சனி, 2 ஜனவரி, 2010

இலங்கைத் தமிழர் பிரச்னை திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது: வைகோ குற்றஞ்சாட்டு



சென்னை, ஜன.1: "இலங்கைத் தமிழர்களின் உண்மையான பிரச்னை மறைக்கப்படுகிறது. இப்போது அவர்களின் பிரச்னை திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.இது குறித்து அவர் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:2009-ம் ஆண்டு தமிழர்களின் வரலாற்றில் துயர் மிகுந்த ஆண்டு. இலங்கையில் ஒரு மாபெரும் தமிழினப் பேரழிவு நடத்தப்பட்ட ஆண்டு. இது இந்திய அரசின் துணையோடு, இலங்கை அரசு நடத்திய இன அழிப்பாகும்.இப்போது "முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை விடுவித்தாலே போதும்; அதோடு தமிழர்களின் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்' என்பது போல இலங்கை அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு பிரச்னையை திசைதிருப்புகின்றன.இலங்கையில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, அதாவது 1976}ம் ஆண்டிலேயே, "சுதந்திரமான, இறையாண்மை மிக்க தனித் தமிழ் ஈழம்தான்' இலங்கைத் தமிழர்களின் இறுதி இலக்கு என்ற முழக்கம் எழுந்தது.தமிழர்களின் போராட்டத்தை அழித்துவிட்டதாக இலங்கை அரசு புளங்காகிதம் அடைகிறது. ஆனால் தமிழர்களின் தனி ஈழப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. அது நீறுபூத்த நெருப்பாக உள்ளது. மீண்டும் போராட்டம் வெடிக்கும். நிச்சயம் தமிழ் ஈழம் அமையும்.
கருத்துக்கள்

உடனே ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அல்லது ஈழத்தமிழர் விடுதலை உதவி இயக்கம் என ஒன்றை அமைத்து முதற்கட்டமாக இந்தியாவின் பிற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு பிற இனத்தவர், பிற கட்சியினர், பிற மாநிலத்தவர் ஒத்துழைப்புகளையும் பெற்று இந்திய நாட்டைத் தமிழ் ஈழ நட்புறவு நாடாக மாற்றி தமிழ் ஈழ நாட்டைத் தனி அரசாக ஏற்க - அங்கீகரிக்க- நடவடிக்கை எடுங்கள்! உங்களின் சலியா முயற்சி வெல்லட்டும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் அமையும் தமிழ் ஈழக் குடியரசின் குரல் பன்னாட்டு அவையிலும் அனைத்து நாடுகளிலும் ஒலிக்கட்டும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழ் ஈழ - இந்திய நட்புறவு! வாழ்த்துகளுடன் - புத்தாண்டு வாழ்த்துகளுடன் - முன்னதான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:54:00 AM

அன்றும் இன்றும் என்றும் தொடர்கதையாக இந்த அவலம் தொடரத்தான செய்கின்றது. ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டக் கூடி விட்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் சூட்டியபொழுதே அந்த அமைப்பு சறுக்கத் தொடங்கி விட்டதல்லவா? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படட்டும்! உடனே ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அல்லது ஈழத்தமிழர் விடுதலை உதவி இயக்கம் என ஒன்றை அமைத்து முதற்கட்டமாக இந்தியாவின் பிற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு பிற இனத்தவர், பிற கட்சியினர், பிற மாநிலத்தவர் ஒத்துழைப்புகளையும் பெற்று இந்திய நாட்டைத் தமிழ் ஈழ நட்புறவு நாடாக மாற்றி தமிழ் ஈழ நாட்டைத் தனி அரசாக ஏற்க - அங்கீகரிக்க- நடவடிக்கை எடுங்கள்! உங்களின் சலியா முயற்சி வெல்லட்டும்! தமிழ்த் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் அமையும் தமிழ் ஈழக் குடியரசின் குரல் பன்னாட்டு அவையிலும் அனைத்து நாடுகளிலும் ஒலிக்கட்டும்! வாழ்க தமிழ்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழ் ஈழ - இந்திய நட்புறவு! வாழ்த்துகளுடன் - புத்தாண்டு வாழ்த்துகளுடன் - முன்னதான தமிழ்ப் பு

By Ilakkuvanar Thiruvalluvan
1/2/2010 5:53:00 AM

THE VAIKO IS THE ONLY LEADER TO RAISE THE ISSUE OF ELAM TAMIL PEOPLES

By avudaiappan
1/2/2010 5:50:00 AM

Why you not joined to kani mozhi.. you will get what you want..or why you not joined to other family of karunanithy

By dmk tamilan
1/2/2010 5:34:00 AM

we will definetly give RAJYA SABHA SEAT TO YOU vaiko

By TAMILAN ILLAKUVANA
1/2/2010 5:31:00 AM

Vaiko Keep the pressure on central and State. Tamils needs not food and cloths they wants dignity and self government.

By Arichandran
1/2/2010 4:26:00 AM

தமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம் நன்றி வைகோ அவர்களே

By poovalingam
1/2/2010 4:19:00 AM

நன்றி வைகோ அவர்களே நன்றி

By usanthan
1/2/2010 3:23:00 AM

Thank you VIKO

By kumar
1/2/2010 3:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக