கும் என்றார்.மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: தமிழகத்தில் மருத்துவச் சுற்றுலா நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு இங்கு சில லட்சங்கள் செலவாகின்றன. வெளிநாட்டில் அது ரூ.40 லட்சமாக உள்ளது. நல்ல மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வி.கு. சுப்புராஜ்:புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா உள்ளது. தமிழகத்தில் சராசரி ஆயுள்காலம் 70 ஆண்டுகளாக உள்ளது. 50 வயதுக்கு மேல் ஆனவுடனேயே ஏதேனும் ஒரு நோய் வந்துவிடுகிறது. இதனால் வாழ்க்கைத் தரம் மகிழ்ச்சியாக இல்லை. மகிழ்ச்சியுடன் வயது முதிர்ந்த காலத்தைக் கழிப்பதற்கு வழிகாட்டும் அமைப்புகள் இல்லாத நேரத்தில் வயோதிக மேலாண்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் வி.கு.சுப்புராஜ்.மருத்துவப் பூங்காவின் நிறுவனர் ஜெயப்பிரகாஷ், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. திருவாசகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், முன்னாள் துணைவேந்தர் மீர்முஸ்தபா உசேன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

அமைச்சர் அழகிரி ஒவ்வொரு திங்களிலும் 10 முறை தில்லி சென்று வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அப்படியானால் நா.உ.கடமையை ஆற்றாமலா இருந்திருப்பார்? பதிவேட்டில் கையொப்பம் இட்டாலே நா.ம. விற்கு வருகை தந்ததாக விதிமுறை இருக்கும் பொழுது விதிகளுக்கிணங்க அவர் நா.ம.சென்றுள்ளார் என்றே கொள்ள வேண்டும். (ஆனால், விதியை மாற்றுவதே மக்களாட்சியில் நன்மை பயக்கும்.) செய்தியைப் பொறுத்தவரை செயல்படுத்த வேண்டிய பேச்சு. முன்பொரு முறை 10 காசு மாத்திரை 30 உரூபாய் அளவில் விற்கப்படுவதாக நாடாளுமன்றத்திலேயே உரிய அமைச்சர் பேசியிருக்கிறார். எனவே, மருந்துப் பொருள்களின் விலைகளை அடக்கச் செலவிற்கு இணையாகக் குறைத்தாலே நடுத்தர மக்கள் பயனடைய முடியும். பின் மருந்துக் கருவிகள் விலைகளையும் இறக்குமதி வரிகளையும் குறைத்து மருத்துவக் கட்டணங்களையும் குறைக்கச் செய்ய வேண்டும். ஏழ்மையால் ஒருவர் உயிர் இழந்தார் என்னும் நிலை மறைந்து எல்லாரும் நலம் பெறும் எளிய முறையே நிலவ வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/29/2010 11:09:00 AM

ROMMA NALA ALAI KANOM EN MK VATCHA APPU THANGAMUDIALIYA NEE ELLAM DMK LEADER AVURATHUKKU LAYAKKU ILLANU MK SOLLIDARU PESAMA MADURAIKKU POYE KATTA PANCHAYUTU PANNALAM ILLA KALYANA MANDAPATHULA VASOOL PANNALAM INKA VANDU SAMPANDEME ILLAMA THOOKI PIDICHUKITU IRRUKIRE .STALIN VANDALAVADU PORUTHAMA IRRRUKUM BECAUSE HE WILL BE THE NEXT CM AND DMK LEADER. OFO ENGLISHLA ELUTHITTENA ENNA PANNURADU TRY PANNI PADIKKAVUM.

By baski
4/29/2010 10:21:00 AM

Dai Mannaru, As a Chemical Minister he attend this function.

By Muthu-Hong Kong
4/29/2010 10:13:00 AM

Thiru. AZHAGIRIyaare... ! Oru PERIYA SANTHEKAM...THEERTHTHU VAIYUNGA! Neenga , M.L.A.va..? allathu M.P.yaa..? DELLIkkup poi pesunga anne..,unga rasaayanath thurai sambanthamaaka yekappatta kelvinga, vidaiyalikkap padaama kidakku..! Odunga.. odunga..muthal flight pidichchu DELLIkku odunga...? Inge, thamizhnattu vevakaaram ellaam thambi STALIN PAATHTHUKIDUVAARU...

By NilaSundaram
4/29/2010 7:06:00 AM

அண்ணே ரசாயனத்துறைக்கும் இதுக்கும் என்னண்ணே தொடர்பு, உங்களைக் காணலேன்னு டெல்லியிலே அவனவன் மண்டையை பிச்சுக்கிறான் நீங்க என்னடான்னா உங்க துறைக்கு சம்பந்தமில்லாத ஒண்ணைத் தூக்கிப் பிடிச்சுகிட்டு நிக்கிறீங்க!

By வாடா மன்னாரு
4/29/2010 4:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக