திங்கள், 18 அக்டோபர், 2010

மத்திய நிதி ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் சொத்து அல்ல: மன்மோகனுக்கு நிதீஷ் பதில்

பாட்னா, அக். 17: மத்திய நிதி ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் சொத்து அல்ல என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பாஜக மாநிலங்களவைத் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.  ÷பிகாரில் மத்திய திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை. மத்திய நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில் மத்திய அரசின் திட்டங்களால் ஏற்படும் பயன்களை மட்டும் தங்கள் மூலம் வந்ததைப் போல் மாநில ஆட்சியாளர்கள் காட்டிக் கொள்கிறார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியிருந்தார். பிகாரில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் செய்யும்போது அவர் இவ்வாறு கூறினார்.  ÷இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய நிதி ஏதோ காங்கிரஸ் கட்சியின் சொத்து போல பிரதமர் பேசியிருக்கிறார் என்று பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் பாஜக தலைவர் அருண் ஜேட்லியும் கண்டனம் தெரிவித்தனர்.  ÷இங்கு வந்து கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு தில்லிக்கு திரும்பிவிடும் போக்கை பிரதமர் கடைபிடித்து வருகிறார். மத்திய நிதி எந்த வகையில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை அவர் விளக்கிக் கூற வேண்டும். அதற்கு நாங்கள் பதிலளிக்க தயாராக உள்ளோம். இது குறித்து பகிரங்கமாக விவாதிக்கத் தயாராக உள்ளோம். அவரும் தயாரா என்று கேள்வி எழுப்பினர்.  மத்திய திட்டத்தின் பயன்களை மாநில அரசு செய்ததைப் போல் காட்டிக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார். மத்திய நிதி ஒன்றும் காங்கிரஸ் கட்சியின் சொத்து அல்ல. மாநில மக்கள் அளிக்கும் வரிகள் தான் மத்திய அரசின் நிதிக்கு ஆதாரம் என்றனர். ÷மத்திய நிதியிலிருந்து மாநிலங்களுக்கு உரிய நிதியைக் கொடுப்பது மத்திய அரசின் கடமை, அதைக் கேட்டுப் பெறுவது மாநில அரசுகளின் உரிமை என்றார் அருண் ஜேட்லி.  ÷கனிம வளம் மிக்க ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டதால் பிகார் மாநிலத்துக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு அளிக்கும் ரூ. 1000 கோடி நிதியை மாநில அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதில் சிறிதும் உண்மை இல்லை. ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டதை அடுத்து 2002-ம் ஆண்டிலிருந்து பிகாருக்கு ரூ. 1000 கோடி சிறப்பு மத்திய நிதி அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. அத்தோடு இந்த நிதி பயன்படுத்தப்படுவதை கண்காணிக்க அப்போதைய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி. பந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.  ÷திட்டக் கமிஷன் ஆலோசனைப்படி மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இந்த நிதி செலவிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போது பிகாரில் முதல்வராக இருந்த ராப்ரி தேவி அரசு சில ஆட்சேபங்களை எழுப்பியதை அடுத்து இந்த நிதியை பயன்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 2005-ம் ஆண்டில் எனது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த சிறப்பு நிதியை பெற எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன. திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியாவை நான் நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன் பிறகு மத்திய சிறப்பு நிதியை ஒதுக்க வழி ஏற்பட்டது. நிலைமை இப்படி இருக்க, மத்திய நிதியை பிகார் அரசு சரியாகப் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று நிதீஷ்குமார் கூறினார்.  பிரதமருக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரியாதா அல்லது மாநிலம் அரசு மீது மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் கூறினாரா எனத் தெரியவில்லை.  இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமோ அல்லது எந்த காங்கிரஸ் தலைவரிடமோ பகிரங்கமாக விவாதிக்கத் தயார் என்றார் நிதீஷ்.  மேலும் சிறுபான்மையினர் சிறப்பு திட்டங்களுக்கான நிதியையும் மாநில அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். உண்மை என்னவெனில் மதரஸôக்களை மேம்படுத்துவது உள்பட பிகார் அரசு முன்வைத்த சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மத்திய அரசு முழுவதுமாக நிராகரித்துவிட்டது என்று நிதீஷ் குற்றம்சாட்டினார்.  மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வர் நிதீஷ் குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பொருளாதார நிபுணரான பிரதமர் பிகாரின் தற்போதைய பொருளாதார நிலையை ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரியவரும் என்று அருண் ஜேட்லி கூறினார்.      
கருத்துக்கள்

இவ்வாறு அடிப்பொடியன் கோவனுக்கு விடை கூறும் வீரம் நம்மவருக்கு இல்லையே! வேதனைதான். 
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/18/2010 2:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக