புதன், 10 மார்ச், 2010

செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா



புறநானூற்றுக் கருத்தரங்கம்
செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா
தமிழ் இலக்கிய ஆய்வுக்கூட்டம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாவது புறநானூற்றுக் கருத்தரங்கமும், செந்தமிழ்க் காவலர் திரு.சி.இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவும், எதிர்வரும் மார்ச் 14, 2010, ஞாயிறு அன்று கொலம்பியா, மேரிலாந்தில் உள்ள மைய நூலகத்தில் (10375, Little Patuxent Pkwy, Columbia, MD 21044) நடைபெற இருக்கிறது. அனைவரும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
2.00-2.05
தமிழ்த்தாய் வாழ்த்து
2.05-2.10
வரவேற்புரை
முனைவர் முத்துவேல் செல்லையா அவர்கள்2.10-2.35
புறநானூறு காட்டும் சங்க காலத் தமிழகம்முனைவர் ஃப்ரான்சிஸ் முத்து அவர்கள், சிகாகோ2.35-3.00
புறநானூறு கூறும் வாழ்வியல் கருத்துகள்உயர்திரு. கு.பெ.வேலுச்சாமி அவர்கள், தமிழாசிரியர், கோவை.3.00-3.25
புறநானூறு காலத்துப் புரவலரும் புலவரும்முனைவர் இர.பிரபாகரன் அவர்கள்3.25-3.45
தேனீர் இடைவேளை3.45-4.05
செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் இலக்குவனார்முனைவர் அரசு செல்லையா அவர்கள்4.05-4.25
தன்மானத் தமிழ் மறவர் இலக்குவனார்பதிவர் பழமைபேசி (எ) மெளன.மணிவாசகம் அவர்கள்4.25-5.25
புறநானூறு - வினா விடை விளக்கம் (பல்லூடக நிகழ்ச்சி)
கருத்தாக்கம்
உயர்திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள்
பாவாணர் அணி
தலைவர் உயர்திரு.கொழந்தைவேல் இராமசாமி அவர்கள்
இலக்குவனார் அணி
தலைவி முனைவர் ஜெயந்தி சங்கர் அவர்கள்
5.25-5.30
நன்றி நவிலல்திருமதி. கல்பனா மெய்யப்பன் அவர்கள்
உலகத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் dinamaninews@rediffmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.

1 கருத்து:

  1. அருமையான செய்தி! ஐன்சுட்டின் பிறந்தநாளாகிய மார்ச் 14 அன்று, செந்தமிழ்க் காவலர் பேரா. இலக்குவனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவதும் ஓர் அருமை. விழா எல்லா வகையிலும் சிறப்பெய்தி, இலக்குவனாரின் நற்புகழ் ஒளிவீசுமாறு அமைய வாழ்த்துகிறேன். அருள்கூர்ந்து நிகழ்படமாகவும் பதிவுசெய்யுங்கள். நல்ல தமிழார்வலர்கள் பேச இருப்பதும் கண்டு பெரு மகிழ்வு!

    பதிலளிநீக்கு