வெள்ளி, 12 மார்ச், 2010

தரை தளத்தில் பணிகள் நிறைவு



புதிய தலைமைச் செயலகத்துக்குள் பொது மக்கள் செல்வதற்கான ("பப்ளிக் பிளாசா') வாலாஜா சாலையில் உள்ள வழி.
சென்னை, மார்ச்10: புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தின் தரைத் தளப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தின் "ஏ பிளாக்' கட்டுமானப் பணிகள் ரூ.450 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. அதில், சட்டப் பேரவைக் கட்டடம் மற்றும் அதன் முதல் தளத்தின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன."ஏ பிளாக்' கட்டடம் முதல்வர் வளாகம், நூலகம், சட்டப் பேரவை, பொது மக்கள் நுழையும் பகுதி என நான்கு வளாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வளாகங்களின் தரைத்தளப் பணிகள் முடிவு பெற்றுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.""வாலாஜா சாலைப் பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியே பொது மக்கள் செல்ல வேண்டும். இது, "பப்ளிக் பிளாசா' என அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியின் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தரைத்தளம் மொத்தமாக ஒரு லட்சம் சதுர அடிப் பரப்பு கொண்டதாகும்'' என்று அதிகாரிகள் கூறினர்.விழாவுக்கு முன்னதாக...: சட்டப் பேரவைக் கட்டட திறப்பு விழா மார்ச் 13-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.விழாவுக்கு முன்னதாக, சட்டப் பேரவைக் கட்டடத்தின் தரை மற்றும் முதல் தளத்தை அழகுபடுத்தும் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இருக்கைகள் தயார்...: சட்டப் பேரவை, பேரவைத் தலைவர் அறை, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டப் பேரவைக் கட்சித் தலைவர்களின் அறைகள் உள்ளிட்டவை பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக தயாராகும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பேரவைத் தலைவர், உறுப்பினர்களின் இருக்கைகளை தயாரிக்கும் பணி ரூ.9 கோடியில் "டான்சி' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ""இருக்கைகளை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மார்ச் 12-க்குள் சட்டப் பேரவையில் உள் அழகுப் பணிகள் அனைத்தும் நிறைவடையும். இதைத் தொடர்ந்து, பேரவைக்குள் இருக்கைகளை போடும் பணிகள் நடைபெறும்'' என அரசுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கருத்துக்கள்

ஏ பிளாக், பப்ளிக் பிளாசா என்றெல்லாம் அழைக்காமல் நல்ல தமிழ்ப்பெயர்களைச் சூட்டுக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar thiruvalluvan
3/12/2010 4:10:00 AM

Don't bring Kamaraj in this context. He was the most dictatorial rascal in Tamilnadu politics. He sent away all the freedom fighters from the Cnogress party uunless they fell at his feet for support. The students who went to work against his election were thrown from upstairs where they were sleeping. This atrocious Kamaraj lost that election, and put an end to Congress rule from Tamilnadu. He was finally kicked out of the Congress party by Indira Gandhi. Kamaraj is anti Tamil. When the name of the state was changed from Madras presidency to Tamilnadu, he did not support it. He is a menace to Tamils.

By ATamil
3/12/2010 3:50:00 AM

அண்ணாதுரை காமராஜர் போன்ற தன்னலம் பெரிதாக்க நினைக்காத மக்களுக்க தன வாழ் நாட்களை செலவிட்ட தலைவர்கள் ஆட்சி seitha இடம் மாறி முரடனும் அரக்கனும் அமர்வதற்கு புதிய சட்டமன்ற கட்டம் தேவை தான்

By Sham
3/11/2010 12:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக