சனி, 23 அக்டோபர், 2010


முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால், தேசிய ஒருமைப்பாடு உடையும்: வைகோ

சென்னை, அக். 23: முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு உடைத்தால், அதுவே இந்திய ஒருமைப்பாடு உடைவதற்கு அச்சாரமாகிவிடும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ எச்சரித்திருக்கிறார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பொறியியல் மேதையான பென்னிகுயிக் தன்னுடைய சொத்துகளை விற்று கட்டிய முல்லைப் பெரியாறு அணை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எத்தகைய நில அதிர்வு ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் நேராத வகையில் உறுதியாகக் கட்டப்பட்டுள்ள அணையாகும். இதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இந்தியாவின் வேறு எந்த அணையிலும் கிடையாது. 999 ஆண்டுகளுக்கான தண்ணீர் உரிமை தமிழ்நாட்டுக்கு 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில் போடப்பட்ட ஒப்பந்தத்திலேயே உள்ளது.இந்த அணையை உடைப்பதற்குக் கேரள அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டது. எந்த நேரமும் அந்த விபரீதம் நடக்கலாம். அப்படி நடந்தால் தென் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக - பாலைவனமாக மாறுவதைத் தடுக்கவே முடியாது.அணையின் நீர்மட்டம் 152 அடியாக 1979 வரையில் தமிழகம் பயன்படுத்தி வந்தது. கேரளத்தில் அவர்கள் கட்ட திட்டமிட்ட இடுக்கி அணைக்குத் தண்ணீரைக் கொண்டு போவதற்கு மலையாள மனோரமா பத்திரிகை மூலம் முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் இருப்பதாகப் பொய்ப் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் முன்னிலையில் திருவனந்தபுரத்தில் தமிழ்நாடு-கேரள அரசுகளுக்கு இடையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அணையின் நீர்மட்டத்தைத் தற்காலிகமாக 136 அடியாகக் குறைத்துக் கொள்வது என்றும், அணையை வலுப்படுத்திய பின்னர் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. கேரள அரசு செய்த பல இடையூறுகளையும் மீறி அணை மேலும் வலுப்படுத்தப்பட்டு விட்டது.இதனிடையே இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. உச்ச நீதிமன்ற யோசனையின்படி மத்திய நீர்வளத்துறை ஆணையம் அமைத்த இரண்டு நிபுணர் குழுக்கள் அணையைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தி அணை வலுவாக இருக்கின்றது என்று அறிக்கை சமர்ப்பித்தன.2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளான நீதிபதி சபர்வால், நீதிபதி, தக்கர், நீதிபதி பாலசுப்பிரமணியம் ஆகியோரைக் கொண்ட அமர்வு நீதிமன்றம் முல்லைப் பெரியாறில் தமிழ்நாடு 142 ஆடி வரைக்கும் நீரை உயர்த்திக் கொள்ளலாம். பின்னர் படிப்படியாக தண்ணீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம். இதற்கு எந்த விதத்திலும் கேரள அரசு தடங்கலோ முட்டுக்கட்டையோ போடக்கூடாது என்று தீர்ப்பு அளித்தது.கேரள அரசு சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டி மார்ச் 18-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்குத் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று சட்டத்தை நிறைவேற்றியது. உடனடியாக அடுத்த 14-ஆம் நாள் அ.தி.மு.க. அரசு இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.ஆனால் அதற்கு அடுத்து வந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அணையை உடைப்போம் என்று பேசும் அச்சுதானந்தன் அரசு கேரளத்திலும், தமிழ்நாட்டில் திமுக அரசும் பொறுப்பேற்றன. உச்ச நீதிமன்றத்தில் கேரளம் வழக்கை இழுத்து அடித்து 33 வாய்தாக்களை வாங்கியது. மூன்றரை ஆண்டு காலம் கேரளம் இப்படி வாய்தா கேட்டபோது தமிழ்நாடு அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தமிழ்நாட்டுக்கே நீதி கிடைக்கும் என்ற நிலை இருந்தபோது கேரள அரசு தந்திரத்தோடு வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அமர்விலிருந்து மாற்றி அரசியல் சட்ட அமர்வு மன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று வாதாடியது.தமிழக முதல்வர் கருணாநிதியின் யோசனையின்பேரில் தமிழக அரசின் வழக்கறிஞர் அதற்கு ஒப்புதல் எழுதிக் கொடுத்தார்.  இதையடுத்து, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவுக்கு முதலில் வரவேற்பு தெரிவித்த கருணாநிதி, பின்னர் தன் நிலையை மாற்றிக் கொண்டு குழுவில் தமிழகம் பங்கேற்காது என்று கூறினார். அதன் பின்னர் குழுவிலே பங்கெடுக்கும் என அறிவித்தார்.முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக தெரிவித்த ரூர்கி ஐ.ஐ.டி. குழு அறிக்கையையும் நில அதிர்வு நிபுணர்கள் பால், சர்மா இருவர் அறிக்கையையும் ஐவர் குழு ஏற்க வேண்டும் கேரள அரசு என்று வற்புறுத்துகிறது. தமிழக அரசு அதனை எதிர்த்து உள்ளது. இந்த எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும். கேரளத்தினுடைய இந்த நிபுணர் குழுக்களின் அறிக்கையை ஆனந்த் தலைமையிலான குழு ஏற்குமானால் குழுவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும். முல்லைப் பெரியாறு அணையைக் கேரளம் உடைக்குமானால் இந்திய ஒருமைப்பாடு உடைக்கப்படுவதற்கு அதுவே அச்சாரமாகிவிடும். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்துக்கள்

  இந்தியக் கண்டத்தில் உள்ள வேறு மாநில மக்களுக்கு இவ்வாறு அடுத்த மாநிலத்தால் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டால் வைக்கோ கூறுவது உண்மையாகும். ஆனால், தமிழர் அல்லாதவர்களால் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவுகளையும் 
செயற்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளும் மான உணர்வற்றவர்கள் வாழும் தமிழ் நாட்டில், தம் சொந்த இனம் கொத்துக் குண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் வஞ்சகத்தாலும்
வாழ்விடங்கள் எரிகாடுகளாகவும் 
புதைகாடுகளாகவும் ஆகும் வகையில் 
கொல்லப்பட்டாலும் கிளர்ந்தெழாத தமிழ் நாட்டில் அப்படி ஒன்றும் நடக்காது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 6:19:00 PM
I have been listening to your statements and the speeches you deliver for the last 30 years. Though my mother tongue is not Tamil, I love Tamil for its rich culture and the beautiful language that no other Indian language equalls. You are the one among the few Tamil politicians who could boldy speak and the rest are cowardly and power craving ones. When the Tamils understand the in-depth meaning of your speech, India is doomed. My hats off to you. India needs leaders more of your skill and intelligence unlike the foreign lady who can in noway feel for the poverty ridden Indians.
By Jim Tolstoy
10/23/2010 5:22:00 PM
Rightly said Mr.Vaiko. India will go fragements for what it has been doing for the Tamils especially these 4 and above years. We have had enough. We have lost great leaders like Prabhakaran and Veerapan who had been nightmares for the Indian government and also for the whole world. They could be defeated because of the cowardly war leashed our against the Tamils and with a lot of false promises by the governmnet. Now even the neighbours try to trouble the Tamils. When are we going to teach them? Let the Tamils decide. They will definitely do something that the India will never forget
By John Christopher
10/23/2010 5:16:00 PM
Long Live Mr. Vaiko. One day you will be placed among the greats of the Tamils. If the Tamils had completely backed you, they could have seen much more progress and development than this. Because you are the only one who could speak in the parliament without fear for the Tamils. We don't have people of your calibre in the regional parties. We have some illiterate and goondas in the parliament. That's what the Tamils want now. Because they get free TV, one rupee rice, free cycle. They forget it is worse than begging. When they are going to realise it is their own tax and their own resources, their own assets, that the government is paying them in different way.
By Aishath Adam
10/23/2010 5:11:00 PM
3. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார். அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே. டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69. இப்படிக்கு நட்புடன்
By Velumani.V Mannargudi Thiruvarur
10/23/2010 4:24:00 PM
2.. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி. "கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார். நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை. சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பன
By Velumani.V Mannargudi Thiruvarur
10/23/2010 4:23:00 PM
மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நான் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் நான் படித்த தலைப்புச் செய்திகளே இவை. குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி. தேதி : 10.9.2020 ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார். எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம். வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட
By Velumani.V Mannargudi Thiruvarur
10/23/2010 4:20:00 PM
HE IS THE ONE WHO IS REALLY FIGHTING FOR THE TAMILS. HE SHOULD COME OUT OF THE AIADMK ALLIANCE.
By Ramesh
10/23/2010 3:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக