சனி, 2 ஜனவரி, 2010

மர்மமான முறையில் கணவன் மனைவி படுகொலை :திடுக்கிடும் தகவல்

01 January, 2010 by admin



தற்போது மீள் குடியேறியுள்ள குடும்பங்களை சோதித்துப் பார்ப்பதற்கும், இதுபோல உண்மையாகவே காட்டில் மறைந்திருக்கும் சில விடுதலை புலிகள் உணவு கேட்டு வந்தால் இவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் எனப் பரிசோதிக்கவே இவ்வாறு இராணுவத்தினர் நடந்துகொண்டதாக அங்கிருந்த சிலர் தெரிவிக்கின்றனர். அத்துடன் உண்மையாகவே விடுதலைப் புலிகள் வந்து உணவு கேட்டால் கூடக் கொடுப்பதற்கு இனி மக்கள் அஞ்சுவார்கள் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

சுமார் 3 நாட்களுக்கு முன்னர் இக் குடும்பம் கொலைசெய்யப்படதாகக் கூறப்படுகிற போதும் இதனைச் சுயாதீனமாக எம்மால் உறுதி செய்யமுடியவில்லை. அதிலும் இவ் விடையம் குறித்து மக்கள் மேலும் கருத்துக்களைத் தெரிவிக்க மறுக்கின்றனர். மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இவ்வாறான பல அசம்பாவிதங்கள் நடைபெறுகின்ற போதிலும் இதுவரை எதுவும் வெளிவராத நிலையிலேயே உள்ளது என்பது குற்பிடத்தக்க விடையமாகும்.

இவ்வாறன செயல்கள் மூலம் ஒரு உளவியல் போரைத் தொடுத்து, மீள் குடியேறிய மக்களை அச்சுறுத்தி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இலங்கை இராணுவம் பகிரங்கமாக முயல்வது தெரிகின்றது.

புலம்பெயர் மக்களின் உறவினர்கள் யாராவது இது குறித்து அறிந்திருந்தால் எமது இணையத்துடன் தொடர்புகொள்ளவும். கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணவன் மனைவி, யார் என்பது பற்றியோ அல்லது அவர்கள் பெயர்விபரங்களோ இன்னும் சரிவரக் கிடைக்கப்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 21384

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக